ரௌடிதான்!

"அந்தப் படத்துல வாய்ப்புத் தாரேன்னு அவரு கூப்பிட்டார்... இந்தப் படத்துல வாய்ப்புத் தாரேன்னு இவரு கூப்பிட்டார்' என பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைச் சொல்லியே... பிரபலமான ஸ்ரீரெட்டி தன்னை ரௌடி என்கிறார்.

sr

""தெலுங்கு நடிகை கல்யா ணியும், ஒரு டான்ஸ் மாஸ் டரும் சேர்ந்து பல இளம்பெண்களோட வாழ்க்கைய சீரழிக்கிறாங்க'' என சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். கல்யாணி கொடுத்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் ஸ்ரீரெட்டி மீது வழக்குப் போட்டிருக்காங்க. ஏற்கனவே பல புகார்கள் ஹைதராபாத் போலீஸ்ல இருக்கு.

""ஒண்ணுமில்லாம மெட்ராஸ் போனவளுக்கு காரு... பங்களா... பணம்... இதெல்லாம் ஏது?'' என கல்யாணி பாய... கல்யாணி தரப்பு மீது சென்னை மாநகர காவல்துறையில் புகார் செஞ்சிருக்கார் ஸ்ரீரெட்டி. இதுபோல பல புகார்களை கொடுத்திருக்கார்.

இந்நிலையில்... "பெண் சிங்கமான தன்னை ஒரு ஆண்சிங்கம்தான் அடக்கணும்... வாங்க டேட்டிங், அவுட்டிங் போகலாம். உறவு வச்சுக்கலாம்' என டைரக்டர் ராம்கோபால் வர்மாவுக்கு வலைப்பக்கத்தில் ஸ்ரீரெட்டி வலைவீச... "இப்படி பகிரங்கமா கூப்பிடுறதா?' என ஸ்ரீரெட்டி மீது புகார் தரப்போறாங்களாம்.

""என்மேல எத்தனை புகார்கள்? எம்புட்டு எஃப்.ஐ. ஆர்.கள். இதுலருந்தே தெரி யலையா?... நானும் ரௌடி தான்... ரௌடி பேபிதான்'' என பதிவிட்டுள்ளார் ஸ்ரீ.

ஸ்ரீரிக்காதீங்க... ரௌடினு சொன்னா நம்பணும்... வாலண்ட்ரியா வந்த வாலிப ரௌடிய்யா...

ஹீரோதான்!

த்ரிஷாவும், விஜய் சேதுபதியும் நடிச்ச "96' படம் சமந்தா-சர்வானந்த் நடிக்க தெலுங்கில் ரீ-மேக் ஆச்சு. ஆனா படம் ஃபெயிலியர் ஆச்சு. இதனால் சமந்தா- சர்வானந்த் மீண்டும் சேர்ந்து நடிக்கவிருந்த படத்திலிருந்து சமந்தாவை நீக்கிட்டாங்க. இணைய தளங்கள்லயும் "ஃபிளாப் நடிகை சமந்தா' என எழுத...

Advertisment

tt

சமந்தா நீக்கப்பட்ட படத்தில் நடிக்க ஒப்பந்த மான "காற்று வெளியிடை' அதிதிராவ்... ""ஒரு படம் ஓடலேன்னா... இப்படியா எழுதுறது? நடிப்பை விமர்சிங்க. வெற்றி- தோல்வியோட நடிகைகளை சம்பந்தப்படுத்தாதீங்க'' என கண்டனம் தெரி வித்தார்.

Advertisment

""நாங்களும் ஹீரோ தான். நடிகைகளும் ஹீரோக்களுக்கு இணையா கஷ்டப்பட்டுதான் நடிக்கி றாங்க. ஒரு படம் ஓடினா அத ஹீரோவோட வெற்றியா பாக்குறாங்க. படம் ஓடலேன்னா... கதாநாயகி தலையை உருட்டுறாங்க. கண்ட்டினியூவா ஃபிளாப் கொடுத்த ஹீரோவுக்கு வாய்ப்புகள் பறிபோறதில்ல... எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி? தோல்விக்கு ஹீரோயின் காரணம்னு சொல்றதா இருந்தா... ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை குடுத்திட்டுச் சொல்லுங்க...'' என அடி வெளுத்திருக்கிறார் சமந்தா.

rr

திருநங்கைதான்!

தினசரி ஏதாவது ஒரு சர்ச்சையில் அடிபட்டுக் கொண்டே இருப்பவர் மீராமிதுன். கிளாமர் என்ற போர்வையில்... ஹாட் படங்களை வெளியிட்டு திகைக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இதற்கு வரவேற்புக்கு இணையான எதிர்ப்பு ஃபாலோயர்களிடம்.

"உங்களைப் பார்த்தா... திருநங்கை போல...' என ஒரு கமெண்ட் வர... கோபமான மீரா... ""ஆமா... நான் திருநங்கைதான். அதுக்கு என்ன இப்போ?' என காண்டாகியுள்ளார்.

நண்பன்தான்!

விஜய்யின் "மாஸ்டர்' படத்தில் "தறுதல' என்கிற பாடல் வரி இடம் பெற்றிருந்தது. இதனால் "தலய தாக்குறாங்க' என நினைத்து அஜித் ரசிகர்கள் விஜய்க்கும் "மாஸ்டருக்கும்' எதிராக பிரச்சாரத்தில் இறங்கி விட்டனர்.

சும்மாவே மோதிக்கிற ரெண்டு தரப்பு ரசிகர்களுக்கு இந்தக் காரணம் போதாதா ரணகளம் பண்ண...

"மாஸ்டர்' ஆடியோவில் கோட்-சூட் அணிந்து கலந்து கொண்ட விஜய் "கோட்-சூட்'டுக்கான விளக்கத்தைச் சொல்லும் போது... "என் நண்பர் அஜித் போல கோட்-சூட் அணிந்ததாக' தெரிவித்தார்.

இதனால்... மோதலைக் கைவிட்டு... இரு ரசிகர்களும் குஷியாக பாராட்டிக்கிறாங்க.

-ஆர்.டி.எ(க்)ஸ்