தமிழ்- தெலுங்கில் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு... பிஸியாக இருந்த ரகுல் பிரீத்சிங்கிற்கு திடீர்னு மார்க்கெட் டல்லு.
என்ன காரணம்?
யோசிச்சு... யோசிச்சு... ரகுலே அதுக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சிருக்கார்.
""கிளாமர் விஷயத்துல லைட்டா இருந்துருக்கணும். ஆனா நான் ரொம்ப ஹெவியா கிளாமர் பண்ணி நடிச்சிட்டேன். சினிமாவுக்கு கவர்ச்சி அவசியம்கிறதுனால நான் கெடுபிடி பண்ணிக்காம நடிச்சிட்டேன்.
கிளாமர்
கேரக்டர்களோட... நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களையும் செஞ்சிருக்கணும். ஆனா, இதையெல்லாம் கவனிக்காம ஓடிக்கிட்டிருந்ததுல... கிளாமர் தூக்கலாயிருச்சு. தொடர்ச்சியா கவர்ச்சி ரோல் பண்ணியதால்... "டக்'குனு பட வாய்ப்புகள் இல்லாமப் போச்சு எனக்கு''
-இப்படி தன்னிலைக்கான காரணங்களை கண்டுபிடித்திருக்கிறார் ரகுல்.
"நான் "வடசென்னை' படத்துல நடிச் சிருக்கவே கூடாது. அதனாலதான் பல வாய்ப்புகளை இழந்திட்டிருக்கேன்'' என வருத்தப்படும் ஆன்ட்ரியா, யோசிச்சு... யோசிச்சு.. இந்த காரணத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்.
"வடசென்னை' படத்தில் மெய்க்கு நிகராக... ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருந்தார் ஆன்ட்ரி.
இது படம் வெளியானபோதே பரபரப்பாக பேசப்பட்டது.
இப்போது... அவரைத் தேடி வரும் வாய்ப்பு களெல்லாம் "வடசென்னை' படத்து "சந்திரா' மாதிரி ஒரு கேரக்டர்... என மென்ஷன் பண்ணியே வருவதால் எரிச்சலாகியிருக்கிறார்.
""எல்லா வாய்ப்பும் அப்படி கிளாமர் ரோலா வர்றதால் நடிக்க மறுத்திட்டேன். அந்த முத்திரையை உடைக்கணும். அதுக்கு மாறுபட்ட கேரக்டர்ல நடிக்கணும். மாறுபட்ட கேரக்டர்களுக்காக என் சம்பளத்தையே குறைச்சிருக்கேன்'' என ஓவர் கவர்ச்சியின் விளைவுகளைச் சொல்லியிருக்கிறார் ஆன்ட்ரி.
""நான் சினிமாவை விட்டுட்டு எங்க நாட்டுக்கே போறேன்'' என இங்கிலாந்து கிளம்பி விட்டார் நிகிஷா படேல். (நிகிஷாவின் பூர்விகம் குஜராத். அவர் பிறந்து வளர்ந்தது லண்டன்)
""இந்திய சினிமாவில் பெரிய ஹீரோயினா ஆகணும்னுதான் வந்தேன். ஸ்டைலா நடிச்சுப் பார்த்தேன். பிரயோஜனமில்லை. பக்கா கவர்ச்சியா நடிச்சேன்... பிரயோஜனமில்லை. என்னோட கடின உழைப்பு வீணானதுதான் மிச்சம். லண்டன்ல இப்ப ஆக்டிங் கிளாஸ் போனபடியே பிரிட்டிஷ் படங்கள்ல நடிக்க சான்ஸ் தேடிக்கிட்டிருக்கேன்...'' என அறிவித்துள்ளார் நிகிஷா.
-ஆர்.டி.எ(க்)ஸ்