டந்த பிப்.19 அன்று... சென்னையை அடுத்த இ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் நடந்த ‘"இந்தியன் -2'’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் செக்ஷன் சந்திரன், புரொடக்ஷன் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த மாது ஆகிய மூன்றுபேர்கள் இறந்த சோகம் இன்னமும் இண்டஸ்ட்ரியை வாட்டிக்கொண்டிருக்கிறது.

tt

இந்த விபத்து ஏற்பட்டதற்கு பலரும் பலவித காரணங்களைச் சொல்லிவருகிறார் கள். படத்தின் ஹீரோ கமல்... இந்த விபத்திற் கான முழுப் பழியையும் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்தின் மீது சுமத்தினார். லைகா நிறுவனமோ... "கமலும் முக்கிய காரணம்...' என பதிலடி தந்துள்ளது. இது இண்டஸ்ட்ரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இ.வி.பி. ஸ்டுடியோ முன்பு பொழுது போக்கு பூங்காவாக இருந்தபோதே... ராட்டினத்தில் விளையாடிய ஒரு விமான பணிப்பெண் உயிரிழந்தார். அதனால் பூங்கா மூடப்பட்டு, பிறகு ஸ்டுடியோ ஆனது. இந்த ஸ்டுடியோவில் ரஜினி நடித்த "காலா'’படப்பிடிப்பு நடந்தபோது இரு தொழிலாளர்கள் உயிரிழந் தனர். கலைக்கப்படாமல் இருந்த "காலா'’ மும்பை தாராவி செட் தீப்பிடித்தது. விஜய்யின் "பிகில்'’படப்பிடிப்பின்போது கிரேனிலிருந்து போகஸ் லைட் விழுந்து படுகாயமடைந்த ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இப்போது "இந்தியன்-2'’ படப்பிடிப்பில் மூன்று உயிர்கள் பறிபோய்விட்டன. "படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் கடினமான எக்யூப்மெண்ட்ஸ்களை தாங்கும் அளவுக்கு அந்த ஸ்டுடியோவின் மண் வளம் உறுதியானதாக இல்லை'’என்கிற குற்றச்சாட்டு பொதுவாக சொல்லப்படுகிறது.

Advertisment

"பொதுவாக சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் கிரேனை பயன்படுத்தாமல்... தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அதிஉயரமான கிரேன்களை பயன்படுத்தியதுதான் விபத்திற்குக் காரணம்...'’என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தொழில்நுட்ப ரீதியான காரணத்தைச் சொன்னார். மிகஉயரமான கிரேனின் அதிகப்படியான போகஸ் லைட்ஸ்களை கட்டித் தொங்கவிட்டதும்... "ஆங்கிளுக்குத் தேவையான படி கிரேனை நகர்த்தும்போது, எடையை குறைத்துவிட்டு நகர்த்தாமல் அப்படியே நகர்த்தியதும்தான் காரணம்'’எனவும் ஒரு காரணம் சொல்லப்பட்டது.

" "பிகில்'’படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தையும், அதில் ஒரு தொழிலாளி படுகாயமடைந்ததையும் நேரில் பார்த்த... அந்தப் படத்தின் நடிகைகளுள் ஒருவரான ’"சிங்கப்பெண்ணே'’அம்ரிதா தனது சமூக வலைப்பக்கத்தில் " "இந்தியன்-2'’படப்பிடிப்பில் நடந்தது துயரமான சம்பவம்'’எனக் குறிப்பிட்டதோடு....

" "பிகில்'’பட ஷூட்டிங் நடந்தபோது இதேபோன்று விளக்கு ஒருவர் மீது விழுந்தது. அதை பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அங்கு நிறைய நெகட்டிவ் வைப்ஸ்... (எதிர்மறை அதிர்வுகள்) உள்ளது'’என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

இப்படி பலவித காரணங்கள் சொல்லப்பட்டுவரும் நிலையில்... 22-02-2020 தேதியிட்டு கடிதம் ஒன்றை லைகா நிறுவனத்திற்கு அனுப்பினார் கமல். அதில் அவர் குறிப்பிட்டிருந்த முக்கியமான விஷயம்...

""படப்பிடிப்பில் நம்முடன் சிரித்துப் பேசி... பணியாற்றிக் கொண்டிருந்த சிலர் இப்போது இல்லை. மயிரிழையில் நான் உயிர் தப்பினேன். படப்பிடிப்பின்போது நாயகன் முதல் கடைநிலை ஊழியன்வரை அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால்... அதற்கு முழுப்பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனமே ஏற்கவேண்டும்''’என எழுதியிருந்தார்.

tt

27-ஆம் தேதியிட்டு கமலுக்கு லைகா நிறுவனம் அனுப்பிய கடிதத்தில்...

""விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், உடனடியாக சென்னை வந்து அஞ்சலி செலுத்திய லைகா நிறுவனர் சுபாஷ்கரன், உயிரிழந்தோரின் இறுதிச் சடங்கிற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்ததுடன்... மூன்று கோடி ரூபாய் நிதியையும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அளித்தார். உங்கள் கடிதம் கிடைப்பதற்கு முன்பாகவே இதைச் செய்துவிட்டோம். ஆனால்... இது உங்களின் கவனத்திற்கு வராதது துரதிர்ஷ்டமே.

இந்த விபத்து எதிர்பாராமல் நடந்தது. இதற்கான பொறுப்பு உங்களுக்கும், ஷங்கருக்கும் உள்ளது. அனுபவம் நிறைந்த மூத்தகலைஞரான நீங்களும், டைரக்டர் ஷங்கரும்தான் படப்பிடிப்பு தளத்தில் கேப்டன்ஷிப்பாக இருந்தீர்கள். அதனால் பாதுகாப்பு விஷயத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என நாங்கள் நம்பினோம். முழுப் படப்பிடிப்பும் உங்கள் இருவரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இதைச் சொல்வதற்கு எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. படப்பிடிப்புக் குழுவின் எல்லாத் தொழிலாளர்களுக்கும் காப்பீடு செய்துள்ளோம்''’என சுட்டிக்காட்டியுள்ளது லைகா.

அன்றைய சினிமாவில் ‘"முதலாளி'’ என்று அழைக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு, இன்றைய சினிமாவில் அப்படியொன்றும் பெரிய மரியாதை இருப்பதில்லை. “கதை விஷயத்தில் டைரக்டரின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது’என்றும், "பட்ஜெட் பணத்தை கொடுத்திட்டு நீங்க உங்க வேலையைப் பாருங்க. ஃபர்ஸ்ட் காப்பி எடுத்துக் கொடுத்திடுறோம்'’என தயாரிப்பாளரை ஷூட்டிங் ஸ்பாட் பக்கமே வரவிடாத போக்கும்தான் இப்போது இருக்கிறது.

லைகாவிடம் பட்ஜெட் தொகையை மட்டும் வாங்கிக்கொண்டு ஷங்கரே முடிவெடுத்து படப்பிடிப்பை நடத்தியதால்... இவர் மீது லைகா அழுத்தமாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.

"விபத்து என்பது தவிர்க்க முடியாது என்றாலும்... முன்னெச்சரிக்கையாக சீட் பெல்ட்டும், ஹெல்மெட்டும் அணிவதுபோல சில முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். "பிகில்'’படப்பிடிப்பின்போது கிரேனிலிருந்து பாரம் தாங்காமல் லைட் அறுந்துவிழுந்து ஒரு உயிரிழப்பு ஏற்பட்டபோதே பாடம் கற்றிருக்க வேண்டும். ஆனால் அலட்சியத்தால்... இப்போது மூன்று உயிர்கள் போயிருக்கிறது.

ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டுக்கொண்டிருப்பதைவிட... இருதரப்புமே தங்களின் பொறுப்பை உணரவேண்டும் இனியாவது...' என்பதே சினிமா வட்டாரத்தின் எதிர்பார்ப்பு.

-ஆர்.டி.எக்ஸ்