டூரிங் டாக்கீஸ்! வில்லங்க ரீல்!

tt

"டாக்டருடன் டேட்டிங் போனால்... அதன் அனுபவம் என்னவாக இருக்கும்?' என கவர்ச்சி நாயகி ராசி கன்னா.. பேட்டியளித்துக் கொண் டிருந்தபோது, அருகே இருந்த விஜய் தேவர கொண்டா ""ராசி கன்னாவின் மார்பை... அந்த டாக்டர் மார்பாக பார்க்கமாட்டார். மருத்துவ ரீதியாக 'Upper Thorak'' ஆகத்தான் மார்பு களைப் பார்ப்பார்'' எனச் சொல்லி... ஏரியாவை கலகலப்பாகவும், கடுகடுப்பாகவும் ஆக்கியிருக்கிறார்.

tt

சிவகார்த்திகேயன் "டாக்டர்' என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன் தனுஷ் நடிப்பில் "டாக்டர்ஸ்' என்கிற படத்தை எடுக்கத் தொடங்கினார் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா. டாக்டர்கள் சங்கம்

"டாக்டருடன் டேட்டிங் போனால்... அதன் அனுபவம் என்னவாக இருக்கும்?' என கவர்ச்சி நாயகி ராசி கன்னா.. பேட்டியளித்துக் கொண் டிருந்தபோது, அருகே இருந்த விஜய் தேவர கொண்டா ""ராசி கன்னாவின் மார்பை... அந்த டாக்டர் மார்பாக பார்க்கமாட்டார். மருத்துவ ரீதியாக 'Upper Thorak'' ஆகத்தான் மார்பு களைப் பார்ப்பார்'' எனச் சொல்லி... ஏரியாவை கலகலப்பாகவும், கடுகடுப்பாகவும் ஆக்கியிருக்கிறார்.

tt

சிவகார்த்திகேயன் "டாக்டர்' என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன் தனுஷ் நடிப்பில் "டாக்டர்ஸ்' என்கிற படத்தை எடுக்கத் தொடங்கினார் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா. டாக்டர்கள் சங்கம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. காரணம்... அந்தச் சமயத்தில் தனுஷின் படங்கள் கிளுகிளுப்பு டைப்பாக இருந்ததுதான்.

ஆத்திரமான கஸ்தூரிராஜா... செக்ஸ் டாக்டர் பிரகாஷ் வழக்கை உதாரணம் காட்டி... "செக்ஸ் டாக்டர்னு கூட படம் எடுப்பேன்' என்றார். இருப்பினும் அந்தப் படம் கைவிடப்பட்டது.

அந்தப் படத்திற்காக தனுஷ் போஸ் கொடுத்திருந்த பாணியையும், ஆங்கிலப் பட போஸ்டர் ஒன்றையும் மிக்ஸ்பண்ணி சிவகார்த்தி யின் "டாக்டர்' போஸ்டர் உருவாக்கப்பட்டி ருப்பதாக பரப்பிவருகிறார்கள்.

இதற்கிடையே தனுஷ்-டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் "ஜகமே தந்திரம்' பட மோஷன் போஸ்டர் ஒன்றில்... தனுஷ் தன் கூட்டாளிகளுடன் விருந்துண்ணும் காட்சி உள்ளது. இந்தக் காட்சி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகியவை... லியானர்டோ டாவின்சியின் புகழ்பெற்ற ஓவியங்களுள் ஒன்றான "இயேசுவின் கடைசி விருந்து' ஓவியத்தை வைத்து எடுக்கப் பட்டிருப்பதாக.... பதிலடி பரப்பிவருகிறார்கள்.

""நானும் டைரக்டர்தான், நானும் நடிகன்தான், நானும் தயாரிப்பாளர்தான், நானும் விநியோகஸ்தர்தான்... எல்லா சங்கத்திலயும் நானும் மெம்பர்தான். "தர்பார்' நஷ்ட விஷயத்துல விநியோகஸ்தர்கள் மீது போலீஸ் புகார் கொடுத்ததோட... வழக்குப் போட்டிருக்க ஏ.ஆர்.முருகதாஸுக்கு எதிரா நடவடிக்கை எடுப்போம்'' -இப்படி சென்னை -செங்கை -காஞ்சி மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ஆர். சீறியிருந்தார். இயக்குநர் சங்கத்திற்கும் விநியோகஸ்தர்கள் சார்பில் அழுத்தம் தர... உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார் முருகதாஸ். முருகதாஸை கண் டித்து, வழக்கை வாபஸ் பெற அனுமதித்தது உயர்நீதிமன்றம்.

tt

பாரதிராஜாவின் "தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை' அமைப்பின் முக்கியஸ்தராக இருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சிக்கும், சிம்புவுக்கும் "மாநாடு' படம் தொடங்குவது சம்பந்தமாக இரண்டு வருட இழுபறி ஏற்பட்டது. இடையில்... "படத்தை கைவிடுவதாகவும்' தயாரிப் பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. பிறகு நடந்த பஞ்சாயத் தில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர்... "சிம்பு கால்ஷீட் தருவார்' என உறுதியளித்தும்... சிம்பு சுணக்கமே காட்டிவந் தார். இப்போது... பாரதிராஜா தலையிட்டு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் "மாநாடு' படத் துக்கு பூஜை போட்டாச்சு. வெங்கட்பிரபு இயக்குகிறார்.

சென்னையில் ஷூட்டிங் வைத்தால் சிம்பு சொதப்புவார் என்பதால் ஒருமாத ஃபர்ஸ்ட் ஷெட்யூல் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்துகிறார்கள்.

""விஜய் மட்டும்தான் பெரும்பாலும் சென்னை யில் ஷூட்டிங் நடத்துறார். மத்த ஹீரோக்கள் ஏதாவது காரணம் சொல்லி வெளி மாநிலங்களிலேயே முழு படப்பிடிப்பையும் நடத்து றாங்க. இதனால தமிழக சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுறாங்க...'' என ஏற்கனவே கவலைப்பட்டார் ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி.

அவரின் கவலைப் பட்ட பெருமூச்சின் சூடு ஆறுவதற்குள் சிம்பு படப்பிடிப்பு ஹைதராபாத்தில்!

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn220220
இதையும் படியுங்கள்
Subscribe