விக்ரம் நடித்து வரும் "கோப்ரா' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி யிருந்த மலையாள சினிமாவின் இளம் நடிகர் ஷேன் நிகம்... அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

சீனு ராமசாமி இயக்கத் தில் ஹீரோவாக நடிக்க விருந்த படத்திலிருந்தும் நீக்கப் பட்டிருக்கிறார் ஷேன்.

ஏன்?

தலைமுடி பிரச்சினைதான்.

Advertisment

மலையாளத் தில் "வெய்யில்' படத்தில் ஹீரோவாக... மிக நீண்ட சுருள் தலைமுடியுடனும், தாடியுடனும் நடித்து வந்த ஷேன்... பாதிப் படத்தின் படப்பிடிப்பு மட்டுமே முடிந்த நிலையில் படக்குழுவிடம் தெரிவிக்காமலேயே முடிவெட்டி விட... பஞ்சாயத்தானது.

""தயாரிப்பாளர்கள் மனநலம் பாதிக்கப் பட்டவர்கள்'' என ஷேன் கமெண்ட் பண்ண... அவர் நடித்துக் கொண் டிருந்த இரண்டு படங் களும் கைவிடப்பட் டன.

கூடவே நஷ்ட ஈடும் கேட்டனர் தயாரிப்பாளர்கள்.

Advertisment

ஏழு கோடி நஷ்ட ஈடு கோரி நடந்த பஞ்சாயத்தில் "ஒரு கோடி நஷ்டஈடு' என நடிகர் சங்கம் மூலம் பேசி முடி வெடுக்கப்பட்டது. ஆனால் அந்த நஷ்டஈடை இன் னும் செட்டில் பண்ணாததால்... ஷேன் நடிக்க தடை போட் டுள்ளனர். மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழ்ப்படங்களிலிருந்தும் நீக்கப் பட்டுள்ளார் ஷேன்.

"கொடி'யில் தனுஷுடன் கூடி ஆடிய அனுபமா பரமேஸ்வரனுக்கு தனித்தன்மையே... அவரின் அலை அலையாய் பாய்ந்த சுருள் முடிதான்.

ஆனால்... சுருள்முடி யை பியூட்டி சலூனில் கொடுத்து நேராக்கினார்.

இதனால் ரசிகர் களுக்கு வருத்தம்.

இதற்கு நேர்மாறாக தனது நேரான... சீரான தலைமுடியை... ஆள் வச்சு... அதாவது... கூந்தல் நிபுணர் களை வச்சு... சுருள் முடியாக மாற்றியுள்ளார் ரைசா வில்சன்.

"மகாபாரதம்' மீண்டும் ஒருமுறை படமாகிறது. இந்த புராணக் கதையில் திருப்பத்தை ஏற்படுத்துவது "பாஞ்சாலி சபதம்'தான்.

தன்னை அவமானப்படுத்திய துரியோதன சபையில்... தன் விரிந்த கூந்தலை முடியாமலே சபதம் போடுவாள். பாஞ்சாலியாக நடிக்கவிருப்பது தீபிகா படுகோனே. இதற்காக கூந்தலை நீளமாக வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் தீபி.

இளஞ்சூட்டில் எண்ணெய்யை காய வைத்து அதை மயிர்க்கால்களுக்குள் செலுத்தி மசாஜ் செய்வதுதான் தீபியின் ட்ரீட்மெண்ட்.

dd

"கபாலி' ராதிகா ஆப்தே நீச்சல் குளத்தில் நீராடி கவர்ச்சியான தோற்றத்தில் உள்ள புகைப்படத்தை தனது வலைப் பக்கத்தில் வெளியிட்டு கேள்வி ஒன்றையும் ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

இடுப்புவரை நீண்டிருக்கும் தனது கூந்தலை முன்புறமாக தூக்கிப் போட்டி ருக்கும் ராதிகா... "என் தலைமுடியை இன் னும் வளர்க்கணுமா?' எனக் கேட்டுள்ளார்.

""பெண்கள் கிராப் சிகை வைத்துக் கொள்ள வேண்டும்'' என மகளிர் சுதந்திரத் துடன் உளவியல் ரீதியாக கூந்தலை இணைத்து கருத்துச் சொன்னார் பெரியார்.

(சொல்லலைனு சொல்லிராதீங்க... சொல்லிருக்கார்).

சிகை அலங்காரத்தின் ஒவ்வொரு வகையும் காமம், காதல், ஞானம், பக்தி... என ஒவ்வொன்றுடன் தொடர்புடையதாக இருக்கு.

ஆனா... கிராமங்கள்ல சாமி கும்பிடு றதுக்காக முளைப்பாரி வளர்க்கிற மாதிரி சுத்தி ஷாட்டா... நடுவுல நீட்டமா ஹேர் ஸ்டைல் வச்சிருக்காங்களே லேட்டஸ்ட் டா... அதுதான் டெரரா இருக்கு.

-ஆர்.டி.எ(க்)ஸ்