டூரிங் டாக்கீஸ்! "தர்பார்' பஞ்சாயத்து!

tt

"கள்ளக்குறிச்சி கதைத் திருடன்' என அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகை, ஏ.ஆர்.முருகதாஸுக்கு பட்டம் சூட்டுகிற அளவிற்கு... முருகதாஸின் திரைப்படங்கள் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கும். அதிலும் "சர்க்கார்' கதைத் திருட்டு சர்ச்சையில் ரொம்பவே சிக்கினார்.

முருகதாஸ் படப்பிடிப்பை தொடங்கும்போதே... சர்ச்சையும் தொடங்கிவிடும் நிலையில்... "தர்பார்' படத்திற்கு மட்டும் கதை சர்ச்சை கிளம்பவில்லை.

பொதுவாக முருகதாஸ் படங்களில் இருக்கும் "நெட்வொர்க்' எனப்படும் முக்கிய அம்சம் "தர்பாரி'ல் இல்லை. அதனால் "தர்பார் கதை நானே சொந்தமாக எழுதின கதை' என முருகதாஸ் சொல்வது போல மீம்ஸ் போட்டு கலாய்த்தனர்.

கதை சர்ச்சையில் சிக்காத "தர்பார்' வேறு, வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.

ரஜினி -நயன்தாரா -ஏ.ஆர்.முருகதாஸ் -லைகா புரொடக்ஷன்ஸ் என பிரமாண்ட கூட்டணியில் உருவான "தர்பார்' தங்க

"கள்ளக்குறிச்சி கதைத் திருடன்' என அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகை, ஏ.ஆர்.முருகதாஸுக்கு பட்டம் சூட்டுகிற அளவிற்கு... முருகதாஸின் திரைப்படங்கள் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கும். அதிலும் "சர்க்கார்' கதைத் திருட்டு சர்ச்சையில் ரொம்பவே சிக்கினார்.

முருகதாஸ் படப்பிடிப்பை தொடங்கும்போதே... சர்ச்சையும் தொடங்கிவிடும் நிலையில்... "தர்பார்' படத்திற்கு மட்டும் கதை சர்ச்சை கிளம்பவில்லை.

பொதுவாக முருகதாஸ் படங்களில் இருக்கும் "நெட்வொர்க்' எனப்படும் முக்கிய அம்சம் "தர்பாரி'ல் இல்லை. அதனால் "தர்பார் கதை நானே சொந்தமாக எழுதின கதை' என முருகதாஸ் சொல்வது போல மீம்ஸ் போட்டு கலாய்த்தனர்.

கதை சர்ச்சையில் சிக்காத "தர்பார்' வேறு, வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.

ரஜினி -நயன்தாரா -ஏ.ஆர்.முருகதாஸ் -லைகா புரொடக்ஷன்ஸ் என பிரமாண்ட கூட்டணியில் உருவான "தர்பார்' தங்களுக்கு பெரும்நஷ்டம் ஏற்படுத்தியிருப்பதாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர்.

"தர்பார்' படத்தை தமிழக திரை யரங்குகளில் வெளியிடும் உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு சுமார் 25 கோடி ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

நஷ்டத்தை சரிக்கட்டச் சொல்லி விநியோகஸ்தர்கள் ஒரு குழுவாக... லைகா நிறுவன அலுவலகம் சென்றனர்.

tt

லைகா நிர்வாகிகளோ... ""மினிமம் கியாரண்டி முறையில்தான் உங்களுக்கு ஏரியா விற்றோம். ஒப்பந்தப்படி... நாங்கள் பணம் திருப்பித் தரவேண்டியதில்லை. ஜனவரி 9-ந் தேதி வெளியான படம் 13-ந்தேதி இரவு நிலவரப்படி 150 கோடியை வசூலித்தது. ஆனால் அதன்பிறகு வசூல் சரியில்லை என்பதை நாங்களும் கேள்விப்பட்டோம். எங்களுக்கு சுமார் 70 கோடி ரூபாய் வரை நஷ்டம்தான் ஏற்பட்டிருக்கிறது இந்தப் படத்தால். ரஜினி சாருக்கு 100 கோடி ரூபாயும், முருகதாஸுக்கு 30 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுத் துள்ளோம். எங்க சாரும் (லைகா உரிமையாளர் சுபாஷ்கரன்) நஷ்டமடைந்திருந்தாலும் உங்கள் பிரச்சினையை சாரிடம் தெரியப்படுத்துறோம். நீங்கள் ரஜினி சாரிடமும், முருகதாஸிடமும் நஷ்டத்தை சரி செய்யச் சொல்லி கேளுங்கள்'' எனச் சொல்லிவிட்டனர்.

இதையடுத்து முருகதாஸை சந்திக்கச் சென்றனர். ஆனால் அவரின் அலுவலக ஊழியர்கள், விநியோகஸ்தர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

ஏற்கனவே... தான் நடித்துத் தயாரித்த "பாபா', தான் நடித்த "குசேலன்' மற்றும் "லிங்கா' படங்களில் விநியோகஸ்தர்களுக்கு உண்டான நஷ்டத்தை ஈடுகட்டியிருந்தார் ரஜினி. அதனடிப்படையில் ரஜினியை அவரது வீட்டில் சந்திக்கச் சென்றனர் விநியோகஸ்தர்கள்.

ஆனால் "பெரியார்-ராமர்-சேலம்' சர்ச்சையில் ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி வீடிருக்கும் தெருவுக்குள் நுழைய விநியோகஸ்தர் கள் அனுமதிக்கப் படவில்லை.

"ராகவேந்திரா கல்யாண மண்ட பத்தில் இருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரிடம் உங்கள் பிரச்சினையை எழுத்துப்பூர்வமாகத் தரலாம்' என பொத்தாம் பொதுவாக ஒரு தகவல் வர... மண்டபம் சென்றனர் மனுவோடு. ஆனால், மனுவை வாங்க மறுத்துவிட்டார் சுதாகர்.

இதனால் டென்ஷனான விநியோகஸ்தர்கள் கூட்டம் கோபத்தோடு மீண்டும் முருக தாஸை சந்திக்கச் சென்றது. விஷயமறிந்த முருகதாஸ் ஆபீஸ் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தர... போலீஸார் வந்து விநியோகஸ் தர்களை மறித்துவிட்டனர்.

இந்த பதட்டமான சூழலில்தான் "முப்பதுக்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே என் அலுவலகத்திற்கும் வீட்டிற் கும் தகுந்த போலீஸ் பாது காப்பு வழங்க உத்தரவிட வேண் டும்' என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார் முருகதாஸ். காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

இன்னொரு புறம்...

""ரஜினி யையும் முருக தாஸையும் நஷ்டஈட்டுக் காக கார்னர் பண்ணுவது சரியல்ல... வேண்டு மானல் பெரிய சம்பளம் வாங்கிக் கொண்ட ரஜினி யிடமும், முருகதாஸிட மும் ஒரு தொகையை விட்டுக்கொடுக்கும்படி லைகா நிறுவனம் கேட்க லாம். அப்படி கேட்கவும் நியாயம் உள்ளது'' என்கிறார்கள்.

மூன்றாவது கோணத்தில் இதைப் பார்ப்பவர்களோ...

""ரஜினிக்கு தரப்படும் அரசியல் நெருக்கடி இது... "விநியோகஸ்தர்கள் முறை யிட்டால் "தர்பார்' பிரச்சினையில் அரசு உதவும்' என அமைச்சர் கடம்பூர் ராஜு சொல்லியிருக்கிறார்.

""ரஜினி தமிழ் மண்ணில் வாழலாம்; ஆள நினைக் கக்கூடாது' என ரஜினியின் அரசியலுக்கு எதிர்ப்புக் காட்டிவரும் பாரதிராஜா வையும் "தர்பார்' விநியோகஸ் தர்கள் சந்தித்திருக்கிறார்கள். அதனால... இதுல அரசியல் இருக்கு'' என டவுட் படுகிறார்கள்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn080220
இதையும் படியுங்கள்
Subscribe