நேற்று
பெங்களூருவைச் சேர்ந்த ஷனம் ஷெட்டி 2011-ல் வெளி யான "அம்புலி' தமிழ்த் திரைப் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இலங்கையைச் சேர்ந்த தர்ஷன், கோலிவுட்டில் மாட லிங் மற்றும் சினிமா நடிகராக வளர்ந்துவந்தார். அவரின் வளர்ச்சிக்குத் தேவையான பல உதவிகளை பொருளாதார ரீதியாக செய்தார் ஷனம்.
இருவர் நட்பு... காதலாகி கடந்த ஆண்டு திருமண நிச் சயதார்த்தமும் நடந்தது. இந்நிலையில் "பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் தர்ஷன். இந்த பாப்புலாரிட்டியால் ஷனம் மீதான ஈர்ப்பு தர்ஷனுக்கு குறைந்தது. ""நான் அதிகமாக எதிர்பார்ப்பு வைக்கவில்லை. ஆனால் தவறான நபரிடம் எதிர்பார்ப்பு வைத்துவிட்டேன்'' என சூசகமாக தர்ஷனை தாக்கினார் ஷனம்.
இன்று
தர்ஷன் தன்னை காதலித்து, நிச்சயதார்த்தம் செய்த பிறகு... இப்போது தனக்குத் துரோகம் செய்திருப்பதாக... தர்ஷன் மீது நடவடிக்கை கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ஷனம்.
""அபிராமிக்கு (பிக்பாஸ் போட்டியாளர்) தர்ஷன் மீது காதல். இதை நான் தட்டிக் கேட்டபோது... என்னை மனநலம் சரியில்லாதவள் என அபிராமி சொன்னாள். பிறகு ஷெரீன் மீது தர்ஷனுக்கு காதல் வந்தது. ஆனால் தர்ஷனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதால் ஷெரீன் ஒதுங்கிக்கொண்டார். நான் தர்ஷனுக்காக 15 லட்ச ரூபாய் வரை செலவு செஞ்சிருக்கேன். நானும் அவனும் "ஒண்ணா' வாழ்ந்திருக்கோம். என்னையே அவனுக்குத் தந்திருக்கேன். இப்ப என்னையே ஏமாத்துறான்'' என ஷனம் விசனம் ஆகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/darshan.jpg)
""சினிமாவில் கூட நடிக்கிற நடிகர்களோட ஷனத்துக்கு கள்ளத்தொடர்பு இருக்கு. ஒரு நிகழ்ச்சியில தன்னோட முன்னாள் காதலன் கூட நைட்ல இருந்திருக்கா. என்னோட ஆரம்ப காலத்துல ஷனம் எனக்குச் செஞ்ச உதவியை நான் மறக்கமாட்டேன். ஆனா தப்பான பொண்ணு. அவளை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?'' என தர்ஷன் தவிக்கிறார்.
""நான் சிம்புகூட "மகா' படத்துல நடிக்கிறேன். அவர் கூட போட்டோ எடுத்து இன்ஸ்டாவுல போட்டேன். இதவச்சு என்னை சந்தேகப்படுறான் தர்ஷன்'' என சிம்புவின் தலையை உருட்டுகிறார் ஷனம்.
""ஷனத்தோட கேரக்டர் எப்படிப்பட்டதுங்கிறதுக்கு என்கிட்ட ஆதாரங்கள் இருக்கு. ஷனம் என்மீது கொடுத்திருக்க புகார்மேல விசாரணை நடத்தும் போது... என்கிட்ட இருக்க ஆதாரங்களை போலீஸ் கமிஷனரிடம் கொடுப்பேன்'' என பதிலடி தருகிறார் தர்ஷன்.
அன்று
2011-ஆம் ஆண்டு வெளியான "அம்புலி' படத்தின் மூலம்தான் காதல் ஜோடியாக அஜய்-ஷனம்ஷெட்டி இருவருமே அறிமுகமானார் கள். இருவருமே பெங்களூருக்காரர்கள். "அம்புலி' படப்பிடிப்பு நடந்தபோது ஷனத்தின் மேல் அஜய்க்கு காதல்.
அஜய்யின் காதல் ஒருதலைக் காதல் என்றும், அஜய்யின் காதலை ஏற்றுக்கொண்ட ஷனம், அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில்... "சினிமாவில் முன்னேறணும்... இப்போ தைக்கு காதல் வேண்டாம்' என அஜய்யை நிரா கரித்தார் என்றும் இருவிதமாகச் சொல்லப்பட்டது. காதல் தோல்வியை தாங்க முடியாமல் அஜய் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அஜய்யின் மறைவுக்குப் பிறகுதான் "அம்புலி' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தர்ஷனும் இலங்கையில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், சென்னை வந்து ஓரளவு பிரபலமாகத் துவங்கியதும் அந்தப் பெண்ணை கழற்றிவிட்டதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
நாளை
நாளை நடப்பதை யாரறிவார்?
ஆனா ஒண்ணு... "காதல் தோல்வியால வாழ்க்கையே தோத்துட்டதா நினைக்கக் கூடாது' என ஷனம்-தர்ஷனுக்கு ஜனங்க சார்பா சொல்லிக்கிறோம்.
-ஆர்.டி.எ(க்)ஸ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02-04/darshan-t.jpg)