ல்யாணம்னாலே... பயமாத்தான் இருக்காம் "வெண்ணிலா கபடிக்குழு' விஷ்ணு விஷாலுக்கு.

கடந்த ஆண்டு தன் காதல் மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு... அடுத்த கல்யா ணத்துக்கு தயாராகிவருவதாக சொல்லப்படுகிறது.

மணமகள்... ஹைதராபாத்தில் வசிக்கும் பேட் மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட் டாதான்... என வும் சொல்லப் படுகிறது.

அவங்க ரெண்டு பேரும் நெருக்கமா இருந் தாலும்.. வெளியில சொல் லும்போது... “"நாங்க நண்பர்கள்தான்'னு சொல்லிக்கிறாங்க.

Advertisment

விஷ்ணுவைப் போலவே... ஜுவாலாவும் ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்தான். இவர்கள் இருவரும் இணை வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும்... “"கல்யாணம்னாலே பயமா இருக்கு' என விஷ்ணு சொல்கிறார்.

மனைவியை விவாகரத்து செய்தபின்... ஓவர் குடிக்கு அடிமையாகி, பட வாய்ப்பு களை இழந்து, உடல் பெருத்து, மனநலம் பாதிக்கப் பட்டு அதிலிருந்து மீண்டிருக் கிறார் விஷ்ணு. அதனால் தான்... மீண்டும் ஒரு திருமணம் செய்ய பயமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும்.... இந்த ஆண்டு... இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள்... என்றே தெரிகிறது.

Advertisment

"கல்யாணம்னாலே... பெரிசா ஈடுபாடு வரல...' என்கிறார் த்ரிஷா.

கிட்டத்தட்ட கல்யாணத் தை நெருங்கிவிட்டதாக கருதப்பட்ட ராணாவுடனான காதல் கைகூடாத அதிருப்தி... பிறகு ஒருவருடனான திருமண நிச்சயதார்த்த முறிவு... இதனால் உண்டான சலிப்புதான் த்ரிஷாவுக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லாததற்குக் காரணம்.

பிராணிகளும், பிரியாணி களும், ஃபிலிம்களும்தான் எப்போதும் தன்னை மகிழ்ச்சி யாக வைத்திருப்பதாக... த்ரிஷா சொன்னாலும்... கல்யாணத்தை வெறுத்துவிடவில்லை.

த்ரிஷாவுக்கு பிடித்த நாடு அமெரிக்கா. அங்குள்ள லாஸ்வேகாஸ் நகரில்தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என்று விருப்பப் பட்டிருக்கிறார்.

tt

"கல்யாணம்னாலே... ஒரு உற்சாகம்தான்...' எனத் தெரிவித்துள்ளார் ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்ஸன்.

தன் கவர்ச்சியால் உலக அளவில் புகழ்பெற்ற நடிகை பமீலா. கடந்தவாரம்... ஹாலி வுட் படத்தயாரிப்பாளர் ஜான் பீட்டரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது பமீலாவுக்கு ஐந்தாவது திருமணம். நான்கு முறை விவாகரத்தான பமீலா... ஒவ்வொரு முறையும் உற் சாகம் குறையாமல்தான் திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் சில வருடங்களில் கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெறுகிறார். இருப்பினும்... நம்பிக்கை குறையாமல்... ஐந்தாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

"வாழ்க்கைத் துணை இல்லாத வாழ்க்கை உற் சாகமாக இருக்காது...' எனும் பமீலா, "நானும் ஜானும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டே திருமணம் செய்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால்... 53 வயதை நெருங்கும் பமீலா இப்போதே... மிகக்கவர்ச்சி யாக இருக் கிறாரென்றால்... முப்பது வரு டங்களுக்கு முன் எப்படி இருந் திருப்பார். ஆமாம்... முப்பது வருடங்களுக்கு முன்பே இப்போது கணவராகியிருக்கும் ஜானுடன் டேட்டிங் போயி ருக்கிறாராம் பமீலா.

"கல்யாணம்னாலே... ஒருவித சடங்குதான்' என்கிறார் கல்கி.

ஊட்டியில் பிறந்த (ஆங்கிலோ இந்தியப் பெண்) கல்கி கோச்சலின், பாலி வுட்டில் பிரபலம். ‘"இமைக்கா நொடிகள்'’ படத்தில் வில்ல னாக நடித்த பாலிவுட் டைரக்டர் அனுராக் கஷ்யப் பை திருமணம் செய்து... பின்... விவாகரத்து பெற்றவர்.

இப்போது இசைக் கலைஞர் ஒருவரை காத லித்து, கல்யாணம் செய் யாமலே கர்ப்பமாகியிருக்கும் அவர்... “"கல்யாணம் செய் யாமல் கர்ப்பமடைவது எந்தவகையிலும் குற்ற மில்லை. கல்யாணம் ஒருவித சம்பிரதாய சடங்குதான். மனமொத்த வாழ்க்கைக்கு அது அவசியமில்லை. எங்க ளின் பெற்றோரும் எங்களை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தவில்லை' என விளக்கமளித்துள்ளார்.

-ஆர்.டி.எ(க்)ஸ்