சிங்கிள்ல மிங்கிள்!
நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதல் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்களை "அட்டக்கத்தி'' தினேஷ் நடிக்கும் "நானும் சிங்கிள்தான்' படத்து கதையில சேர்த்திருக்காங்க.
காதல் வளர்ந்த இடத்தில் வீடு!
சமந்தாவுக்கும் அவரின் கணவர் நாகசைதன்யாவுக்கும் இடையே காதல் உண்டானது அமெரிக்காவில் என்றாலும், அவர்களின் காதல்... கல்யாணம் என டெவலப் ஆனது கோவாவில்தான். அதனால் கோவாவில் வீடு கட்டிவருகிறது இந்த ஜோடி.
பழைய காதல் சொன்ன பாடம்!
"என் இதயத்துக்கு நெருக்கமானவர் ராணா' எனச் சொன்னார் த்ரிஷா. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் பேசப்பட்டது. ஆனால் ராணா குடும்பத்தினர் எதிர்ப்பால் ராணா பின்வாங்க... கோபத்தில் ராணாவுடனான காதலை முறித்துக் கொண்டார் த்ரிஷா.
""காதல்ல "இது நடக்கணும்'னு நிர்ப்பந்தப்படுத்தினாலே அது சரியா வராது'' என பழைய பாடத்தை சமீபத்தில் சொல்லியிருக்கிறார் ராணா.
வேணாம்னும் சொல்லல... வேணும்னும் சொல்லல...
""என்னை ஞாபகம் வச்சு "பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் படத்தில் நடிக்க மணிரத்னம் கூப்பிட்டதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அது இளவரசி கேரக்டர். அதுக்கு நான் பொருத்தமா?னு அவருக்கும் டவுட்டு... எனக்கும் டவுட்டு. ஆனாலும் "இந்த புராஜெக்ட்டுக்கு நீ வேணாம்'னு அவரும் சொல்லல... "கண்டிப்பா எனக்கு இந்த சான்ஸ் வேணும்'னு நானும் சொல்லல. ரொம்ப இயல்பாவே அந்த படத்திலிருந்து விலகிக்கிட்டேன்'' என அமலாபால் விளக்கியுள்ளார்.
"அமலாபாலை மணிரத்னம் நீக்கிவிட்டார்'னு ரொம்ப நாளா ஓடிக்கிட்டிருந்த வதந்திக்குத்தான் இப்படி கால்கட்டு போட்டிருக்கார் அமலா.
புள்ளி விபரமா சொன்ன புள்ளி!
தன் தாய்மொழியான கன்னட சினிமாவில்தான் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தன்னா. ஆனால் தெலுங்கு சினிமாவில் பெரிய லெவல் ஹீரோயினானதுடன், தமிழில் கார்த்தி ஜோடியாக "சுல்தான்' படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மி.
சமீபத்தில் "கன்னடம் பேசுவது கஷ்டமாக இருக்கு' எனச் சொல்லி... "தாய்மொழியை துவேசிப்பதாக கன்னடர்களின் கண்டனத்திற்கும் ஆளானார் ராஷ்மி.
கன்னட சினிமாவில் சம்பளம் கம்மி... அதோடு, புகழ் ரீச்சாகும் எல்லையும் சின்னது என்பதால் கன்னட மொழிப் படங்களை தவிர்த்து தெலுங்கு, தமிழ்ப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். இதனால் கடுப்பான சில தயாரிப்பாளர்கள் புள்ளி விபரமாக போட்டுக் கொடுத்ததால்தான் ராஷ்மியின் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி பணம்+தஸ்தாவேஜ்களை கைப்பற்றியுள்ளனர்.
ஹைதராபாத்தில் இரவு முழுக்க படப்பிடிப்பில் இருந்துவிட்டு பகலில் ஹோட்டலில் ராஷ்மிகா தூங்கிக்கொண்டிருந்ததால் அவரின் வீட்டில் ரெய்டு நடந்த விஷயம் ராஷ்மிக்கு உடனடியாக தெரியாதாம்.
-ஆர்.டி.எ(க்)ஸ்