(போகிப் பண்டிகைக்கு பழையன கழிப்பாங்க. எல்லாப் பழையனவும் கழிக்க முடியாதே. சில பழையன களிப்போம்)

பழைய கதாநாயகி விஜய சாந்தி அரசியலில் ஈடுபட்டதால் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி யிருந்தார். தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியான தெலுங்கு தேசத்தின் ஆளும்கட்சி தலைவரான முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸில் சேர்ந்தார்.

ஆனால் அரசியல் கைகொடுக் காததால்... மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கியிருக்கிறார்.

தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவின் சமீபத்திய படத்தில் முக்கிய கதாபாத் திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரமோ நிகழ்ச்சியில்... அரசியலில் அலுத்துச் சலித்து மீண்டும் சினிமாவுக்கு வந்துவிட்ட சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

Advertisment

""சம்பந்தா சம்பந்தமே இல்லாம மகேஷ்பாபு பட புரமோஷனுக்கு சிரஞ்சீவி ஏன் போகணும்? அதுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. விஜயசாந்தி மீது சிரஞ்சீவிக்கு இருக்கிற பழைய பாசம்தான் காரணம்'' என, தனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் கருத்து சொல்லியிருக்கிறார்... வேற யார்? ஸ்ரீரெட்டிதான்.

tt

விஜயசாந்தி தனக்கு திருமணம் நடந்ததையே நீண்ட காலம் ரகசியமாக வைத்திருந்து... பிறகுதான் வெளியிட்டார்.

அவரிடம் எப்போதும் கேட்கிற பழைய கேள்வி ஒன்றை இப்போது கேட்டிருக்கிறது மீடியா. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பாத விஜயசாந்தி இந்த முறை பதில் சொல்லியுள்ளார்.

""குழந்தைகள் வேணாம்கிறத நானும் என் கணவரும் முன்னமே முடிவு செஞ்சிட்டோம். சொந்தக் குழந்தைகள் பிறந்தா எனக்கு சுயநலம் வந்துடும். பொது வாழ்வில் ஈடுபட்டிருக்க எனக்கு மக்கள் சேவைதான் முக்கியம்'' என விளக்கமளித்துள்ளார் விஜயசாந்தி.

டந்த பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார் அன்றைய பைங்கிளி இன்றைய பழைய கிளி சரோஜாதேவி.

சூர்யா-நயன்தாராவுடன் 2009-ல் "ஆதவன்' படத்தில் நடித்தார். அதன்பிறகு தனக்குப் பிடித்த மாதிரியான கேரக்டர் அமையாததால் தேடி வந்த வாய்ப்புகளை நிராகரித்ததோடு... "சினிமாவில் நடிக்கிற ஐடியா இல்லை' என்றும் சொல்லிவிட்டார்.

tt

கடந்த ஆண்டின் இறுதியில் கன்னடத்தில் புனீத் ராஜ்குமாரின் படம் ஒன்றில் கெஸ்ட் ரோலில் நடித்தார் சரோஜாதேவி.

மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

"ஓ போடு' கிரண் பிஸியான கதாநாயகியாக இருந்த காலத்தில் கமலுக்கு ("அன்பே சிவம்') ஜோடி என்கிறவரை உச்சம் தொட்டார்.

திருமணமாகி சினிமாவை விட்டு ஒதுங்கிய கிரண் மீண்டும் சினிமாவில் மெயின் ரோலில் கலக்க விரும்புகிறார். இதற்காக, தன் கொழுக்மொழுக் உடம்பை ஃபிட்டாக்கி... அதை கவர்ச்சி ஆடையில் போட்டோவாக்கி, வலைப்பக்கத்தில் வெளியிட்டு வாய்ப்பு வலைவீசி வருகிறார்.

லேட்டஸ்ட்டாக உச்சபட்ச கவர்ச்சியுடன் ஒரு போட்டோ போட்டு... "நான் ஒழுங்கற்றவள்... ஆனால் உண்மையானவள்' என குறிப்பிட்டிருக்கிறார் கிரண்.

-ஆர்.டி.எ(க்)ஸ்