காதலில் ஏமாற்றம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டு... அதற்காக சிகிச்சை பெற்று, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டிருக்கும் ஆன்ட்ரியா மீண்டும் உற்சாகமாகிவிட்டார்.

tt

சமீபத்தில் ஸிங்கிள் பீஸில் மேடையில் பாடி+ஆடி சர்ச்சையில் சிக்கிய கையோடு... புத்தாண்டை கொண்டாட ஆஸ்திரேலியா சென்றுவிட்டார்.

எல்லாவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் கூட... கொஞ்சம் ரிஸ்க்கான விளையாட்டு எனப்படும் ஆழ்கடல் நீச்சலான "ஸ்கூபா டைவிங்' விளையாடி, பெரிய பெரிய மீன்களோடு நீந்திக் களித்திருக்கிறார்.

Advertisment

னைவியை விவாகரத்து செய்த "வெண்ணிலா கபடிக்குழு' ஹீரோ விஷ்ணுவும், விளையாட்டு வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் நெருங்கிப் பழகிவந்தாலும்... "நண்பர்கள்' என்றே சொல்லிவந்தார் விஷ்ணு.

tt

Advertisment

ஹைதராபாத்தில் இருவரும் கொண்டாடிய புத்தாண்டு... "நண்பர்கள்' என்பதைத் தாண்டிய நெருக்கம் எனத் தெரிவிக்கிறது.

விஷ்ணுவை நெருக்கிப் பிடித்தபடி... "மை பேபி' என விளித்திருக்கிறார் ஜுவாலா.

பேபியா?

...அட... விஷ்ணுவை "பேபி'னு செல்லம் கொஞ்சியிருக்காருங்க!

விஜய் ஜோடியாக நடித்துவரும் "ஹாட்'டு ராணி... மாளவிகா மோகனன் நிஜ "காட்டு ராணி'யாகவே ஆகி, புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.

tt

"பேட்ட' படத்தில் ரஜினியுடன் நடித்தபோது... ரஜினியின் ஆன்மிக உபதேசங்களால் மனதைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டதுடன்... ரஜினி போலவே இமயமலைப் பயணமும் மேற்கொண்டார்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தான்சானியா நாட்டுக்குச் சென்ற மாளவிகா... அங்குள்ள தேசிய உயிரியல் பூங்காவில் "வைல்ட் லைஃப்'பை அனுபவித்திருக்கிறார்.

ன் காதலர் ஆண்ட்ரூ வுடன் பிரிவு ஏற்படுவதற்கு முன்புவரை... போன புத்தாண்டு வரை, ஆஸ்திரேலியாவில்தான் புத்தாண்டு கொண்டாடச் செல்வார் இலியானா.

காதல் பிரிவுக்குப் பின்... மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டு... அதற்காக ஒரு நாளைக்கு ஒரு டஜன் மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார் இலியானா. அதனால் உடல் சதை போட்டுவிட்டது.

tt

இடுப்பழகியாக பெயர் பெற்ற இலியானா இதனால் வீட்டை விட்டு வெளியேறவே தயங்கி... கூடுதல் மன அழுத் தத்திற்கு ஆளானார். இப் போது இலியின் உடல் மற் றும் மனப்பிரச்சினைகள் சரியாகிவிட்டது.

மும்பையிலேயே புத்தாண்டு கொண்டாடிய இலி... தனது பழைய உடலமைப்பை மீண்டும் மீட்டெடுத்ததை நாட்டுக்கு நிரூபிக்க... கொஞ்சம் "நாட்டி'யாகவே டூபீஸ் ஸ்விம் சூட் புகைப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.

""நான் ஓரளவுக்கு கவர்ச்சியா இருக்கேன்னு நினைக்கிறேன்'' என தன்னடக்கத்துடன் குறிப் பிட்டுள்ளார் இலியானா.

-ஆர்.டி.எ(க்)ஸ்