"கல்ராணி சிஸ்டர்ஸ்' எனப்படும் அக்கா சஞ்சனா கல்ராணி, தங்கை நிக்கி கல்ராணி இருவரும் பெங்களூருப் பெண்கள் என்றாலும்... கோலி -டோலி -ஸாண்டல்வுட்டுகளில் பிரபலமான நடிகைகளாக இருக்கிறார்கள்.
புத்தாண்டு வரவிருப்பதை யொட்டி பெங்களூருவில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சில தினங்களுக்குமுன் நடந்த மதுவிருந்தில்... பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பார்ட்டியில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கும், தயாரிப்பாளர் வந்தனா ஜெயினுக்கும் இடையே போதையின் உச்சத்தில் மோதல் உண்டாகியிருக்கிறது.
சஞ்சனாவும் வந்தனாவும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்த போது... சஞ்சனாவின் செல் போனை பறித்து "சீக்ரெட்'டுகளை நோண்டிப் பார்த்திருக்கிறார் வந்தனா. இதனால் சஞ்சனா டென்ஷனாக... சஞ்சனாவின் நடத்தை மற்றும் குடும்பத்தினர் பற்றியும் வார்த்தைகளை விட்டாராம் வந்தனா.
கடுப்பான சஞ்சனா அடிப் பதற்காக கையை ஓங்க... அவரின் கையைப் பிடித்து முறுக்கினா ராம் வந்தனா. இதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் தீவிரமாகியிருக்கிறது.
""மும்பையில் இருக்கும் வந்தனா, பிறரை மிரட்டி பணம் பறிக்கிறா... பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா அவளுக்கு சொந்தமா இருக்கு. 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமா சேர்த்திருக்கா. இதுபத்தி வருமான வரித்துறை விசாரிக்கணும்'' என பார்ட்டியி லேயே வந்தனாவின் பல ரகசியங் களை உச்சபோதையில் உளறினா ராம். இதையடுத்தே விவகாரம் போலீஸில் புகாராகியிருக்கிறது.
""பார்ட்டியின்போது பீர் பாட்டிலை எடுத்து என் தலையிலும், முகத்திலும் தாக்கியதுடன் கொலை மிரட் டலும் விட்டார் சஞ்சனா'' என வந்தனா புகார் சொல்லியிருக்கார்.
""பாட்டிலை வச்சு அடிச்சிருந்தா ரத்தக்காயம் இருந்திருக்கணுமே... சும்மா பொய் குற்றச்சாட்டு. என் சினிமா கெரியரை காலி பண்ணும் முயற்சி இது. எனக்கும் வந்தனாவுக்கும் இடையே சண்டை வந்தது நிஜம்தான். அது வாய்ச்சண்டைதான். இதனால் கோபமான வந்தனா, "உன்னை போலீஸ்ல சிக்க வைக்கிறேன்'னு சொல்லிட்டுப் போய் இப்படி பொய்ப் புகார் குடுத்திருக்காங்க'' என சஞ்சனா சொல்லியுள்ளார்.
ஸாண்டல்வுட் சோர்ஸிடம் விசாரித்தபோது, இந்த மோதல் சம்பவத்தின் காரண காரியங்களை விவரித்தார்கள்.
துபாயில் ஜாலி சுற்றுலா சென்றிருந்த ராய்லட்சுமி, மும்பை திரும்பியதும்... சல்மான்கான் தனது பிறந்தநாளையும், புத்தாண்டை யும் இணைத்துக் கொடுத்த பார்ட்டியில் பங்கேற்றிருக்கிறார்.
புத்தாண்டு பார்ட்டி மூடில் பலரும் இருக்க... "போதும்டா சாமி... நான் குடிக்கிறதையே கைவிட்டுட்டேன்' என அதிரடி முடிவெடுத்துள்ளார் சோனா.
பிரபலங்களுடன் பார்ட்டிக்கு போய் வந்தபோதுதான் "படம் தயாரிக்க... நண்பர்களுக்கு கடனாக...' என பணத்தை இழந்து... அதைத் திருப்பிக் கேட்ட மோதலால் சர்ச்சையில் சிக்கினார் சோனா. கவலைக்கு குடிப்ப வங்க சிலர். குடியால் வந்த கவலை யாச்சே... அதனால் குடிப் பழக்கத்தை கைவிட்டிருக்கிறார் சோனா.
-ஆர்.டி.எ(க்)ஸ்