பார்த்திபன் பஞ்ச்-விஜய் ஆப்சென்ட்!

samantha

touringtalkies"விஜய் டி.வி. அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைக்காது' என சொல்லியிருந்தார் சங்கத்தின் தலைவர் விஷால். என்ன பண்ணலாம்னு யோசித்த விஜய் டி.வி., தலைவர் விஷால், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்த படங்களின் சாட்டிலைட் உரிமையை பெரிய தொகைக்கு வாங்கி, ரூட்டை க்ளியர் பண்ணிவிட்டது. எல்லாம் சுமுகமாக முடிந்ததால், கடந்த 03-ஆம் தேதி விஜய் டி.வி. அவார்ட்ஸ் நிகழ்ச்சியும் சுமுகமாக நடந்து முடிந்தது. சிறந்த புதுமுக நடிகைக்கான விருது "அருவி'’படத்தில் நடித்த அதிதி பாலனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது "அறம்'’ படத்திற்காக நயன்தாராவுக்கும், சிறந்த நடிகருக்கான விருது ‘"விக்ரம் வேதா'’ படத்திற்காக விஜய்சேதுபதிக்கும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் விருது வழங்கிய பின் பேசிய டைரக்டரும் நடிகருமான ரா.பார்த்திபன், "சிறந்த ஷூட்டர்களு (நட்ர்ர்ற்ங்ழ்ள்)க்கான விருதை தமிழக போலீசுக்கு தூத்துக்குடி மக்கள் வழங்க வேண்டும்' என பஞ்ச் அடித்தார்.

Advertisment

சிறந்த படத்துக்கான விருது மெர்சலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விருதை பெற்றுக்கொள்ள வேண்டிய விஜய்யோ, விழாவுக்கு ஆப்சென்ட் போட்டுவிட்டார். முன் வரிசையில் அமர்ந்திருந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடமும் விருதை கொடுக்கவில்லை விஜய் டி.வி. "சன் பிக்சர்ஸ்' படத்தில் நடித்துக்கொண்டிருப்பதால், எதுக்கு சங்கடம் என நினைத்திருப்பார் விஜய்.

ஷாலினி பாண்டே அப்செட்!

தெலுங்கு "அர்ஜுன் ரெட்டி'’ மூலம் சினிமாவுக்குள் என்ட்ரியானவர் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த ஷாலினி பாண்டே. ""படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி "ஐ.டி. கம்பெனி வேலைக்குப் போ' என அப்பா சொல் பேச்சை மீறி, மும்பைக்கு கிளம்பி அங்கிருந்து ஆந்திராவுக்கு ஜம்பாகி ’அர்ஜுன் ரெட்டி’ சான்ஸைப் பிடித்தார். "என் பேச்சை கேட்காம சினிமாவுக்கு போறியா போ... போ..., போயி பிச்சைதான் எடுப்பே'ன்னு எங்கப்பா சாபம் விட்டாரு. ஆனா அதே அப்பா, இப்ப "அப்பப்பா என் மகளைப் பாருங்கப்பா'ங்குறாரு. நான் காலேஜ் படிக்கும்போது ரெண்டு தடவை லவ் ஃபெயிலியரானதால, ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோ விஜய் தேவரஹொண்டாவுடன் லவ் சீன்ல நடிக்கும்போது அட்டாச்மென்ட்டோடு நடிக்க முடியல. இப்ப தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் ‘"100% காதல்'’ படத்துல நடிக்கும்போதும் அதே ஃபீலிங்கா இருக்கு''’என ரொம்பவே அப்செட்டாகி பேசுகிறாராம்’’ ஷாலினி பாண்டே.

Advertisment

சிவகார்த்திகேயன் சென்ட்டிமென்ட்!

"வருத்தப்படாத வாலிபர் சங்கம்', ‘"ரஜினி முருகன்'’ ஹிட் சென்ட்டிமென்ட்டால் மூணாவது முறையாக டைரக்டர் பொன்ராமுடன் "சீமராஜா'வில் ஜாயின்ட் ஆனார் சிவகார்த்திகேயன். மேற்படி இரு படங்களிலும் கதை லைட்டாகவும் கலகலப்பு வெயிட்டாகவும் இருந்தது. ஆனால் "சீமராஜா'வில் கதையையும் கலகலப்பையும் சரிவிகிதத்தில் மிக்ஸ் பண்ணியிருக்காராம் பொன்ராம். படத்தின் ஹீரோயின் சமந்தா என்றாலும், ‘"ரஜினி முருகன்',’ ‘"ரெமொ'’ ஹிட் சென்ட்டிமென்ட்டால், "சீமராஜா'வில் சில சீன்களாவது கீர்த்தி சுரேஷ் நடித்தால் நல்லா இருக்கும் என சிவகார்த்திகேயன் விருப்பப்பட, கீர்த்தியும் ஓ.கே. சொல்லிட்டாராம். இதனால் செம ஹேப்பியான சிவா, கீர்த்தி சுரேஷுக்கு நிறைய சீன்கள் வைக்கச் சொல்லிவிட்டாராம்.

விஜய்சேதுபதி கணக்கு!

செல்வராகவனிடம் அசோஸியேட் டைரக்டராக இருந்த ஒருவர், தயாரிப்பாளர் ஒருவரைக் கூட்டிக்கொண்டு, விஜய்சேதுபதியிடம் கதை சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்ட மறுநாள் அந்தத் தயாரிப்பாளரை அழைத்த விஜய்சேதுபதி, “"டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் ஒரு கதை வச்சிருக்காரு, அவரைப் போய்ப் பாருங்க' என்றிருக்கிறார். எஸ்.பி.ஜனநாதனோ "ஃபர்ஸ்ட் காப்பி பேஸிக்ல படம் பண்ணித் தர்றேன், 21 கோடி ரூபாய் பட்ஜெட் ஆகும்' எனச் சொல்லியதும் விஜய்சேதுபதியிடம் திரும்பி வந்திருக்கிறார். "என்னோட சம்பளம் 7 கோடி, அட்வான்ஸ் 5 கோடிய இப்பவே கொடுத்திருங்க'’என விஜய்சேதுபதி சொல்லியதும் கிர்ரடித்து திரும்பிவிட்டாராம் அந்தத் தயாரிப்பாளர்.

வி.சே.வின் காஸ்ட்லி சம்பளம் இப்படி இருக்க... அவரின் டெக்ஸ்டைல் ஷோரூமில் விலை காஸ்ட்லியோ காஸ்ட்லியாம். தனது தங்கை கணவருக்காக, சென்னை புறநகரில் "இறைவி'’என்ற பெயரில் முழுக்க முழுக்க பெண்களுக்கான அலங்கார ஆடைக் கடை திறந்திருக்கார் விஜய்சேதுபதி. டூவீலரில் போனால் உள்ளே விடமாட்டார்கள், கார்களில் போய் இறங்குபவர்களைக் கூட, டீஸண்ட் லுக்கைப் பார்த்துவிட்டு, "எல்லாமே காஸ்ட்லி பார்த்துக்கங்க' எனச் சொல்லியே அனுப்புகிறார்களாம் செக்யூரிட்டிகள்.

-ஈ.பா.பரமேஷ்வரன்