Advertisment

டூரிங் டாக்கீஸ்! சம்பள சர்ச்சை!

tt

""ஒரு நடிகையோட நடிப்புத் திறமைக்கும்... அவளுக்கு கல்யாணம் ஆகிடிச்சு'' என்பதற்கும்... என்ன சம்பந்தமிருக்கு? கல்யாணமாகி பேரன், பேத்தி எடுத்த ஹீரோக்கள் கூட டூயட் பாட லாமாம்... கல்யாணமான ஹீரோயின் டூயட் பாடக் கூடாதாம்''.

Advertisment

இப்படி ஹீரோவுக்கு இணையாக தாங்களும் பார்க்கப்பட வேண்டும் என குரல் கொடுக்கும் நடிகைகள் கூட... ""சம்பள விஷயத்தில் ஹீரோக்களு டன் போட்டி போடக்கூடாது'' என்கிறார்கள்.

""நடிகைகள் கவர்ச்சிக்கான ஒரு பொருளாக மட்டுமே பார்க்கப்படுவதை சினிமா உலகம் நிறுத்த வேண்டும்'' என குரல் கொடுத்த டாப்ஸி தென்னிந்திய சினிமாவில் தொடர்ச்சியாக அவருக்கு கவர்ச்சி வேஷமே தரப்பட்டதால்... பாலிவுட்டுக்கு நகர்ந்தார். இப்போது அங்கே... வித்தியா

""ஒரு நடிகையோட நடிப்புத் திறமைக்கும்... அவளுக்கு கல்யாணம் ஆகிடிச்சு'' என்பதற்கும்... என்ன சம்பந்தமிருக்கு? கல்யாணமாகி பேரன், பேத்தி எடுத்த ஹீரோக்கள் கூட டூயட் பாட லாமாம்... கல்யாணமான ஹீரோயின் டூயட் பாடக் கூடாதாம்''.

Advertisment

இப்படி ஹீரோவுக்கு இணையாக தாங்களும் பார்க்கப்பட வேண்டும் என குரல் கொடுக்கும் நடிகைகள் கூட... ""சம்பள விஷயத்தில் ஹீரோக்களு டன் போட்டி போடக்கூடாது'' என்கிறார்கள்.

""நடிகைகள் கவர்ச்சிக்கான ஒரு பொருளாக மட்டுமே பார்க்கப்படுவதை சினிமா உலகம் நிறுத்த வேண்டும்'' என குரல் கொடுத்த டாப்ஸி தென்னிந்திய சினிமாவில் தொடர்ச்சியாக அவருக்கு கவர்ச்சி வேஷமே தரப்பட்டதால்... பாலிவுட்டுக்கு நகர்ந்தார். இப்போது அங்கே... வித்தியாசமான கதைப் படங்களின் நாயகிகளுள் முக்கியமானவராக இருக்கிறார்.

tt

அமிதாப் பச்சனுடன் இணைந்து டாப்ஸி நடித்த படங்களைப் பற்றி மீடியாக்கள் குறிப்பிடும் போது... "அமிதாப் பச்சன் படம்' என்றே குறிப் பிடுவதை சமீபத்தில் கடுமையாக கண்டித்தார். ""அந்தப் படங்களில் நானும் சிறப்பாக நடிச்சிருக் கேன். அமிதாப்பே என் நடிப்பைப் பாராட்டினார்.

Advertisment

அப்படியிருக்கையில் படத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் "அது அமிதாப் படம்' என்றே அடையாளப்படுத்துவது முறையில்லை'' என காட்டமாகச் சொன்னார் டாப்ஸி.

இவ்வளவு போல்டாக பேசும் டாப்ஸியும்... ""சம்பள விஷயத்தில் ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை ஹீரோயின்கள் எதிர்பார்க்கக் கூடாது. ஹீரோயின்களை விட, ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் தரப்படுவது தவறல்ல...'' என்று சொல்லியிருக்கிறார்.

ஆசியாவின் நூறு பெண்களில் முதலிடம் பிடித்திருக்கும் ஆலியாபட்டும் "ஹீரோக்கள் கூடுதல் சம்பளம் பெறுவதற்கு' ஆதரவான கருத்தையே வெளியிட்டிருக்கிறார்.

இவர்களின் கருத்து கங்கனா ரணாவத்தை கடுப்பேத்தியிருக்கிறது.

""ஆண்களை விட பெண்கள் கீழானவர்கள்ங் கிற கருத்தை வெற்றி பெற்ற கதாநாயகிகளே ஒப்புக் கொள்வது எரிச்சலா இருக்கு. படத்தோட வெற்றிக்கு கதாநாயகிகளும் தானே காரணம்'' என கோபமாக தனது பட விழாவில் கருத்துச் சொல்லியுள்ளார்.

கங்கனாவின் கருத்தைப் போலவே கருத்து கொண்டவர் சமந்தா.

""ஹீரோக்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருக்கு. அதனால தான் படம் ஓடுதுனு சொல்றாங்க. ஹீரோயின்களுக்கும் ரசிகர் மன்றம் இருக்குது. அந்த ரசிகர்களும் தான் படத்தோட வெற்றிக்குக் காரணம். அதனால் ஹீரோக் களுக்கு இணையான சம்பளம் தர ணும்'' என ஹீரோயின் களுக்காக ரொம்ப நாட்களாகவே குரல் கொடுத்து வருகிறார் சமந்தா.

ஆனால் நயன்தாராதான் குரலும் கொடுப்பதில்லை. கோஷமும் போடுவதில்லை. தன்னுடைய தேவையின் முக்கியத்துவத்தை சினிமா இண்டஸ்ட்ரிக்கு உணர்த்தி இருப்பவர், செயல் வீராங்கனை. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வேட்டை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.

tt

கொங்கு மண்டலமான கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளின் திரையரங்க விநியோகஸ் தர்கள் தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

சினிமா வர்த்தகத் தில் ஏற்படும் தொடர் நஷ்டத்தைச் சரிக்கட்ட நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில்... "பெரிய ஹீரோக்கள் அதிகமாக சம்பளம் வாங்குவதை விடுத்து சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால்... பெரிய ஹீரோக்களின் படங்களால் ஏற்படும் நஷ்டங்களை அந்தந்த ஹீரோக்களே சரி செய்யவேண்டும்.

....இப்படி தீர்மானம் போட்டிருக்கிறார்கள்.

தீர்மானத்திற்கு செவி சாய்க்காவிட்டால்... சம்பந்தப் பட்டவர்களின் படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டாங்களாம்.

"தர்பார் பட வியாபாரம் தொடங்கிருச்சாம்'னு அந்த கூட்டத்துல சொல்லிருந்தா...

கூட்டத்துக்கு வந்திருந்தவங்கள்லாம் எஸ்கேப்பு ஆகிருப்பாக... எஸ்கேப்பு.

"சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தால் என் சம்பளத்தில் 25 லட்ச ரூபாயை குறைச்சுக்கிறேன்' எனச் சொல்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn281219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe