ஜினியின் பிறந்தநாள் சம்பந்தமாக வருடாவருடம் இரண்டு கொண்டாட்டங்கள் ரஜினி வீட்டில் நடக்கும்.

ரஜினி பிறந்ததினமான டிசம்பர்-12 மற்றும் "சிவாஜிராவ் கெய்க்வாட்' என்கிற பெயரை சினிமாவுக்காக "ரஜினிகாந்த்' என மார்ச் 19-ஆம் தேதி டைரக்டர் கே.பாலசந்தர் பெயர் சூட்டிய விழா... என இரண்டு விழாக்கள் நடக்கும்.

இந்த "மார்ச்-19' விழாவை லதா ரஜினிகாந்த் முன்னின்று நடத்துவார். இவ் விழாவில் ரஜினி சினிமாவுக்குள் நுழைந்த சமயம், அவருக்கு உதவிகரமாக இருந்த... குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து இந்த "ரஜினிகாந்த்' விழாவை நடத்துவார் லதா.

இந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளை முன்னிறுத்தி மூன்று விழாக்கள்.

Advertisment

ஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதிக்கு பத்துநாட்கள் முன்பாகவே... டிசம்பர் 02-ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் அவரது வீட்டில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

பொதுவாக ஒவ்வொருவரும் தங்களது பிறந்தநாளான ஆங்கில தேதியை வைத்தே வருடா வருடம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் ஜாதக அடிப் படையில் கணிக்கப்பட்ட ஒருவரின் பிறந்த நட்சத்திரம் வரும்நாளில் பிறந்தநாள் கொண்டாடுவதுதான் முழுமையான பலனைத் தரும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பிறந்தநாளான ஆங்கில தேதியும், பிறந்த நட்சத்திரம் வரும் தேதியும் ஒரேநாளில் பெரும்பாலும் வராது.

திருவோணம்தான் ரஜினியின் பிறந்த நட்சத்திரம். ரஜினியின் பிறந்தநாளையொட்டி... கடந்த 2-ஆம் தேதி திருவோண நட்சத்திரம் வந்ததால் அந்த தேதியில், அதாவது டிசம்பர் 02-ஆம் தேதி ரஜினி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்.

Advertisment

rr

ட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி ஏன் இதற்கு முன் அப்படி தன் பிறந்தநாளை கொண்டாடவில்லை.

இதற்கும் காரணமிருக்கிறது.

60-ஆம் கல்யாணம், 80-ஆம் கல்யாணம் என்பதுபோல... 70-ஆம் கல்யாணம் பெரும் பாலும் கொண்டாடப்படுவதில்லை. (ஆணின் வயதைக் குறிப்பது இந்த திருமணங்கள்)

தீவிர ஆன்மிக ஈடுபாடு மற்றும் வேத சம்பிரதாயங்களில் ஆழ்ந்த பற்றுடையவர்கள் தான் 70-ஆம் கல்யாணம் எனப்படும் 70-ஆவது பிறந்தநாளை யாகம் வளர்த்து கொண்டாடு வார்கள். அதன்படிதான் தனது இல்லத்தில் சிவாச்சாரியார்களைக் கொண்டு யாகம் வளர்த்து... நட்சத்திர தேதியில் தன் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார் ரஜினி.

இது அரசியலுக்கான யாகம் என்று சொல்லப்படுகிறதே?

அது இல்லை... ஆனாலும் அது சார்ந்ததுதான் இந்த யாகம்.

ரஜினி அரசியலுக்கு வருவது முக்கியமில்லை. வந்தால்... தமிழகம் முழுக்க பிரச்சாரத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்க சிரமமின்றி அவர் உடல்நிலை ஒத்துழைக்குமா? என்கிற கேள்வி பரவலாகப் பேசப்பட்டது.

இதோடு ஒப்பிட்டால் இந்த யாகம் அரசியல் யாகம்தான். ஆனால்... பொதுவான "கண்டம்' நீக்குதல் மற்றும் உடல்வலிமைக்காக 70 வயது தொடங்கவிருக்கையில் செய்யப் படுவதுதான் இந்த யாகம்.

இந்த யாகத்துக்குப் பெயர் என்ன?

பீமரத சாந்தி யாகம்!

பயம், கண்டம், எமன் என ஏதோ ஒருவகையில் உண்டாகும் இக்கட்டுக்குப் பெயர் ம்ருத்யு. இந்த இக்கட்டை சாந்தப்படுத்தி... உடல் பலம், மன பலம் மற்றும் ஆயுள் பலம் பெறுவதற்காக நடத்தப்படுவதுதான் பீமரத சாந்தி யாகம்.

இந்த யாகம் நடத்தித்தான் ரஜினி தனது 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடி யிருக்கிறார்.

-ஆர்.டி.எ(க்)ஸ்