அமெரிக்கா ஸ்பெஷல்!

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் உடன் அடிக்கடி அமெரிக்காவுக்கு இன்பச் சுற்றுலா போய் வருவதையும், எதிர்காலத்தில் அமெரிக்காவில் முதலீடு செய்யவிருப்பதாக கிடைத்த தகவலையும் சமீபத்தில் டூரிங் டாக்கீஸில் போட்டிருந்தோம்.

tt

தன் பிறந்த நாள் கொண்டாட்டமாக இரண்டு வாரங்களாக தன் காதலருடன் அமெரிக்காவில் முகாமிட்டிருக்கும் நயன்... அந்த நாட்டின் பாரம்பர்ய பண்டிகையையும் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.

Advertisment

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு முந்தைய பெரும் கொண்டாட்டமாக அமெரிக்காவில் கொண்டாடப்படும் பண்டிகை பட்ஹய்ந்ள் ஏண்ஸ்ண்ய்ஞ் உஹஹ் எனும் "நன்றி தெரிவிக்கும் தினம்'. வெள்ளாமை உள்ளிட்ட வளங்களைத் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவிப்பது இந்த விழாவின் மையம். "நாம பொங்கலுக்கு ஒண்ணு கூடுற மாதிரி' உறவுகள் கூடிக் களிப்பர்.

இந்த விழாவில் முக்கிய அம்சமே... பாரம்பரிய மரபு வழியில் சமைக்கப் படும் அசைவ உணவுதான்.

வான்கோழியின் இறகையும், குடலையும் மட்டும் நீக்கிவிட்டு... அப்படியே முழு கோழியை அவித்து, அதன்பின் பொறித்து... அதற்குள் அப்பம் மற்றும் மூலிகை கலவையை உள்ளே வைத்து... விருந்து மேஜையில் வைத்து துண்டு போட்டு உண்பார்கள். இதற்காக நாடு முழுக்க ஏகப்பட்ட வான்கோழிகள் கொல்லப்படும். அதற்கு பரிகாரமாக... அமெரிக்க ஜனாதிபதி... தனது வெள்ளை மாளிகையில் வைத்து இரண்டு வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்குவார். பின் அந்த இரு கோழிகளும் உயிரியல் பூங்காவில் விடப்படும். அதன்பிறகே... வான்கோழி விருந்து வீடுதோறும் நடக்கும்.

Advertisment

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத நான்காவது வியாழக்கிழமை நடைபெறும் இந்த "நன்றி தெரிவிக்கும் நாள்' கடந்த நவம்பர் 28ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

அன்றுதான் தன் அமெரிக்க தோழி வீட்டில் அவர்களின் குடும்பத்தினருடனும், தனது காதலருடனும் விருந்து கொண்டாடி யிருக்கிறார் நயன்.

விருந்து உண்பதற்கு முன் சமைக்கப்பட்ட வான்கோழியை மந்திரம் செய்வது போல் (மன்னிப்பு கேட்கிறாரோ?) டான்ஸ் ஆடிக் கொண்டே குறும்பாக செய்துள்ளார் நயன்.

" "மூக்குத்தி அம்மன்' படத்தில் நடிக்கப் போற நயன் விரதமிருந்து நடிக்கப் போறதாச் சொன்னாங்க. ஆனா முழுக் கோழி... அதுவும் வான்கோழி விருந்து சாப்பிட்டிருக்காரே...' என வலைவாசிகள் விமர்சித்துக்கொண்டிருக் கிறார்கள். அம்மனுக்கே ஆடு, கோழி, கருவாடு படையல் போடுறவுகளும் உண்டே. மூக்குத்தி அம்மனா நடிக்கப் போறவர்தானே வான்கோழி சாப்பிட்டிருக்கார்.

ஆஸ்திரேலியா ஸ்பெஷல்!

tt

"நிசப்தம்' படத்தில் அனுஷ்காவும், அஞ்சலியும் நடித்து வரு கிறார்கள். படப்பிடிப்பு ஆஸ்தி ரேலியாவில் நடந்தபோது... தன் பிறந்தநாளையொட்டி யூனிட்டா ருக்கு விருந்து கொடுத்திருக்கிறார் அனுஷ்கா.

உற்சாகம் பீறிட... அனுஷை அஞ்சலி தூக்க முயல்வதும், அஞ்சலியை அனுஷ் அசால்ட்டாக தூக்குவதும் என குஷி பறந்திருக்கிறது பார்ட்டியில்.

துபாய் ஸ்பெஷல்!

tt

ராய்லட்சுமியின் நெருங்கிய தோழி யாகிவிட்டார் பாலிவுட் நடிகை சாமா சிக்கந்தர். இப்போது நடிகை சோனாலி ஷெய்கலும் இந்த கவர்ச்சிக் கூட்டணியில் இணைந்துவிட்டார்.

தோழிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு... துபாயில் விடுமுறை நாளை கொண்டாடியிருக்கிறார் ராயம்மா.

கையில் ஒயின் கிளாஸுடன் ஸ்விம் சூட்டில் இந்த மூன்று பேரும் கடற்கரை யையே கவர்ச்சியாக்கி ஹாலிடே விருந்து களித்திருக்கிறார்கள்.

-ஆர்.டி.எ(க்)ஸ்