அது!

ரஜினி -டைரக்டர் சிவா -சன் பிக்சர்ஸ் கூட்டணிப் படத்தில் குஷ்பு கதை நாயகியாக நடிக்கப்போவதாக பேசிக்கிறாங்க.

இது!

"கண்ணா லட்டு தின்ன ஆசையா' உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் சேது, ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர். சமீபத்தில் ஆக்டர் -டாக்டர் சேதுவிடம் தோல் மினுமினுப்பு சிகிச்சை பெற்றிருக்கிறார் குஷ்பு.

Advertisment

tt

அது!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை "தலைவி' என்ற பெயரில் தமிழிலும், "ஜெயா' என்ற பெயரில் இந்தியிலும் எடுத்துவருகிறார் டைரக்டர் விஜய். ஜெ.வாக நடிக்கும் கங்கனா ரணவத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. "அப்படியொன்றும் ஃபர்ஸ்ட் லுக் சிறப்பாக இல்லை' என விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

Advertisment

இது!

"தலைவி' ஃபர்ஸ்ட் லுக் விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில்... ""ஜெயலலிதாவாக நடிக்க நான்தான் பொருத்தமானவள். கோபம், துணிச்சல், வெளிப்படையான பேச்சு... என பல விஷயங்களில் ஜெ.வுக்கும் எனக்கும் ஒற்றுமை உண்டு'' எனச் சொல்லியிருக்கிறார் நித்யா மேனன். புதுமுக இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெ.வாக நித்யா நடிக்கவிருக்கிறார்.

அது!

தான் நடித்த "அசுரன்' பட ரிலீஸின்போது தனது வலைப்பக்கம் மூலம் படத்தை நன்றாக புரமோ செய்தார் தனுஷ். ஆனால் தான் நடித்த "எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு ஒரு ட்வீட் கூட போடவில்லை.

இது!

சம்பளப் பிரச்சினை, குறித்த காலத்தில் படத்தை முடிக்காதது... உள்ளிட்ட பல காரணங்களில் டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனன் மீது தனுஷுக்கு இன்னும் கோபம் தீரவில்லை.

அது!

விஜய் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குவதாக "யோஹன்: அத்தியாயம்-1' படம் விளம்பரம் மட்டும் செய்யப்பட்டு, பிறகு அந்தப் படத்திட்டம் கைவிடப்பட்டது. "முழு ஸ்கிரிப்ட்டையும் சொன்னால்தான் ஷூட்டிங்' என விஜய் கறார் காட்ட... முக்கிய ஸீன்ஸ் மட்டும் சொன்னார் கௌதம். இதனால் விஜய் விலகினார்.

இது!

""நான் எப்போதும் கதைக்கு விஜய் பொருத்தமானவராக இருப்பாரா என்று பார்ப்பேனே தவிர... விஜய்க்காக கதை எழுத முடியாது'' எனச் சொல்லியுள்ளார் கௌதம் மேனன்.

-ஆர்.டி.எ(க்)ஸ்