"2022-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி காலைல 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்'' என கோபமும் கிண்டலுமாக ஒரு விளக்கம் வெளியிட்டிருக்கிறார் சமந்தா.
ஏன்... விளக்கம்?
""கல்யாணமாகி ரெண்டு வருஷமாகப் போகுதே... எப்ப குவா குவா?'' என பார்க் கிறவர்களெல்லாம் கேள்வி கேட்பதால்.
ஹாலிவுட் "பாப்'பம்மா மடோ னாவுக்கு 61 வயது ஆகிறது. இந்த வயதில் இன்னும் இளமையாய்... மின்னும் இளமையாய் ஜொலிக்
"2022-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி காலைல 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்'' என கோபமும் கிண்டலுமாக ஒரு விளக்கம் வெளியிட்டிருக்கிறார் சமந்தா.
ஏன்... விளக்கம்?
""கல்யாணமாகி ரெண்டு வருஷமாகப் போகுதே... எப்ப குவா குவா?'' என பார்க் கிறவர்களெல்லாம் கேள்வி கேட்பதால்.
ஹாலிவுட் "பாப்'பம்மா மடோ னாவுக்கு 61 வயது ஆகிறது. இந்த வயதில் இன்னும் இளமையாய்... மின்னும் இளமையாய் ஜொலிக்கிறார். இதற்கு காரணம் மடோனா அதிகாலையில் அருந்தும் பானம்தான்.
என்ன பானம்?
""அவ்வப்போது என் சிறுநீரை நான் குடிக்கிறேன். அது ஆரோக்கியத்துக்கு நல்லது'' எனச் சொல்லியுள்ளார் மடோனா.
வெளிநாட்டில் இந்த சிறுநீர் சிகிச்சை யை "யுரோஃபோபியா' என்கிறார்கள். நமது முன்னாள் பிரதமர், மறைந்த மொரார்ஜி தேசாய் தனது சிறுநீரை தொடர்ந்து குடித்து வந்ததோடு அதன் நன்மை குறித்து "மிராக்கிள்ஸ் ஆஃப் யூரின் தெரபி' என்கிற புத்தகத்தை எழுதி யிருந்தார்.
யூரின் சேமிப் புக் கிடங்கு அமைத்து அதிலிருந்து யூரியா தயாரிக்கும் யோச னையில் மத்திய அரசு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது 35-வது பிறந்த நாளைக் கொண்டாட காதலர் விக்னேஷ் சிவனுடன் சமீபத்தில் அமெரிக்கா சென்றார் நயன் தாரா. தனது பிறந்தநாள், காதலரின் பிறந்தநாள், ஓணம் பார்ட்டி... இப்படி விழா எதுவாக இருந்தாலும் லொகே ஷன் அமெரிக்காவாக இருப் பதுதான் நயனுக்கு பிடிச்சிருக்கு.
ஏன் பிடிச்சிருக்கு?
தென்னிந்தியாவில் பெரிய சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் நயன்... தங்கத்தில்தான் முதலீடு செய்து வருகிறார். "எதிர்காலத்தில் அமெரிக்கா வில் முதலீடு செய்யும் ஐடியா இருக்கிறது நயனுக்கு...' என்கிறார்கள் விஷயமறிந்த வர்கள்.
பிரியங்கா சோப்ரா, திருமணமான சில மாதங்களில், தன் அமெரிக்க கணவர் பாடகர் நிக்கிடமிருந்து பிரியப் போவதாக அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதிக்கொண்டே வந்தன. முதலாமாண்டு திருமணநாளை விரைவில் கொண் டாடவிருக்கும் இந்த தம்பதியினர் மேற்கண்ட செய்திகளுக்கு சூடான பதிலடி தந்திருக்கிறார்கள். என்ன பதிலடி?
அமெரிக்காவில் புதிய பங்களா ஒன்றை வாங்கியிருக்கிறார்கள். நீச்சல்குளம், தியேட்டர், ஜிம், ரெஸ்ட்டா ரெண்ட் என சகல வசதிகளையும் கொண்ட இந்த பங்களா இந்திய மதிப்பில் சுமார் 150 கோடியாம்.
-ஆர்.டி.எ(க்)ஸ்