ணிரத்னத்தின் "காற்று வெளியிடை', "செக்கச் சிவந்த வானம்' படங்களில் நடித்த... அதிதிராவ், சினிமாவுக்கு வரும் முன்பே மத்திய அரசு அதிகாரியை திருமணம் செய்தவர். விவாகரத்து பெற்றபின் நடிக்க வந்தார்.

தனது அடுத்த திருமணம் பற்றிய எதிர்பார்ப்பில்... ""என் திருமணம் கடலோரம் இருக்கும் ராஜா கால கோட்டை ஒன்றில் நடக்கணும். கல்யாணம் முடிஞ்சதும் பீச் மணல்ல மாப்பிள்ளை கூட ஆடணும்... பாடணும்...'' எனச் சொல்லியுள்ளார்.

""காஞ்சிப் பட்டுடுத்தி... தென்னிந்திய சைவ விருந்தோட... திருப்பதியில என் கல்யாணம் நடக்கணும்'' என மயிலு மகள் ஜான்வி தெரிவித்துள்ளார். இன்னும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவரின் திருமணம் நடக்குமாம்.

tt

Advertisment

ன் தங்கை ஷாகின் மூலம் பழக்கமான நண்பரை காதலித்துவரும் டாப்ஸி... ""என்னோட திருமணம் எளிமையா நடக்கணும். ஒருநாள் விழா-விருந்துதான். ஒரு வாரத்திற்கு கல்யாண விழாவை நடத்துற ஐடியா இல்லை'' என்கிறார்.

"மகாமுனி' படத்தில் நடித்ததிலிருந்து "சாட்டை' மகிமாவும், "பிகில்' இந்துஜாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்.

சமீபத்தில் தன் வலைப்பக்கத்தில் தன் ஹோம்லி லுக் புகைப்படங்களை இந்துஜா வெளியிட... அதைப் பார்த்து "" என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?'' என மகிமா கேட்க... இந்துஜாவும் "ம்' சொல்லியிருக்கிறார்.

Advertisment

ங்கை நிஷாவுக்கு திருமணம் செய்து வைத்து குடும்பஸ்த்திரியாகிவிட்ட அக்கா காஜல்... சினிமாவில் பிஸியாக இருப்பதைக் காரணம் காட்டி... தன் திருமணத்தை தள்ளிப்போட்டே வந்தார்.

இப்போது காஜலுக்கு தொழிலதிபர் மாப் பிள்ளையைப் பார்த்துவிட்டனர். "இந்தியன்-2' படப்பிடிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்து கொள்ளவிருக்கும் காஜல்... சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் வழிபாடு நடத்தியுள்ளார்.

ன்னைவிட 12 வயது இளைய பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருடன் "கட்டாமலே' வாழ்ந்துவரும் மலைக்கா... ""நம்பிக்கை அடிப்படையில் சேர்ந்து வாழ்றவங்களுக்குத் திருமணம் அவசிய மில்லை. இருந் தாலும் என்னோட திருமணம் நடந்தா, பீச்ல... மின்விளக்கு வெளிச்சத்துல வெள்ளைக்கவுன் போட்டுக்கிட்டு, திருமணம் செஞ்சுக்கணும்'' எனச் சொல்லியுள்ளார்.

-ஆர்.டி.எ(க்)ஸ்