"என் கணவரின் முதல் மனைவி "தலையணை'தான். என்னை விட தலையணைதான் முக்கியம் அவருக்கு'' என ஏற்கனவே சொல்லியிருந்த சமந்தா இப்போது... ""எனது முதல் கணவர்'' என தனது செல்ல நாயை குறிப்பிட்டுள் ளார்.
இதை சமந்தாவின் கணவரும் தெலுங்கு ஹீரோவு மான சைதன்யா ஜாலியாக எடுத்துக் கொண்டா லும்... சைதன்யாவின் ரசிகர்களுக்கு "அண்ணியார்' மீது வருத்தம்.
இதனால் "முதல் புருஷன்' வாசகம் போட்ட செல்ல நாய் புகைப்படத்தை சமந்தா நீக்கியுள்ளார்.
""என் கணவ ரோட டி.சர்ட், ஜெர்கின் ஜாக்கெட்டு களை திருட்டுத் தனமா எடுத்துப் போட்டுக்குவேன். அவரோட ஆடையை நான் போட்டிருக் கதைப் பார்த்தா... அவர் ரொம்ப மகிழ்ச்சியடை வார். இதுக்காகவே அவரோட ட்ரெஸ்ஸை அடிக்கடி எடுத்துப் போட்டுக்குவேன்'' என்கிறார் கிரிக்கெட்டர் விராட் கோலியின் மனைவியும், நடிகை யுமான அனுஷ்கா கோலி.
இப்படி... கணவர் மீது கொள்ளைப் பாசம் காட்டினாலும் இன்னொரு விஷயத்தில் கணவருக்கு கண்டிஷன் போட்டுள் ளார் அனுஷ்கா கோலி.
இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவினரை விமர்சித்த முன்னாள் வீரர் பரூக் எஞ்ஜினியர்... கூடவே அனுஷ்காவையும் லைட்டாக விமர்சித் திருந்தார். இதனால் கடுப்பான அனுஷ் கோலி...
""நான் விராட் கோலியின் காதலியா இருந்தபோதும்... இப்போது மனைவியாக இருக்கும் போதும் விமர்சனத்துக்கு உள்ளாகி றேன். உண்மையான ஆதாரம் இல்லாமல் எந்தவொரு மனிதரோ... கிரிக்கெட் வாரியமோ... என் கணவரோ... தேவையில்லாமல் எனது பெயரை இழுத்துப் பேசக்கூடாது'' என கண்டிஷன் போட்டுள்ளார்.
அமெரிக்க நடிகை ஆஷ்லேகிரஹாம் வாயும் வயிறுமாக இருக்கிறார். டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்த விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது.
பொதுவாக இந்தியாவில் திருமணமான தம்பதி முதலிரவுக்கு செல்வதற்கு முன்... சிறப்பான வம்ச விருத்திக்காக இறைவழிபாடு நடத்துவார்கள்.
ஆனால் ஒவ்வொரு நாள் இரவும் ஆஷ்லேவும், அவரின் கணவரும் மனமுருக பிரேயர் செய்துவிட்டு செக்ஸ் வைத்துக் கொள்வார்களாம்.
""இப்படிச் செய்வதால் உடம்பும், மனசும் தினம் புதுசா இருக்கிற மாதிரி புத்துணர்ச்சியா இருக்கு'' என ஆஷ்லே தெரிவித் துள்ளார்.
தன் காதலரான ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீ போன் உடன் "ஒண்ணா' வசித்த இலியானா... "என் புருஷன்' என்றெல்லாம் அவரைக் குறிப்பிட்டி ருந்தார். சமீபத்தில் அவரைப் பிரிந்து விட்ட இலியானா... ""இனிமே நான் யாரையும் நம்புறதா இல்ல... இனிமே என் வாழ்க்கைல காதலுக்கும் இடமில்ல...'' எனத் தெரிவித்துள்ளார்.
""என்கிட்ட பெரும்பா லும் கேட்கப்படுகிற கேள்வி என்ன?ன்னா... "கல்யாணம் கட்டிக் காமலே சேர்ந்து வாழ்றாங்க. ஆனா நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டும்... கணவர் லண்டன்லயும், நீங்க இங்கயும் இருக்கீங்க. ஆனாலும் மகிழ்ச்சியா இருக்கீங்களே?' என்பது தான்.
எனக்கு ஓய்வு கிடைச்சா லண்டனுக்கு போவேன். அவருக்கு ஓய்வு கிடைச்சா... இங்க வந்திடுவார். கல்யாணம் கட்டிக்கிறமா.. இல்லை யாங்கிறது முக்கிய மில்ல. ஒருத்தருக் கொருத்தர் உண்மையா இருந்தாலே குடும்ப வாழ்க்கை நல்லா இருக்கும்'' என்று சொல்லியுள்ளார் ராதிகா ஆப்தே.