தீய சக்திகளை துரத்துவதற்காகவும், குளிர்காலத்தை வர வேற்பதற்காகவும் மேற் கத்திய நாடுகளில் கிறிஸ் துவர்களால் பாரம்பரிய மாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை "ஹாலோவீன்.'
ஒருகட்டத்தில் ஹாலிவுட் நடிகை கள் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றதால்... பிரபலமாகி, உலகம் முழுக்கக் கொண்டாடும் பண
தீய சக்திகளை துரத்துவதற்காகவும், குளிர்காலத்தை வர வேற்பதற்காகவும் மேற் கத்திய நாடுகளில் கிறிஸ் துவர்களால் பாரம்பரிய மாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை "ஹாலோவீன்.'
ஒருகட்டத்தில் ஹாலிவுட் நடிகை கள் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றதால்... பிரபலமாகி, உலகம் முழுக்கக் கொண்டாடும் பண்டிகையாக பரவிவருகிறது ஹாலோவீன்.
பேய்களைப் போலவும், தேவதைகளைப் போலவும் விதவிதமான, பார்க்கவே அச்சுறுத்தலான கெட்-அப் களைப் போட்டுக்கொண்டு அக்டோபர் 31-ல் இந்தப் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
ஹாலிவுட் நடிகைகளின் ஹாலோவீன் மோகம், இந்தமுறை பாலிவுட்-கோலிவுட் நடிகைகளையும் பற்றியுள்ளது.
சன்னி லியோன், சோனம் கபூர், பிபாஷா பாசு உள்ளிட்ட சில பாலிவுட் நடிகைகள் வித்தியாசமாக தங்களை அலங் கரித்துக்கொண்டு கொண்டாடியிருக்கிறார்கள். ராய் லட்சுமி தன்னை கிரேக்க தேவதை போல் அலங்கரித்துக்கொண்டு கொண்டாடி யுள்ளார்.
சம்பவ இடத்திற்கே போய் சம்பவம் செய்யணும்... என பாலி தீவுக்கு கிளம்பிச் சென்ற அமலாபால்.... ஹாலோவீன் பண்டிகையை லைவ்வாக கொண்டாடியிருக்கிறார். இதற்காக தன்னை கவர்ச்சிப் பேய் போல அலங்கரித்துக் கொண்டாடியிருக்கிறார்.
"யாருப்பா அது... மேக்-அப் போடாம இருந்தாலே சினிமா ஸ்டார்ஸ் சிலர் பேய் போல இருப்பாங்கனு சொல்றது?'
டெல்லியில் காற்று மாசு மிகவும் சீரியஸான நிலையை எட்டியிருப்பதால், மக்களிடையே அச்சம் நிலவி வரு கிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் காற்று சுத்திகரிப்பு முகமூடி அணிந்து... ""காற்றை சுத்தப்படுத்தும் இந்த முக மூடிகள்தான் நம்மை ஆசிர்வதிக்கிறது'' என கருத்துப் பதிவிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.
-ஆர்.டி.எ(க்)ஸ்