கமல் தனது கனவுப் படைப்பான "மருதநாயகம்' படத்திற்கு 1997-ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் இங்கிலாந்து ராணி முன்னிலையில் படத் துவக்கவிழா நடத்தினார். ஃபைனான்ஸ் திரட்டுவதில் சிரமம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு தொடங்கப்படுவது தாமதப்பட்டே வந்தது. தாமதம் ஆக ஆக... படத்தின் பட்ஜெட்டும் அதிகரித்தபடியே வந்தது.
ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கமல் "மருதநாயகம்' படத்தை எடுக்க முயற்சித்தபோது... நூறு கோடி ரூபாய் பட்ஜெட் தேவையாக இருந்தது. 2006-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது... கமல் அ.தி.மு.க.விற்காக பிரச்சாரம் செய்தால் "மருதநாயகம்' படத்திற்கான முழு பட்ஜெட் தொகையை பிரச்சார ஊதியமாக தரப்படும்' என ஜெ.வுக்காக சிலர் பேரத்தில் ஈடுபட்டனர். இந்த பேரம் பற்றி கமல், கலைஞரிடம் சொல்ல... கலைஞர் மீடியா முன் தெரியப்படுத்தி... பெரும் பரபரப்பு ஏற்பட்டது அப்போது.
பிறகு "மர்ம யோகி' என்ற தலைப்பில் ஏழாம் நூற்றாண்டு கதையை படமாக்க தீவிரமானார் கமல். ஆனால் தொடக்க நிலையிலேயே படத்தின் தயாரிப்பு தரப்பிற்கும் கமலுக்கும் பிரச்சினை ஏற்பட்டதால்... "மர்மயோகி' கைவிடப்பட்டு... மீண்டும் "மருதநாயகம்' தொடங்கும் மூடில் இருந்தார் கமல். ஆனால் தோது அமையவில்லை.
இன்றைய காலகட்டத்தில்... அரசியலிலும் பிஸியாகிவிட்ட கமல்... தன் கனவுப் படத்திட்டத்தை கைவிடும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
""ஒருவேளை "மருதநாயகம்' படத்தில் வேறு நடிகர் நடிக்க... படம் உருவாகலாம்'' என்று கமல் தெரிவித்திருக்கிறார். "கமலுக்குப் பதில் விக்ரம் நடிக்கலாம்' என்கிற பேச்சும் பரவலாக கிளம்பியுள்ளது.
விக்ரமை வைத்து கமல் இயக்கித் தயாரிக்கிற வசதியும், வாய்ப்பும் இருந்தால் கூடவே... நடிப்பு என்கிற ஒன்றை சேர்த்துச் செய்வதும் கமலுக்கு கஷ்டமில்லையே...
அதனால் "மருதநாயகம்' கைவிடப்பட்ட கனவுத்திட்டமே. கமல் ரிஸ்க் எடுக்கமாட்டார்... என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
1970-களின் மத்தியிலிருந்து இறுதிவரை கமலும், ரஜினியும் பல படங்களில் சேர்ந்தே நடித்து வந்தனர்.
"இப்படியே வில்லனா நடிச்சிட்டுப் போவோம்' என ரஜினி ரிஸ்க் எடுக்கவில்லை. ஆனால் கமல் ""நாம ரெண்டுபேரும் சேர்ந்து நடிச்சா ரெண்டுபேருக்குமே பிரயோஜனமில்லை. தயாரிப்பாளர்கள் நூறு ரூபா நோட்டை ரெண்டா கிழிச்சு நமக்கு ஆளுக்கொரு பாதிய சம்பளமா குடுப்பாங்க. நாம தனிச்சு நடிக்கிறதுதான் நல்லது'' என ரிஸ்க் எடுத்து, ரஜினியை ரிஸ்க் எடுக்க வைத்தவர் கமல்.
கமல்-ரஜினி நட்பு மிகவும் நெருக்கமானது. பரஸ்பரம் தங்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை பகிர்ந்துகொண்டு ஆலோசனை சொல்லிக் கொள்வார்கள்.
இந்நிலையில்... கமலின் 60 ஆண்டு கால கலைப்பயணத்தை கமலின் "ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் கொண்டாடவிருக்கிறது. இந்தக் கொண்டாட் டத்தில் ரஜினியும் கலந்துகொண்டு தன் நண்பனை கௌரவிக்கிறார்.
தன் பிறந்தநாளையொட்டி சுற்றுலா சென்றிருக்கும் அமலாபால்... ரொம்பவே ரிஸ்க் எடுத்துள்ளார். தன்மீது அன்பு செலுத்தும் ரசிகர்களுக்காக இப்படி ரிஸ்க் எடுத்துள்ளார். புகைப்படங்களைப் பார்த்தாலே அவரின் ரிஸ்க் தெரியும்.
"உங்கள் நிபந்தனையற்ற ஆதரவுக்கு என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றி' எனவும் குறிப்பிட்டுள்ளார் மைனா.
அதுக்குன்னு... இம்புட்டு ரிஸ்க்கா?
-ஆர்.டி.எ(க்)ஸ்