"நான் "தாலி கட்டாம சேர்ந்து வாழ்ற' கேரக்டர்ல நடிச்சிருக்கேன். ஓரினச் சேர்க்கையாளராவும் நடிச்சிருக்கேன். அது சினிமாவுக்கான நடிப்பு மட்டும்தான். இதுக்கும்... "இப்போதைக்கு கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்'னு சொல்றதுக்கும் சம்பந்தமில்லை'' என விளக்கம் கொடுத்திருக்கார் நித்யாமேனன். இவரோட ரீல் நடிப்பு கிட்டத்தட்ட ரியல் போலவே இருக்கும். அதனால அப்படி ஒரு பேச்சு வந்துருச்சோ?
""கல்லூரி ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சப்போ என் னோட சீனியர் அக்கா ஒரு தடவை செக்ஸ் வீடியோ காமிச்
"நான் "தாலி கட்டாம சேர்ந்து வாழ்ற' கேரக்டர்ல நடிச்சிருக்கேன். ஓரினச் சேர்க்கையாளராவும் நடிச்சிருக்கேன். அது சினிமாவுக்கான நடிப்பு மட்டும்தான். இதுக்கும்... "இப்போதைக்கு கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்'னு சொல்றதுக்கும் சம்பந்தமில்லை'' என விளக்கம் கொடுத்திருக்கார் நித்யாமேனன். இவரோட ரீல் நடிப்பு கிட்டத்தட்ட ரியல் போலவே இருக்கும். அதனால அப்படி ஒரு பேச்சு வந்துருச்சோ?
""கல்லூரி ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சப்போ என் னோட சீனியர் அக்கா ஒரு தடவை செக்ஸ் வீடியோ காமிச்சார். நானும் பார்த் தேன்'' என அடல்ட் மூவி அனுபவத்தச் சொல்லிருக்கார் பிரியா பவானிசங்கர்.
அந்த வயசுல அதெல் லாம் பார்த்து கடந்து போறது தப்பில்ல... அதுலயே கிடக்கிறதுதான் தப்பு.
பிக்பாஸ் போட்டியாளர்களான சாக்ஷி அகர்வாலும், அபிராமியும் தன்னை "திருநங்கை' என புரளி கிளப்புவதாக சக போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் குற்றம்சாட்டியதுடன்... தனது கவர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டு... ""நானும் பெண்தான், எனக்கு மார்பகங்கள் இருக்கு, மார்பு பிளவுகளும் இருக்கு'' எனச் சொல்லியுள்ளார்.
குழாயடிச் சண்டை வேற ரூபத்துல இணையத் துல நடக்குது.
"நானும் ரன்வீரும் காதலிச்சு திருமணம் செஞ்சுக்கிட்டாலும் காத லிச்சப்போ... சில காதல் ஜோடிகள் மாதிரி "லிவிங் டு ஹெதர்' முறையில ஒண்ணா வசிக்கல. கல் யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணா வசிச்சா... கல்யாணத்துக்குப் பின் னாடி இருக்கிற "தேடல்'ங்கிற சுவாரஸ்யம் குறைஞ்சு போகும்'' எனத் தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே.
தேடல்லதானே த்ரில் இருக்கும்.
ஹிர்த்திக் ரோஷனும், டைகர் ஷெராஃப்பும் நடித்து இந்தி-தமிழில் சமீபத்தில் "வார்' படம் வெளியானது. இந்தப் படம் பார்த்து ரசித்த டி.வி. பிரபலம் பாவனா... கட்டுமஸ்தான உடல் கொண்ட ஹிர்திக்கிற்கு ஒரு வேண்டுகோள் விட்டிருக்கார்.
""ஹிர்திக் விந்தணுவை தானம் செய்ய வேண்டும்'' என்பதுதான் அந்த ரெக்வெஸ்ட்.
ஆரோக்கியமான கன்றுக்குட்டிகள் பிறக்க பொலிகாளையுடன் பசுவை இணைய விடுவாங்க... ஊசி மூலமும் பசுவுக்குள் விந்தணுவை செலுத்துவாங்க. அந்த ஞாபகம்தான் வருது.
"என் தோழி காதலிச்சா. அவளுக்குத் துணையாப் போன நான், தோழியின் ஆளோட ஃப்ரெண்ட் மேல ஈர்ப்பானேன். ரெண்டுபேருக்கும் இடையில பத்து வயசுக்கு மேல கேப். ஆனாலும் அவன்மேல அம்புட்டுக் காதல். அவனுக்கு முத்தம் கொடுக்க ஆசைப்பட்டேன். இதுக்காக என் உள்ளங்கைல முத்தம் கொடுத்து பயிற்சி எடுத்துக்கிட்டேன். ஆனா... "நீ இன்னும் "குழந்தை'னு சொல்லி என் காதலை ஏத்துக்கல. நான் அழுதிட்டேன். ஆனா இப்ப அத நினைச்சா சிரிப்பா வருது'' என டீன்ஏஜ் கதை சொல்லியிருக்கிறார் கங்கனா ரணாவத்.
சிரிச்ச நாட்களை எண்ணி அழுவதும், அழுத நாட்களை எண்ணி சிரிக்கிறதும்தானே வாழ்க்கை ஓட்டம்.