பெண்கள் தங்கள் உடலுணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாலியல் சுதந்திர கருத்துகளை வைத்து (LUST STORIES) (காமக்கதைகள்) என்ற பெயரில் நெட் ஃபிளிக்ஸில் சினிமாக்கள் வெளியாகி வருகிறது. இதை தியேட்டர்களில் பார்க்க முடியாது. பணம் கட்டி இணைய வழியாகவே பார்க்க முடியும்.
"கபாலி' ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி உள்ளிட்ட பிரபலங்கள் இந்தியில் வந்த "லஸ்ட் ஸ்டோரீஸ்' படங்களில் நடித்துள்ளனர். இவ்வகைப் படங்களுக்கு சென்ஸார் கத்தரி கிடையாது என்பதால் காட்சிகள் வெளிப்படையாகவும் இருக்கும். கியாரா அத்வானி நடித்த சுய இன்பக் காட்சி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. வட இந்தியாவில் எடுக்கப்பட்ட இந்த "காமக் கதைகள்' த
பெண்கள் தங்கள் உடலுணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாலியல் சுதந்திர கருத்துகளை வைத்து (LUST STORIES) (காமக்கதைகள்) என்ற பெயரில் நெட் ஃபிளிக்ஸில் சினிமாக்கள் வெளியாகி வருகிறது. இதை தியேட்டர்களில் பார்க்க முடியாது. பணம் கட்டி இணைய வழியாகவே பார்க்க முடியும்.
"கபாலி' ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி உள்ளிட்ட பிரபலங்கள் இந்தியில் வந்த "லஸ்ட் ஸ்டோரீஸ்' படங்களில் நடித்துள்ளனர். இவ்வகைப் படங்களுக்கு சென்ஸார் கத்தரி கிடையாது என்பதால் காட்சிகள் வெளிப்படையாகவும் இருக்கும். கியாரா அத்வானி நடித்த சுய இன்பக் காட்சி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. வட இந்தியாவில் எடுக்கப்பட்ட இந்த "காமக் கதைகள்' தென்னிந்திய நட்சத்திரங்களை வைத்தும் எடுக்கப்படவிருக்கிறது.
"ஆடை' படத்தில் துணிச்சலாக நடித்த அமலா பால், தெலுங்கில் தயாராகும் "லஸ்ட் ஸ்டோரீஸ்'ஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அமலா நடிக்கும் பகுதியை பிரபல தெலுங்கு டைரக்டர் நந்தினி ரெட்டி இயக்குகிறார்.
""என் சினிமா கெரியரில் முன்பு நான் நடித்திராத புதிய விதமாக நடிக்கவிருக்கிறேன்'' என "லஸ்ட் ஸ்டோரி'யில் நடிப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது மைனா.
ஸ்ருதிஹாசனும், லண்டனைச் சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட்டும், இசைக்கலைஞருமான மைக்கேல் கார்ஸலும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருதரப்பிலும் பச்சைக்கொடியும் காட்டப்பட்டது. ஆனாலும் இருவரிடையேயும் மனக்கசப்பு ஏற்பட்டு... "வேறு வேறு பாதையில் பயணிக்கப்போவதாக, மைக்கேலும், "புதிய அத்தியாயம்' என ஸ்ருதியும் வலைப்பதிவு செய்து பிரிந்தனர்.
லேட்டஸ்ட்டாக அதுபற்றி தெரிவித்திருக்கும் ஸ்ருதி, ""நல்லவர்கள் சில நேரங்கள்ல நல்லவர்களாகவே இருக்காங்க. சில நேரங்கள்ல தப்பு பண்றாங்க. காதல் பிரேக்-அப் ஆன துல எனக்கு வருத்த மில்லை. அதை அனுபவப் பாடமாத்தான் எடுத்துக்கிட்டேன். சிறந்த காதலுக்காக காத்துக்கிட்டிருக்கேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.
2017 தீபாவளிக்கு விஜய்யின் "மெர்சல்' படம் மட்டுமே வந்தது. 2018 தீபாவளிக்கு "சர்கார்' மட்டுமே வந்தது. இந்த தீபாவளிக்கு விஜய்யின் "பிகில்' மட்டுமே வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்த்தியின் "கைதி' படமும், விஜய் சேதுபதியின் "சங்கத் தமிழன்' படமும் "பிகிலு'டன் களத்தில்.
"சங்கத் தமிழன்' படத்தைத் தயாரித்திருக்கும் விஜயவாஹினி ஸ்டுடியோ சார்ந்த நிறுவனத்துடன் இவர்கள் ஏற்கனவே தயாரித்த "வீரம்' படத்தின் சேலம் பகுதி விநியோகஸ்தர்களுடன் "டாக்ஸ் ரிட்டர்ன்' தொகை பஞ்சாயத்து ஒன்று உள்ளது. இதனால் "சங்கத் தமிழ'னுக்கு சின்னதாக ஒரு நெருக்கடி.
விஜய் 64-வது படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் "கைதி' படத்திற்கும்... ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கார்த்தி மற்றும் விஜய் சேதுபதி படங்களால் "பிகி'லுக்கு தியேட்டர்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.
அதேசமயம்... சில காம்ப்ளக்ஸ் தியேட்டர்காரர்கள், "தீபாவளியன்று எங்களின் எல்லா ஸ்கிரீனிலும் "பிகில்'தான் போடுவோம்' எனச் சொல்லியிருப்பது மற்ற படத் தரப்பினரை டென்ஷனாக்கியிருக்கிறது.
மூன்று பெரிய நடிகர்களின் படங்களும் தீபாவளிக்கு வெளியானால் எல்லா திரை யரங்குகளிலும் திருவிழாவாக இருக் கும்... என்கிற விருப்பம் பெரும் பாலான திரையரங்கத்தார் மற்றும் விநியோகஸ்தர்களிடம் உள்ளது. விஜய்யின் "பிகில்' பட தமிழக தியேட்டர் உரிமையை 72 கோடி ரூபாய்க்கு க்ரீன் ஸீன் நிறு வனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-ஆர்.டி.எ(க்)ஸ்