கோலிவுட்!
"சினிமா வாய்ப்புத் தருவதாகச் சொல்லி பல பிரபலங்கள் தன்னை பாலியல் ரீதியாக பயன் படுத்திக்கொண்டதாக' பரபரக்கவிட்ட ஸ்ரீ ரெட்டி இப்போது ஒரு உறவில் இருப்பதாக டுவிட்டியுள்ளார். ""நான் எனது தனிமையுடன் உறவில் உள்ளேன்.''
பாலிவுட்!
""நாற்பது வயசு ஆயிடுச்சுன்னா... பெண்களுக்கு தாம்பத்ய ஆசை குறைய ஆரம்பிச்சிடும். உடற்கவர்ச்சியும் குறைஞ்சு போகும்னு பொதுவா ஒரு பேச்சு அடிபடுது. எனக்கு நாற்பது வயசாகுது. முன்னைவிட இப்பத்தான் நான் என்னை கவர்ச்சியா உணர்றேன்... தாம்பத்ய வாழ்க்கை மேலயும் ஈர்ப்பு அதிகமா இருக்கு'' என "நேர்கொண்ட பார்வை'யாக சொல்லியிருக்கிறார் வித்யா பாலன்.
டோலிவுட்!
"தனக்கும் கணவர் சைதன்யாவுக்கும் இடையே சைதன்யாவின் முதல் மனைவி இருப்பதாக' தெலுங்கு சேனல் ஒன்றின் புதிய புரோக்ராமில் தெரிவித்துள்ளார் சமந்தா.
""தலையணைதான் சைதன்யாவின் முதல் மனைவி. நான் அவருக்கு முத்தம் கொடுக்கும்போதுகூட எங்களுக்கு இடையே தலையணை இருக்கிறது'' எனச் சொல்லியுள்ளார்.
திருமணத்திற்கு முன் காதலர்களாக இருந்தபோது... இருவரும் லிவிங் டு கெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்தனர். அதுபற்றி மீடியாக்கள் செய்தி வெளியிட்டபோது... சமந்தா மறுத்தார். "லவ் லப்-டப்' தொடர்லகூட நாம எழுதியிருந்தோம்.
இப்போது... நிகழ்ச்சித் தொகுப்பாளினியான லட்சுமி மஞ்சு... லிவிங் டு கெதர் முறையில் சமந்தா ஜோடி வாழ்ந்ததை போட்டுடைத்துவிட்டார்.
ஹாலிவுட்!
உலகப் புகழ்பெற்ற நடிகையான டெமிமூர் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக்கியுள்ளார். அதில் பல சம்பவங்களை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
தனது மூன்றாவது திருமணமும் விவாகரத்து ஆனது குறித்து கூறிய டெமி...
""ஒருமுறை நான், அவர் மற்றும் ஒருவர் என ஒரே நேரத்தில் மூவரும் பாலியல் உறவுகொள்ள அவர் கேட்டுக்கொண்டதால் சம்மதித்துவிட்டேன். அதுதான் நான் செஞ்ச மிகப்பெரிய தவறு. அவருக்கு இரண்டு பெண்களிடம் கள்ளத் தொடர்பு இருந்தது. இதுபற்றி நான் கேட்டபோது, "மூவரும் சேர்ந்து செக்ஸ் வைத்ததைச்' சொல்லிக் காட்டினார்'' என பிரிவுக்கான காரணங்களில் இதையும் குறிப்பிட்டுள்ளார்.
-ஆர்.டி.எ(க்)ஸ்