ஆ(சா)பாசம்!
""ஆபாச வீடியோவை பார்க்கிறவர்களுக்கு எப்படி இருக்கும்?''’’
இதென்ன கேள்வி?... அது... அப்படி இப்படி இருக்கும்.
""ஆபாச வீடியோவை பார்க்கிறவர்கள் அதில் தங்களையே பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்?''’’
இதென்ன கேள்வி?... இது எப்படி நடக்கும்?
""ஆபாச வலைப்பக்கங்களுக்கு கிடைக்கிற வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருப்பதைப் பார்த்தால்... இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.''’’
எப்படி?
""உலகம் முழுக்க இரண்டுகோடி ஆபாச இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் நாற்பது லட்சம் ஆபாச தளங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதன் உரிமையாளர்களுக்கு பணம் கொட்டுகிறது. ஒட்டுமொத்த இணைய உலகின் பெரிய வருமானமே ஆபாச தளங்கள்தான். சில சேவை வலைத்தள நிறுவனங்கள்கூட... செலவைச் சமாளிக்க... மேற்படி தளங்களை நடத்துகிறது. அகிலம் முழுக்க ஆபாச பிரியர்கள் இருந்தாலும்... ஆசியா கண்டத்தில்... குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஆபாச தளங்களுக்கு அமோக வரவேற்பு. ஆபாச தளப் பிரியர்களின் "இன்னும் இன்னும்... இதுக்கு மேல..' என்கிற எதிர்பார்ப்பு காரணமாக... தங்கள் தளத்தில் யார் வேண்டுமானாலும் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியையும் செய்துள்ளது. இதனால்... கண்ணில் படுவதையெல்லாம் எடுத்து பதிவேற்றம் செய்துவருகிறார்கள். அக்கம்பக்கத்தை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர்கள்... இப்போது வலை வழியாக எட்டிப்பார்க்கிறார்கள். இதனால்... யார் வேண்டுமானாலும் இதில் சிக்கும் ஆபத்து உள்ளது. இதேநிலை நீடித்தால் இனி இந்த டிஜிட்டல் மயமான உலகில் எவருக்கும் அந்தரங்கம் என்பதே இல்லாமல் போய்விடும் நிலை இருக்கிறது. சுமார் இரண்டு வருட ஆராய்ச்சியில் இதுபோல பல விஷயங்களை சேகரித்துள்ளேன்.’’
எதுக்கு இந்த ஆராய்ச்சீய்?
""இந்த ஆபத்துபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த "ல வீடியோஸ்' என்கிற படத்தை இயக்கியுள்ளேன். அஜய்ராஜ், ஆக்ருதிசிங், ரியாமிகா உட்பட பல புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சென்ஸார் குழுவில் நடிகை கௌதமி உட்பட ஏழு பெண் உறுப்பினர்கள் பார்த்து.... "மெஸேஜ் உள்ள படம்' எனச் சொல்லியிருக்கிறார்கள்.’’
அந்த ல?
""அதை செக்ஸைக் குறிக்கும் "எக்ஸ்'ஸாகவும் பார்க்கலாம்... தப்பு என்பதைக் குறிக்கும் "இண்ட் மார்க்'காகவும் பார்க்கலாம்''.’’
மெஸேஜ் என்ற பெயரில் படத்தில் அதை காட்டியிருப்பீர்களே?
""சிகரெட் குடிப்பதை காட்டித்தான் அதன் கெடுதலைச் சொல்ல வேண்டும். அப்படித்தான். ஆனால் இதை சைபர் க்ரைம் "த்ரில்லர்' படமாகத்தான் எடுத்திருக்கிறோம்.''’’
என்ன தீர்வு?
""வெரி ஸிம்பிள்... ஆபாச வலைத்தளங்களை பார்க்காமல் இருப்பதுதான்'' என்கிறார் "எக்ஸ் வீடியோஸ்' படத்தை இயக்கியிருக்கும் சஜோ சுந்தர்.
ஆபாச இணையத்தில்... தனது செக்ஸ் வீடியோ படங்களை வெளியிட்டு... உலகப் புகழ்பெற்றவர் சன்னி லியோன்.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒரு தீவிரவாதியை அமெரிக்கப் படை பின்னிரவில் பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொன்றபோது... அந்தத் தீவிரவாதி பார்த்துக்கொண்டிருந்தது... சன்னியின் ஆபாச இணையதளத்தின் வீடியோவைத்தான்... என அப்போது ஒரு தகவல் பரபரத்தது.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு... கனடாவில் பிறந்துவளர்ந்த சன்னி தனது 15 வயதிலேயே... குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி... ஆபாச வீடியோ பட நடிகையானார். சன்னி முன்புபோல ஆபாச வீடியோக்களில் நடிப்பதில்லை. பாலிவுட், கோலிவுட் சினிமாக்களில் பிஸியாக இருக்கிறார். இவரின் வாழ்க்கை வரலாறு சன்னியின் சொந்தப் பெயரான "கரண்ஜித் கவுர்- சன்னிலியோனின் சொல்லப்படாத வாழ்க்கை' என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு... அழுத சன்னிலியோன்... "ஆயிரம் முறை என் இதயம் உடைந்தது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கவர்ச்சி வீச்சு நாயகி... வாள்வீச்சு செய்து; "வீரமாதேவி' என்கிற வரலாற்று தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார்.
அவரவர் அந்தரங்கத்தை அவரவர் ரசிப்பது என்பது... ஆசாபாசம்!
அடுத்தவர் அந்தரங்கத்தை மற்றவர் ரசிப்பது என்பது... ஆபாசம்!
-ஆர்.டி.எ(க்)ஸ்