டூரிங் டாக்கீஸ்! ஹீரோக்களை அதிரவைத்த ஆன்லைன் ஆப்பு!

dd

"தமிழக திரையரங்குகளின் டிக்கெட் விற்பனையை கணினிமய மாக்கி, அந்த நெட்வொர்க்கை தயா ரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திலிருந்து கண்காணிப்பது' என்கிற திட்டத்தை செயல்படுத்த விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர்.

vvv

அப்போதே பெரிய ஹீரோக்கள் இந்த கணினிமய திட்டத்தை எதிர்த்தனர். அதற்குள் தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலின் நிர்வாகத்திற்கு எதிரணி தயாரிப்பாளர்கள் குடைச்சல் கொடுத்து வந்ததில் இந்த முறையை சாத்தியப்படுத்துவது சாத்தியமில்லாமல் போனது.

இதனால் பெரிய ஹீரோக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இப்போது தயாரிப்பு சங்கத்தை வழிநடத்த தனி அலுவலரை அரசு நியமித்தது. அந்த தனி அலுவலர், பாரதிராஜா தலைமையில் நிர்வாக கமிட்டி ஒன்றை அமைத்தார்.

விஷால் விரும்பிய கம்ப்யூட்டர்மயமாக்கும் திட்டத்தை வேறு வகையில் அரசே செயல்படுத்த வேண்டும் என பாரதிராஜா கமிட்டி கேட்டுக்கொண்டது. இதையடுத்து செய்தி ஒளிபரப்புத்துற

"தமிழக திரையரங்குகளின் டிக்கெட் விற்பனையை கணினிமய மாக்கி, அந்த நெட்வொர்க்கை தயா ரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திலிருந்து கண்காணிப்பது' என்கிற திட்டத்தை செயல்படுத்த விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர்.

vvv

அப்போதே பெரிய ஹீரோக்கள் இந்த கணினிமய திட்டத்தை எதிர்த்தனர். அதற்குள் தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலின் நிர்வாகத்திற்கு எதிரணி தயாரிப்பாளர்கள் குடைச்சல் கொடுத்து வந்ததில் இந்த முறையை சாத்தியப்படுத்துவது சாத்தியமில்லாமல் போனது.

இதனால் பெரிய ஹீரோக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இப்போது தயாரிப்பு சங்கத்தை வழிநடத்த தனி அலுவலரை அரசு நியமித்தது. அந்த தனி அலுவலர், பாரதிராஜா தலைமையில் நிர்வாக கமிட்டி ஒன்றை அமைத்தார்.

விஷால் விரும்பிய கம்ப்யூட்டர்மயமாக்கும் திட்டத்தை வேறு வகையில் அரசே செயல்படுத்த வேண்டும் என பாரதிராஜா கமிட்டி கேட்டுக்கொண்டது. இதையடுத்து செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் தயாரிப்பாளர்களின் பிரதிநிதிகள், தியேட்டர் அதிபர் சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்கூட்டம் நடந்தது.

"தமிழகத்திலுள்ள தியேட்டர்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமே டிக்கெட் விற்பனையைச் செய்ய வேண்டும். இதற்கான கணினி உருவை அரசே ஏற்படுத்தும்' என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் பரிசீலிக்கப் பட்டுள்ளன. ஆனாலும் அடுத்தச்சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின்பே இந்தத் திட்டம் அமலுக்கு வரும். முதற்கட்டமாக சென்னை மாநகர திரையரங்குகளில் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதனால் பெரிய நடிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள்.

கணினிமயமாவதில் கதாநாயகர்களுக்கு என்ன கவலை? இதனால் அரசுக்கு என்ன நன்மை? தயாரிப்பாளர்களுக்கு என்ன லாபம்?

கணினிமயமானால் விற்கிற டிக்கெட் தொகைக்கு ஏற்ப உரிய வரி அரசுக்குச் சேரும்.

படம் வெளியான மறுநாளே... "சக்ஸஸ் பார்ட்டி' வைத்து சம்பளத்தை உயர்த்தும் ஹீரோக்களிடம்... கணினிமயமான வசூல் விபரத்தைத் தூக்கிக் காட்டி, அவர்களின் சம்பளத்தை தயாரிப்பாளர்களால் கட்டுக்குள் கொண்டுவர முடியும். விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் வெளிப்படையான வசூலைச் சுட்டிக்காட்டி, நஷ்டஈடுகளைப் பெறமுடியும்.

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்... சில முக்கிய ஹீரோக்களுக்கு இந்த சிஸ்டம் பிடிக்கவில்லை.

டிக்கெட் விற்பனையின் வெளிப்படைத்தன்மை தங்களின் "வசூல் நாயகன்' இமேஜை டேமேஜ் செய்துவிடும் என்பதால்... இந்த சிஸ்டம் பிடிக்கவில்லை.

டந்த வாரம் தனது பட விழாவில் பேசிய தனுஷ் ""தயாரிப்பாளர்கள் பலரும் எனக்கு சரிவர சம்பளம் தராமல் ஏமாற்றினார்கள்'' என குற்றம்சாட்ட...

""நீங்க நடிச்ச படம் எதுவுமே லாபத்தை தரலையே... உங்களை வச்சு படம் எடுத்தவங்க இப்ப ஃபீல்டுலேயே இல்லையே'' என பதிலடி தந்தார் தயாரிப்பு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ.எல்.அழகப்பன்.

""தனுஷை வைத்து படம் எடுத்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள். தனுஷோ விலை உயர்ந்த சொகுசுக்காரில் பயணிக்கிறார்'' என்றும் சங்க நிர்வாக கமிட்டியினர் அதிருப்தி தெரிவித்தனர்.

(தனுஷ் மாதாந்திர தவணை முறையில்தான் கார் வாங்கியுள்ளார். இப்போதும் தவணை கட்டி வருகிறார்... என தனுஷின் "வுண்டர்பார்' தயாரிப்பு நிறுவன நிர்வாகிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்).

ddd

விஜய்யின் "மெர்சல்' படம் வசூல் மழை பொழிந்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அந்தப் படத்தைத் தயாரித்த தேனாண்டாள் நிறுவனம்... "சங்கமித்ரா' உள்ளிட்ட தனது அடுத்த பட திட்டங்களை கைவிட்டு விட்டது. இதைவிட... அந்தப் படத்தில் விஜய்க்கு மேஜிக் சொல்லித் தந்த வெளிநாட்டு நிபுணருக்குப் பேசிய சில லட்சம் சம்பளத்தைக் கொடுக்க முடியவில்லை.

ஜினியின் "2.0' படம் பெரிய வசூலைத் தந்ததாக படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் சொன்னது. ஆனால் அந்தப் படத்திற்கு சப்-டைட்டில் பணியைச் செய்து தந்த நிறுவனத்திற்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை.

ஜீத்தின் "விஸ்வாசம்' படம் தயாரிப்பாளருக்கும், விநியோ கித்தவர்களுக்கும் லாபம்தான்... என்றாலும் படத்தின் தமிழக உரிமை பெற்ற ஜே.எஸ்.கே. ஸ்டுடியோவின் உரிமையாளரும், நயன்தாராவின் மேனேஜருமான ராஜேஷ் "விஸ்வாசம் அபார வசூல்' என ஒரு பெருந்தொகையைக் குறிப்பிட்டார். தயாரிப்பாளர் ஜி.தியாகராஜன் "ஏரியா வாரியாக வசூல் விபரத்தைக் கொடுங்கள்' என கேட்டபோது... "இது ரசிகர்களை குஷிப்படுத்த குத்து மதிப்பாகச் சொன்ன தொகை' என ஜகா வாங்கினார்.

""இப்படி போலியான வசூல் விபரங்களைத் தருவதும், அதை ரசிகர்கள் பிரபகண்டா செய்வதும்... இதனால் ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்துவதும்... சினிமா உலகை சிக்கலுக்கு ஆளாக்கி யிருக்கிறது. வசூல் விபரங்கள் வெளிப்படையாக இருந்தால்... அந்தந்த விபரத்திற்கேற்ப ஹீரோக்களின் சம்பளத்தை கூட்டியோ, குறைத்தோ தருவதற்கு தயாரிப்பாளர்களுக்கு வசதியாக இருக்கும்...'' என்கிறார்கள் நம்மிடம் சில சீனியர் சினிமா பிரமுகர்கள்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn170919
இதையும் படியுங்கள்
Subscribe