டைரக்டர் ராம்கோபால் வர்மா மீது அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை சொல்லியுள்ளார் ஷெர்லின்.
வர்மா இயக்கிய "சத்யா', "ரங்கீலா' படங்கள் ஷெர்லினுக்கு பிடிக்குமாம். அதைக் குறிப்பிட்டு, வர்மாவின் படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டு, தனது புகைப்படங்களையும், விபரங்களையும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பினாராம் ஷெர்லின்.
"இந்த ஸ்கிரிப்ட்டை பாருங்கள்'’என பதிலுக்கு ஒரு வீடியோவை அனுப்பினாராம் வர்மா.
அது பெட்ரூம் காட்சிகள் நிறைந்த செக்ஸ் வீடியோ.
""வீடியோவை பார்த்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘"என்ன சார்... ஸ்கிரிப்ட் அனுப்புறேன்னு சொல்லி, செக்ஸ் வீடியோவை அனுப்பியிருக்கீங்க?'னு நான் கேட்டேன். அதுக்கு வர்மா, ‘"மனுஷங்களுக்கும், விலங்குகளுக்கும் செக்ஸ் மிகவும் தேவை. அதை அனு பவிக்கணும். இதை மையமா வச்சுதான் ஸ்கிரிப்ட்' எனச் சொல்ல... அந்த வாய்ப்பை மறுத்திட்டேன். ‘இந்த ஸ்கிரிப்ட்டில் நான் நடிச்சாகணும்னு வர்மா வற்புறுத்தல. அதனால் நான் அவர்மேல புகார் எதுவும் கொடுக்கல'' என இப்போது தெரிவித் திருக்கிறார் ஷெர்லின்.
வலைப்பக்கங்களில் மிகக் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்த புகைப்படங்களை பதிவிடும் போக்கு நடிகைகளிடம் அதிகரித்து வரு கிறது. அதில் முக்கியமானவராக இருக்கிறார் ஷெர்லின். இதனால் விமர்சனத்திற்கும் ஆளாகிறார். ஆனால் அப்படியான விமர் சனங்களை கண்டுகொள்வதில்லையாம் ஷெர்லின்.
""உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள் வது பிடிக்கும். அந்த உடல் அழகை வெளிப்படுத்தும் விதமாக... அதற்குப் பொருத்தமான கவர்ச்சியான ஆடைகள் அணிவது பிடிக்கும். ஆனால் கவர்ச்சியான ஆடைகளை அணியும் பெண்களை ‘மோசமானவர்களாக’ நினைக்கிறார்கள். உடம்பை மறைச்சு ஆடை அணிந்துதான் நான் நல்லவள்ங்கிறதை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. முட்டாள்தனமான இப்படிப்பட்ட விதிகளை யார் உருவாக் கினது? நான் என்ன மாதிரியான ஆடை அணியவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். பெரிய பதவிகளில் இருக்கிறவங்க கூட லோ-கட் ஆடைகளை போட்டுக் கிறாங்க. ‘"உடம்பை இந்த அளவுக்கு காட்டுற ஆடைகளைத்தான் போட்டுக்கணும்'னு சட்டம் இருக்கா என்ன?'' எனக் கேட்கிறார்.
செக்ஸ் படங்களில் நடிப்பதற்கான தன் பாலிஸி என்ன என்பதையும் சொல்லியிருக்கிறார் ஷெர்லின்...
""என்னாலும் அடல்ட் ஒன்லி படங்களில் நடிக்க முடியும். அதற்காக கேமராவுக்கு முன்பாக செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாது. நெருக்கமான... உடலுறவை சிம்பாலிக்காக காட்டும் காட்சியில்தான் நடிக்க முடியும்'' என்று சொல்கிறார் ஷெர்லின்.
""என்னை ‘"பிக்பாஸ்'’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா ஹோட்டலுக்கு வரச்சொல்லி இண்டர்வியூ செய்தார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அபிஷேக் என்பவர்... ""பிக்பாஸ் வீட்டில் ஒரு ஆண் போட்டியாளரை நீங்கள் தேர்வு செய்துகொண்டு... அவருடன் கட்டிலில் படுத்து, போர்வையால் முழுக்க மூடிக்கொண்டு, செக்ஸ் வைத்துக்கொள்ள முடியுமா?''’என்று கேட்டார்.
நான் மறுத்துவிட்டேன்.
""கவர்ச்சியான... குட்டை உடைகளை அணிய முடியுமா?''’என்று கேட்டார். நான் சம்மதித்தேன்.
""உங்களோட உடல் உறுப்புகளின் அளவைச் சொல்ல முடியுமா?''’என்று அருவருப்பான தொனியில் கேட்டார்.
""இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை''’எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
-இப்படி தெலுங்கு பிக்பாஸ் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார் பரபரப்பிற்கு பேர்போன ஸ்ரீரெட்டி.
"ஜோக்கர்'’ படம் மூலம் கதாநாயகியான ரம்யா பாண்டியன்... தனது வலைப்பக்கங்களில் தனது தென்றலடிக்கிற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். சேலைதான் மிக கவர்ச்சியான உடை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதுபோல இருக்கிறது ரம்யாவின் சேலைக்கட்டு ஸ்டைல்.
"கவர்ச்சியா நடிக்க ரெடின்னு க்ரீன் சிக்னல் காட்டுறார்'’என்கிற பேச்சை மறுத்து ரம்யா ஒரு காரணம் சொல்லியிருக்கிறார்.
""உடல் எடையை கூட்டணுமா? குறைக்கணுமா? தோற்றம் சரியா இருக்கா? மாற்றம் செய்யணுமா?னு தெரிஞ்சுக்க... ஒரு சுய மதிப்பீட்டுக்காகத்தான் இந்த போட்டோ ஷூட். இத்தனைக்கும் பெரும்பாலான குடும்பத்தலைவிகள் அணியிற சேலை காஸ்ட்யூம்லதான் இந்த போட்டோவுல இருக்கேன். அதுவே இம்புட்டு வைரலாகிருக்கே?'' என வியப்பும் தெரிவிக்கிறார் ரம்.பா.
-ஆர்.டி.எ(க்)ஸ்