Advertisment

டூரிங் டாக்கீஸ்! உறவும் பிரிவும்!

ff

லியானாவும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரே நீபோன் எனும் புகைப்படக் கலைஞரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். காதலர் எடுத்த தனது கவர்ச்சிப் புகைப்படங்களை தனது வலைப் பக்கங்களில் வெளியிட்டு மகிழ்ந்து வந்தார்.

Advertisment

touringtalkiesகடந்த ஆண்டு "என் புருஷன்' எனவும் ஆண்ட்ரேவை குறிப்பிட்டி ருந்தார் இலி. இதனால் இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஆண்ட்ரேவுடன் தான் இருக்கிற புகைப்படங்கள், காதலரை வாழ்த்திப் போட்ட பதிவுகள்...

லியானாவும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரே நீபோன் எனும் புகைப்படக் கலைஞரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். காதலர் எடுத்த தனது கவர்ச்சிப் புகைப்படங்களை தனது வலைப் பக்கங்களில் வெளியிட்டு மகிழ்ந்து வந்தார்.

Advertisment

touringtalkiesகடந்த ஆண்டு "என் புருஷன்' எனவும் ஆண்ட்ரேவை குறிப்பிட்டி ருந்தார் இலி. இதனால் இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஆண்ட்ரேவுடன் தான் இருக்கிற புகைப்படங்கள், காதலரை வாழ்த்திப் போட்ட பதிவுகள்... என எல்லாவற்றையும் நீக்கியுள்ளார் இலி.

காதலருடனான பிரிவை இப்படி சூசகமாக தெரிவித்துள்ளார் இலி.

இலியும், அவரும் எலியும் பூனையுமா ஆயிட்டாங்களா?

விஷாலுக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டுப் பெண்ணான அனிஷா ஷெட்டிக்கும் இடையே கண்டவுடன் காதலாகி, இருவீட்டுப் பெரியவங்களின் சம்மதத்தின் பேரில் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதியும் (ஆகஸ்ட் 2019) முடிவு செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் விஷாலுடன் தனக்கு நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை தன் வலைப் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார் அனிஷா ஷெட்டி.

இரு தரப்பும் மௌனம் காக்குது!

"குத்து' ரம்யா என்கிற திவ்யா கர்நாடக காங்கிரஸில் இணைந்து அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார். திவ்யாவும், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ரபேலும் தீவிரமாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில்... காதல் முறிவு ஏற்பட்டிருக்கிறது.

"இந்தியாவை விட்டு விட்டு போர்ச்சுகல் செல்ல திவ்யாவிற்கு விருப்பமில்லை. போர்ச்சுகலை விட்டுவிட்டு இந்தியா வர ரபேலுக்கு விருப்பமில்லை. அதனால் இருவரும் மற்றும் இரு குடும்பத்தினரும் வழக்கம்போல் நட்புறவாக மட்டும் இருந்துகொள்வது என முடிவெடுத்திருப்பதாக...' திவ்யா தரப்பில் சொல்கிறார்கள்.

சொந்த நாடே சொர்க்கம்!

யன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் உறவு ஸ்ட்ராங்க் ஆனபடிதான் இருக்கிறது.

அஜீத்துடன் நயன் நடித்த "விஸ்வாசம்' செம ஹிட். விஜய்யுடன் "பிகில்', ரஜினியுடன் "தர்பார்', சிரஞ் சீவியுடன் "சைரா' படங்களில் நடித்துவருவதன் மூலம் நயன்தாரா மார்க்கெட் பிஸியாகத்தான் இருக்கிறது.

ஆனால்... கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் அவர் நடித்து வந்த படங்கள் தொடர் வெற்றியைப் பெற்று சம்பளத்தையும் உயர்த்திவிட்டது. அதில் இப்போது சுணக்கம்.

"ஐரா', "கொலையுதிர் காலம்' உள்ளிட்ட சில படங்களின் வர்த்தக தோல்வி நயனின் தனித்துவத்தை அசைத்துப் பார்க்க... அதைச் சரிக்கட்டும் விதமாக நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படம் ஒன்றை விக்னேஷ்சிவன் தயாரிக்கவுள்ளார்.

ஸ்டெடி பண்ண ரெடி!

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn300819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe