டூரிங் டாக்கீஸ்! ஹீரோயின்ஸ் ஸ்பெஷல்!

dfa

ங்கிலோ-இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஆண்ட்ரியா, அந்த மக்களின் வரலாற்றை புத்தகமாக எழுதவிருக்கிறார்.

மாநாடு படத்திலிருந்து நீக்கப்பட்ட சிம்பு, "மகா மாநாடு' என்கிற படத்தை பல மொழிகளில் நடித்து, தயாரித்து, இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

கார்த்தி-ராஷ்மிகா நடித்துவரும் படத்தின் டைட்டிலை சஸ்பென்ஸாக வைத்திருந்தது படக்குழு. ராஷ்மிகா தனது டுவிட்டரில் "சுல்தான்' என டைட்டிலை தெரிவித்துவிட்டார். படக்குழ

ங்கிலோ-இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஆண்ட்ரியா, அந்த மக்களின் வரலாற்றை புத்தகமாக எழுதவிருக்கிறார்.

மாநாடு படத்திலிருந்து நீக்கப்பட்ட சிம்பு, "மகா மாநாடு' என்கிற படத்தை பல மொழிகளில் நடித்து, தயாரித்து, இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

கார்த்தி-ராஷ்மிகா நடித்துவரும் படத்தின் டைட்டிலை சஸ்பென்ஸாக வைத்திருந்தது படக்குழு. ராஷ்மிகா தனது டுவிட்டரில் "சுல்தான்' என டைட்டிலை தெரிவித்துவிட்டார். படக்குழு கடிந்துகொண்டதால் வருத்தம் தெரிவித்து... டுவிட்டர் பதிவையும் நீக்கிவிட்டார்.

ttt

"பட்ஜெட் அதிகம்... கமல் ஓல்டு கெட்-அப்புக்கான மேக்-அப் சரியில்ல' இப்படியான காரணங்களால் தடைபட்டிருந்தது "இந்தியன்-2' படப்பிடிப்பு. டைரக்டர் ஷங்கரும் வேறுசில நிறுவனங்களை தயாரிப்பாளராக்க முயற்சித்தார். இப்போது ஷங்கருக்கும் -லைகா நிறுவனத்திற்கும் சமரசம் ஏற்பட்டதையடுத்து பட வேலைகள் துவங்கிவிட்டன. சில தினங்களுக்கு முன் படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான பிரியா பவானிசங்கரை அழைத்து... இரண்டுமணி நேரம் கதை சொல்லியிருக்கிறார் ஷங்கர்.

சாதா ஸ்பாட் நடிகைகளால் "ஹாட் ஸ்பாட்' ஆகிக்கொண்டிருக்கிறது.

கோவா பீச் ஏற்கனவே பிரபலமானது என்றாலும் த்ரிஷா அடிக்கடி அங்கே போய்வந்த பிறகு பிரபலங்கள் அங்கே படையெடுக்கத் தொடங்கினர். த்ரிஷாவுக்குப் பிறகுதான் சமந்தாவுக்கும் இஷ்ட இடம் ஆனது கோவா பீச்.

மாலத்தீவு பீச்சை பிரபலமாக்கியவர் சோனம் கபூர். கடந்த மாதத்தில் மட்டும் மந்த்ரா பேடி, மலைக்கா அரோரா, வேதிகா உள்ளிட்ட பாலி-கோலி நடிகைகள் அங்கே கவர்ச்சிக் குளியல் போட்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா மியாமி பீச்சும் த்ரிஷாவுக்கு இஷ்டமானதாக இருக்கிறது. இப்போது பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட சில இந்திய நடிகைகளின் ஃபேவரைட் பீச்சாகியிருக்கிறது மியாமி.

ஸ்பெயின் நாட்டு பீச்சை இந்திய நடிகைககளுக்கு பிரபலமாக்கியவர் கத்ரினா கைஃப்.

லேட்டஸ்ட்டாக ராகுல் பிரீத்சிங் ஸ்பெயின் பீச்சில் குளியல் போட்டிருக்கிறார்.

தாய்லாந்தின் புக்கட் தீவு ராய்லட்சுமியின் ஃபேவரைட் ஆகியிருக்கிறது.

"எந்திரன்' மற்றும் "2.ஓ' படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்துக் கொடுத்த நிறுவனத்திற்கு இன்னும் பணம் தராமல் இழுத்தடித்து வருகிறதாம் இரு படங்களையும் தயாரித்த நிறுவனங்கள். வலைப்பக்கத்தில் ஆதங்கப்பட்டிருக்கிறது சப்-டைட்டில் அமைத்துக்கொடுத்த நிறுவனம்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn230819
இதையும் படியுங்கள்
Subscribe