1996-ஆம் ஆண்டிலிருந்தே... "ரஜினி அரசியலுக்கு வருகிறார்' என்கிற பேச்சு கிளம்பத் தொடங்கியது. "அரசியலுக்கு வருவேனா...' என உறுதியாகச் சொல்லாத ரஜினியும் "நேத்தைக்கி கண்டக்டர், இன்னைக்கி நடிகன், நாளைக்கி...' எனச் சொல்லி... "ஆண்டவன் கைல இருக்கு' என்பது போல் சைகை காட்டுவார்.

இருபது வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்துப் பேசிய நிகழ்ச்சியில்தான் "அரசியலுக்கு வருவேன்' என வெளிப்படையாகத் தெரிவித்தார். ஆனாலும் அப்படிச் சொல்லியும் அரசியலில் இறங்குவதற்கான வேலையை ரஜினி தொடங்கவில்லை.

ரஜினி என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை ரஜினிதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால்... "வர்றேன்னு சொல்லி ஏமாத்திக்கிட்டிருக்கார்' என்கிற விமர்சனம் ரஜினி மீது வைக்கப்பட்டே வருகிறது.

rr

Advertisment

ரஜினியின் அரசியல் வருகையை கேலி செய்து ஒரு காட்சி இடம் பெற்றதால் "கோமாளி' திரைப் படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு.

ஜெயம் ரவி பத்து விதமான தோற்றங்களில் நடித் திருக்கும் "கோமாளி' பட ட்ரெய்லர் சமீபத்தில் வெளி யானது. இதில் ஒரு காட்சியில்... நீண்ட வருடங்களாக கோமா நிலையில் இருந்து... சுயநினைவு பெறும் ஜெயம் ரவியிடம் "இது 2016ஆம் ஆண்டு' எனச் சொல்லப் படுகிறது. அப்போது டி.வி.சேனல் ஒன்றில் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவிக்கும் செய்தி ஓடுகிறது. அதைப் பார்த்த ஜெயம் ரவி... "இல்ல... இது 1996ஆம் வருஷம்' என்கிறார். நீண்ட காலமாக ரஜினி அரசிய லுக்கு வரப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்... என்பதைக் கேலி செய்திருக்கிறார்கள் இப்படி.

Advertisment

இந்தக் காட்சிக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வரும் நிலையில்... ட்ரெய்லர் பார்த்த கமல்ஹாசன்.. "கோமாளி' படத் தயாரிப் பாளரான ஐசரி கணேஷை கண்டித்திருக்கிறார்.

இதையடுத்து... ""ரஜினி சார் விரைவில் அரசியலுக்கு வரணும்ங்கிற விருப்பத்தில் தான் இந்த காட்சியை வச்சோம். அது எதிரான கருத்தை பிரதிபலிப்ப தாகச் சொல்வதால்... அந்தக் காட்சி படத் திலிருந்து நீக்கப் படும்'' என ஐசரி கணேஷ் அறிவித் திருக்கிறார்.

rr

"கோமாளி' படத்திற்கு சென்ஸார் சர்டி பிகேட் பெறப் பட்டு விட்டது. வரும் 15-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இத னால் "காட்சி யை நீக்க முடியுமா?' என்கிற பேச்சும் எழுந்துள்ளது.

"சென்ஸார் போர்டு விதிப்படி... தணிக்கை செய்யப்பட்ட படத்தில் "ம்' என்கிற உச்சரிப்பை மட்டும் சேர்ப்பதாக இருந்தால்கூட மறு சென்ஸார் செய்யவேண்டும். ஆனால் காட்சிகளை நீக்க அனுமதி தேவையில்லை' என்கிறார்கள் சினிமா வட்டாரங்களில்.

ரஜினியை நேரில் சந்தித்துப் பேசவும் நேரம் கேட்டுள்ளது "கோமாளி' படக்குழு.

வாயால் கெட்ட ராஷ்மிகா!

கன்னடத்திலிருந்து கிளம்பிவந்து தெலுங்கில் முன்னணி நடிகையாகி, இப்போது தமிழிலும் கார்த்தி ஜோடியாக நடித்துவருகிறார் ராஷ்மிகா. விஜய்யின் அடுத்த பட நாயகி இவர்தான் என்றும் சொல்கிறார்கள்.

சமீபத்தில் தெலுங்கு-தமிழில் ராஷ்மி நடித்த "டியர் காம்ரேட்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, ""கன்னடம் எனது தாய்மொழியாக இருந்தாலும் கன்னட மொழியில் பேசுவது எனக்கு சிரமமாக உள்ளது'' என்றார்.

கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட அனுஷ்கா சில தினங்களுக்கு முன் தன் தாயாரின் பிறந்தநாளையொட்டி... கன்னடத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டார்.

இரண்டையும் ஒப்பிட்டு கன்னடக்காரர்கள்.... அனுஷ்காவைப் புகழ்ந்தும், ராஷ்மிகாவை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

"ராஷ்மிகா நடிக்கும் படங்களை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்' என்றும் வலைப்பக்கங்களில் வரிந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

-ஆர்.டி.எ(க்)ஸ்