வெள்ளித்திரையில் ஜோடியாக நடிக்கும்போது வெளிப்படும் கெமிஸ்ட்ரியை வைத்து.... தங்களுக்குப் பிடித்தமான ஜோடியை தேர்வுசெய்து ரசிக்கும் ரசிகர்கள்... ஒரு கட்டத்தில் தங்களுக்குப் பிடித்தமான அந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைய வேண்டும்... என நினைக்கிறார்கள்.

kamal

ரசிகர்களின் இந்த விருப்பம் சில சமயம் நிறைவேறியிருக்கிறது... சில சமயம் நிறைவேறாமலும் போயிருக்கிறது. கமலும் ஸ்ரீதேவியும் மெய்நிகர் ஜோடிப் பொருத்தத்தை வெளிப்படுத்தினர். உள்ளூர அவர்களுக்குள்ளும் அப்படி ஒரு ஈர்ப்பு இருந்ததால்... ‘சொந்த வாழ்க்கையிலும் அவர்கள் இணையவேண்டும்’ என ரசிகர்கள் விரும்பினர்.

Advertisment

ஆனால் அது நடக்கவில்லை.

சூர்யாவும் ஜோதிகாவும் மெய்நிகர் ஜோடிப் பொருத்தத்தை வெளிப்படுத்தினர். உள்ளூர அவர்களுக்குள்ளும் அப்படி ஒரு ஈர்ப்பு இருந்ததால்... ‘சொந்த வாழ்க்கையிலும் அவர்கள் இணையவேண்டும்’ என ரசிகர்கள் விரும்பினர். அது நடந்தது.

(இன்றும்கூட திருமண விழாக்களில் மண மக்களுக்கு அணிவிக்கப்படும் மாலைகள் சூர்யா- ஜோதிகா மாலை எனப்படுகிறது. சூர்யாவும், ஜோதிகா வும் தங்கள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலை... தமிழகம் முழுக்க பிரபலமாக இருக்கிறது.)

Advertisment

touringtalkies

இப்போது...

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பலரும்... நிஜ தம்பதிகளாக பிரபாஸும், அனுஷ்காவும் ஆகவேண்டும்... என்கிற விருப்பத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.

"நாங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே...' என தங்களைப் பற்றி வந்த காதல் செய்திகளுக்கு பிரபாஸ் விளக்கம் சொன்னபோதும்... காதல் செய்தி ஓயவில்லை.

கடந்த வருடமே பிரபாஸுக்கு அவரின் வீட்டார் பெண் பார்த்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் முடிவாகவில்லை. இதேபோல் அனுஷ்காவுக் கும் அவரின் வீட்டார் மாப்பிள்ளை பார்ப்பதாக அவ் வப்போது செய்திகள் மட்டுமே வந்தபடி இருக்கிறது.

அனுஷ்காவிற்கு ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பதாக வும், அதற்கு உரிய பரிகாரங் களைச் செய்யவேண்டும் எனவும் ஜோதிடர்கள் சொன்னதால்... ஏற்கெனவே பஞ்சபூதங்களில் வாயு ஸ்தலமான காளஹஸ்தி சிவன் கோயிலில் பரிகாரங்கள் செய் திருக்கிறார் அனுஷ்கா. சமீபத்தில் வடஇந்திய சிவன் கோயில்களுக்கும் சென்று வந்திருக்கிறார்.

இன்னொருபுறம்... பிர பாஸும், அனுஷ்காவும் நேரில் சந்தித்துக்கொள்ளா விட்டாலும் தினசரி பேசிக்கிறாங்களாம் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம்.

ரசிகர்களோ... “"ப்ளீஸ்... ப்ளீஸ்... நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கணும்'’என பிரபாஸுக்கு கோரிக்கைமேல் கோரிக்கை வைத்தபடி இருக்கி றார்கள்.

(பெத்தவங்களவிட பெரிய பாசக்காரப்பயலுகதான் இந்த ரசிகர்கள்

jothika-surya

இதேபோல...

பாலிவுட்டில்... தீபிகா படுகோனேவை காதலித்துப் பிரிந்து... கத்ரினா கைஃப்பை காதலித்துப் பிரிந்திருக்கும் ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் சேர்ந்து நடித்தது ரசிகர்களுக்குப் பிடித்துப்போகவே... ‘"ஆகா... உங்க ஜோடிப் பொருத்தம் சூப்பரா இருக்கு. ப்ளீஸ்... நீங்க ரெண்டுபேரும் லவ் பண்ணுங்க...'’’ என வலைப்பக்கங்களில் ரசிகர்கள் சொல்லிவருகிறார்கள்.

இப்படித்தான்...

ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான பிராட் பிட், நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டனை காதலித்து மணந்து... பின்பு... ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்த போது... காதல் உண்டாகி... ஆனிஸ்டனை அத்து விட்டுவிட்டு... ஏஞ்சு வுடன் இணைந்தார் பிட். நீண்ட கால காதல் கசந்து... ரெண்டு வருடத் துக்கு முன் பிட்-ஏஞ்சு பிரிந்துவிட்டனர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக... மனநல மருத்துவரை சந்தித்த பிட்... “"ஆனிஸ்டனை அத்துவிட்டது நான் செஞ்ச தப்பு'’என புலம்பித்தள்ள... இந்த விஷயம் வெளியில் பரவ ஆரம்பித்ததும்... "பிட்டும், ஆனிஸ்டனும் சேரணும்'’என உலகம் முழுக்க இருக்கிற பிட்டின் ரசிகர்களில் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

பிட்டும், ஆனிஸ்டனும் முதன்முதலில் காதல்வயப்பட்ட போது... அந்தக் காதலுக்கு உதவிய சக ஹீரோவான... (நம்ம வித்யாபாலன், குஷ்பு ஆகியோருக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோவான) ஜார்ஜ் க்ளூனி இப்போதும்... பிட்டும், ஆனிஸ்டனும் மீண்டும் இணைய முயற்சி எடுத்து வருகிறார்.

இருந்தாலும்...

ரசிகர்கள் சொல்றதுக்காக முடிவெடுத்திர முடியுமா? "இங்க என்ன சொல்லுது?'னு மனசக் கேட்டுத்தான முடிவெடுப்பாங்க.

-ஆர்.டி.எ(க்)ஸ்