கை கொடுப்பாரா உதயநிதி?
சிம்புவுடன் "ஈஸ்வரன்', ஜெயம் ரவியுடன் "பூமி' படங்களில் ஜோடி போட்ட நித்தி அகர்வால், பிரபல ஹீரோக்களுடன் பெரிய படங்களில் ஜோடி சேர்ந்ததால் பெரிதாக எதிர்பார்த்தார். ஆனால் பலன் என்னவோ ஜீரோதான். இப்போது உதய நிதியுடன் "கலகத் தலைவன்' படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் நித்தி. "இதில் கிளாமரை விட எனது நடிப்புதான் தூக்கலாக இருக்கும். அதனால எப்படியும் இந்தப் படத்திற்கு பிறகு முன்னணிக்கு வருவேன்'' என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் நித்தி அகர்வால். வாழ்த்துக்கள்... வளருங்கள்!
யோகிக்கு அடித்த யோகம்!
"இம்சை அரசன் 23ஆம் புலிகேசி', "அறை எண் 305ல் கடவுள்', "இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' என வித்தியாசமான காமெடி ஜானரின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சிம்புதேவன். இ
கை கொடுப்பாரா உதயநிதி?
சிம்புவுடன் "ஈஸ்வரன்', ஜெயம் ரவியுடன் "பூமி' படங்களில் ஜோடி போட்ட நித்தி அகர்வால், பிரபல ஹீரோக்களுடன் பெரிய படங்களில் ஜோடி சேர்ந்ததால் பெரிதாக எதிர்பார்த்தார். ஆனால் பலன் என்னவோ ஜீரோதான். இப்போது உதய நிதியுடன் "கலகத் தலைவன்' படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் நித்தி. "இதில் கிளாமரை விட எனது நடிப்புதான் தூக்கலாக இருக்கும். அதனால எப்படியும் இந்தப் படத்திற்கு பிறகு முன்னணிக்கு வருவேன்'' என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் நித்தி அகர்வால். வாழ்த்துக்கள்... வளருங்கள்!
யோகிக்கு அடித்த யோகம்!
"இம்சை அரசன் 23ஆம் புலிகேசி', "அறை எண் 305ல் கடவுள்', "இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' என வித்தியாசமான காமெடி ஜானரின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சிம்புதேவன். இதனிடையே "இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்ட சிம்பு தேவன், முந்தைய படத்தில் நடித்த வடிவேலுவை வைத்து அதன் படப்பிடிப்பையும் தொடங்கினார். ஆனால் வடிவேலுக்கும், இயக்குநர் சிம்புதேவனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
வடிவேலுவை வைத்து மீண்டும் "இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் அடுத்த பாகத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதே ஜானரில் வேறொரு கதையை எடுக்கவுள்ளாராம் சிம்புதேவன். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க மற்றொரு காமெடி நடிகரை புக் செய்துள்ளாராம். அதாவது, தற்போது காமெடியனாகவும் கதாநாயகனாகவும் கலக்கிவரும் யோகிபாபுவுக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளாராம் சிம்புதேவன். இதற்கு யோகிபாபுவும் ஓ.கே. சொல்லிவிட, படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
சல்மானுடன் அட்லீ!
ஷாருக்கானை வைத்து "ஜவான்' படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கவுள்ள அட்லீ, இப்படத்தை தொடர்ந்து, அட்லீ தன்னுடைய ஆதர்ச நாயகன் விஜய்யின் 68-வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளாராம். இந்த படத்தின் பணிகளை முடித்த பிறகு இயக்குநர் அட்லீ மீண்டும், பாலிவுட் பக்கம் திரும்பவிருக்கிறாராம். பாலிவுட்டின் உச்ச நட்சத்திராமான ஷாருக்கானை இயக்கி வரும் அட்லீ, மற்றொரு உச்சநட்சத்திரமான சல்மான்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளாராம். அட்லீ "ஜவான்' பட இடைவெளியின்போதே சல்மான்கானை சந்தித்து கதை கூற... அது சல்மான் கானுக்கு பிடித்துப்போக, உடனே ஓ.கே.வும் சொல்லி, கால்ஷீட்டையும் ஒதுக்கியுள்ளாராம்.
மீண்டும் தல... த்ரிஷா!
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடிக்க... உருவாகிவரும் படம் "துணிவு.' மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்கும் இப்படம், பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பணியை முடித்துவிட்டு, நடிகர் அஜித், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் "ஏகே 62' படத்தில் நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
"ஏ.கே. 62' படத்தில் கதாநாயகியாக நடிக்க படக்குழு த்ரிஷாவை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். "பொன்னி யின் செல்வன்' பட வெற்றிக்குப் பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் உயர்ந்திருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அதர்வாவை இயக்கும் ஐஸ்வர்யா!
தனுஷ் நடித்த "3' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினி காந்த், அடுத்ததாக "வை ராஜா வை' படத்தை இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆவணப் படம், இசை ஆல்பம் என தன் பயணத்தை தொடர்ந்தார். இப்போது மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு படம் இயக்கப்போவதாகவும், அதில் இளம் கதாநாயகன் ஹீரோவாகவும், ரஜினி கேமியோ ரோலில் நடிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.
இப்படத்தில் ஹீரோவாக அதர்வா ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளாராம். கதைப்படி ஒரு இளம் ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் எனவும், அதற்கு அதர்வா பொருத்தமாக இருப்பார் எனவும் எண்ணி அதர்வாவை ஓ.கே. செய்துள்ளாராம் ஐஸ் வர்யா ரஜினிகாந்த். இதற்கான முதற்கட்டப் பணிகள் நடந்துவருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-கவிதாசன் ஜெ.