அமரனில் தாய்நாட்டுக்காக நடித்தவர், தாய் மொழிக்காக தன்னுடைய 25வது படமாக "பராசக்தி'யில் நடித்திருப்பதாகச் சொல்கிறார். வரலாற்று சிறப்புமிக்க சம்பவத்தை புனைவுகளோடு மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் குறித்தும் அதில் பேசப்பட்ட அரசியலையும், அதையும் மீறி தன்னுடைய சினிமா கரியரில் தனக்கு நடக்கும் அரசியல் குறித்தும் நம்மிடையே சிவகார்த்திகேயன் மனம் திறக்கிறார்...
காமெடி, காதல்னு நடிச்சுக்கிட்டிருந்தீங்க. தீடீர்னு இந்தி திணிப்பு, மக்கள் போராட் டம்னு நடிச்சிருக்கீங்க. இந்த இமேஜ் நீங்க பாலிவுட் டுக்கு போனா பாதிக் காதா?
“சிவகார்த்திகேயன்: இதுக்கு பதில் ட்ரெய் லர்லயே வரும். ‘நாங்க இந்தி திணிப்புக்குத் தான் எதிரான வங்க, இந்திக்கோ இந்திக்காரங் களுக்கோ இல்ல. அதேபோல படத்துல இன் னொரு வசனம் வரும். "எந்த ஊருக்கு சோலிக்கு போறோமோ, அந்த ஊரு மொழிய நம்ம கத்துக்கணும். இதுதான் நான் நடிச்ச கேரக்டரோட மனநிலை. இத பார்த்துட்டு அவங்க கூப்பிடமாட்டாங்கன்னு சொல்றதுல்ல அர்த்தமில்ல.”
அண்ணன்-தம்பி பொங்கல்னு சொன்னீங்க... இப்ப சிங்கிளா வந்திருக்கீங்க?
சிவகார்த்திகேயன்: கடந்த ஒரு மாசமா நடந்த எல்லாமே எதிர்பார்க்காத ஒண்ணு. 10 நாள் லீவு இருக்கு. இரண்டு படமும் நல்லா ஓடணும்னு நினைச்சேன். விஜய் அண்ணா, என்னை ஒரு தம்பியாதான் பார்க்குறாரு. நானும் அவர அண்ணனாதான் பார்க்கிறேன். இதுல பல பேருக்கு பல கருத்து இருக்கலாம். அவங்கள திருப்திபடுத்தணும்னு நம்ம நினைச்சோம்னா, நம்ம வாழ்க்கையை வாழவே முடியாது. இப்ப என் மனசுல இருக்குறது, ஜனநாயகன் எப்ப ரிலீஸாகுதோ, அப்ப நல்லா ஓடும்.
சினிமாவுக்குள்ள சமீப காலமா நிறைய அரசியல் இருக்குறதா சொல்றாங்களே?
சிவகார்த்திகேயன்: அது எப்போதுமே இருக்கும். இப்ப வெளில தெரியுது அவ்ளவு தான். அரசியல் தலையீடுன்னு நான் சொல்லல. சினிமாவுக்குள்ளேயே ஒரு அரசியல் இருக்கு. அதை வச்சு ஒரு தனி படமே பண்ணலாம். ஒரு நாள் கதை கரெக்டா அமையும்போது பண்ணுவோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/14/tt1-2026-01-14-17-42-19.jpg)
மொழி உணர்வு இந்த ஜென் சி இளைஞர்கள்கிட்ட இருக்கா?
சிவகார்த்திகேயன்: கண்டிப்பா இருக்கு. அவங்க விளையாட்டா, ஜாலியா இருக்காங்க. ஆனா மொழிக்கான நம் உரிமை, நம்முடைய அடையாளம் எல்லாம் மரபு அணுவுல இருக்கு. இதே கேள்வி தான் ஜல்லிக்கட்டு போராட்டம் அப்போ 90'ஸ் கிட்ஸ் மேல வச்சாங்க. ஆனா அந்த போராட்டத்த அவங்க தான் மக்கள்கிட்ட சேர்த்தாங்க. எப்போ நமது உரிமையும், அடையாளமும் பாதிக்கப்படுதோ, அப்போ கண்டிப்பா அவங்க எழுவாங்க. அது ஜென் சிக்கு மட்டும் கிடையாது, எல்லா காலகட்டத்துக்கும்.
அரசியல் வட்டாரத்துல நீங்க அரசியலுக்கு வர்றதுக் கான ஆரம்ப புள்ளிதான் இந்த படம்னு சொல்றாங்களே?
சிவகார்த்திகேயன்: தாய் நாட்டுக்காக "அமரன்' பண்ணேன். தாய்மொழிக்காக "பராசக்தி' பண்ணியிருக்கேன்... அவ்ளவுதான்.”
சமூக அக்கறையுள்ள கதையில சமீபமா நடிக்கறப்போ ஒரு நடிகரா அது உங்களுக்குள்ள ஏற்படுத்துன மாற்றம் என்ன?
சிவகார்த்திகேயன்: நான் ஆரம்பத்துல இருந்தே சமூக பிரச்சினை சம்பந்தப்பட்ட கதைய டச் பண்ணியிருக்கேன். "எதிர்நீச்சல்' படத்துல ஒரு வீராங்கனைக்கு நடந்த சம்பவத்தை அடிப்படையா வச்சுதான் பண்ணோம். வருத்தப்படாத "வாலிபர் சங்கம்', மிகப்பெரிய நையாண்டி படம். அதேபோல "வேலைக்காரன்' படம் உணவு சம்பந்தப்பட்டது, "ஹீரோ' படத்துல படிப்பு சம்பந்தப்பட்டது... இப்படி ஏதோ ஒரு விதத்துல சமூக அக்கறை இருந்துக் கிட்டுதான் இருக்கு.
இந்த படத்துல உங்களுக்கு தி.மு.க. முத்திரை குத்தப்படுதே?
சிவகார்த்திகேயன்: யார் வேணாலும் எந்த முத்திரை வேணாலும் குத்தலாம். அவங்க குத்துறதுக்கு நம்ம கவலைப்பட முடியாது. "அமரன்' வரும்போது எனக்கு வேற ஒரு முத்திரை குத்துனாங்க. என்னுடைய நோக்கம் நல்லவிதமா இருந்துச்சுன்னா, எதுக்கும் கவலைப்படத் தேவையில்லை.
தொகுப்பு: -கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/tt-2026-01-14-17-42-10.jpg)