"காத்துவாக்குல ரெண்டு காதல்', "விக்ரம்' என விஜய் சேதுபதி நடித்து அடுத்தடுத்து வெளியான இரு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் குஷியில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அவர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸாக வெளியாகியுள்ளது ஒரு புதிய தகவல். அதன்படி, தெலுங்கின் முன்னணி இயக்குநரான த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி முக்கியமான கதா பாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

"சர்காரு வாரி பாட்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குடும்ப உறவுகளை மையமாக வைத்து மகேஷ்பாபு நடிக்கவுள்ள இந்த புதிய படத்தில்தான் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறாராம். ஏற்கனவே தெலுங்கில் "உப்பென்னா' படத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்த நெகட்டிவ் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்ததைத் தொடர்ந்து, இப்படத்திலும் அவரை வில்லனாக நடிக்க வைக்கப் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருகிற தாம். தற்போது "விடுதலை', "மெர்ரி கிறிஸ்துமஸ்', "காந்தி டாக்ஸ்', ’"மும்பைக்கர்'’உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துவரும் விஜய்சேதுபதி... இவற்றிற்கு அடுத்து மகேஷ்பாபுவின் படத்தில் நடிக்க வாய்ப் பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சூப்பர்ஹிட் விக்ரம்!

Advertisment

dd

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் வெளியான "விக்ரம்' நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று சூப்பர்ஹிட் படங்களின் லிஸ்ட்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடிப்பில் வெளியான இந்தப் படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததோடு, பொதுவான சினிமா ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ளது. இந்தச் சூழலில், கமலின் "இந்தியன் 2' படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த "இந்தியன் 2' படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில்... படப்பிடிப்பில் நடந்த விபத்து, கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், ஷங்கரின் வேறொரு புதிய படம் உள்ளிட்ட பல காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து "படம் பாதியில் கைவிடப்படு வதாகவும், படத்தை கமலே இயக்க உள்ளதாகவும்' பல தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, படத்தை ஷங்கரே திரும்ப இயக்கவுள்ளாராம். தற்போது ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கிவரும் ஷங்கர், அதன் பணிகளை முடித்த பிறகு மீண்டும் "இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்தப்போகிறாராம். இத்தகவலை கமலும் ஒரு நிகழ்ச்சியிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

vv

Advertisment

விஜய், "பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் "தளபதி 66' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர். குடும்பக் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை அண்மையில் முடித்த படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளது. இதன் பணிகள் ஒருபுறம் பிஸியாக போய்க்கொண்டிருக்கையில் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் மற்றும் இயக்குநர் "சிறுத்தை' சிவா ஆகிய இருவரும் அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. விஜய்யின் இல்லத்தில் நடத்த இந்த சந்திப்பின் போது, "சிறுத்தை' சிவாவிடம் தனக்காக ஒரு கதையை ரெடி செய்யுமாறு சொல்லியுள்ளா ராம் விஜய். சிவாவின் வழக்கமான கமர்ஷியல் பாணியிலான ஆக்ஷன் கதையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித், ரஜினி ஆகியோரை வைத்து படம் இயக்கியுள்ள சிவா, விரைவில் விஜய்யையும் வைத்து படம் இயக்கலாம் என்ற எதிர் பார்ப்பை இச்சந்திப்பு ஏற்படுத்தி யுள்ளது.

-எம்.கே.