எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி லேட்டஸ்ட்டாக கமல்ஹாசன் வரை அரசியல் பிரவேசம் மேற்கொண்ட சினிமா நட்சத்திரங்கள் ஏராளம். ஆனாலும், இதில் ஒரு சிலரால் மட்டுமே ரசிகர்கள் கூட்டத்தை வாக்குகளாக மாற்ற முடிந்தது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்துவிட்டார். இந்நிலையில், அவருக்கு அடுத்த தலைமுறை நடிகரான விஜய், அரசியலுக்கு வரலாமா என ஆராய்வதற்காக சில சோதனை முயற்சிகளில் ஈடுபடத் துவங்கியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay_93.jpg)
அதன்படி, கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். இதில் பலர் வெற்றியும் அடைந்தார்கள். அப்படி வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில், விஜய் படம், விஜய் மக்கள் இயக்க கொடியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களின் மூலம் ஆழம் பார்க்கும் விஜய், ஒருவேளை இதில் சொல்லத் தகுந்த வெற்றி கிடைத்தால் தனது அரசியல் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தலாம் எனக் கூறப்படுகிறது.
தனுஷின் இந்தியப் பார்வை!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_107.jpg)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘"மாறன்'’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் "நானே வருவேன்'’படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் "வாத்தி' படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.
இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் தனுஷ், "அத்ராங்கி ரே' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக அடுத்ததாக இரண்டு இந்தி படங்களில் நடிக்கவுள்ளாராம். அதன்படி, "ராஞ்சனா' மற்றும் "அத்ராங்கி ரே' படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஆக்சன் கலந்த காதல் படம் ஒன்றிலும், பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளாராம். தற்போதுவரை தமிழ்ப் படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்திவந்த தனுஷ், இனி பான் இந்தியா ட்ரெண்டுக்கு ஏற்றாற்போல படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.
அஜித்தின் பாலிவுட் ஹீரோயின்ஸ்!
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள "வலிமை' திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகலாம் என்று தகவல் வெளி யாகியுள்ள சூழலில், இதே கூட்டணியில் அடுத்ததாக உருவாகும் படத்தின் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டனவாம். எச்.வினோத் இயக்க, போனிகபூர் தயா ரிக்கவுள்ள இப்படத்தில் அஜித் எதிர்மறை குணாதிசயம் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளைக் கவனித்துவரும் படக் குழு, வழக்கமாக அஜித் படங்களின் ஷூட்டிங் நடக்கும் ஹைதராபாத் நகரத்திலேயே இப் படத்திற்கும் செட் போட்டுள்ளதாம்.
இப்படத்திற்கான பிரத்தி யேக செட்டில் விரைவில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகக் கூறப்படும் சூழலில், பூஜையின்போதே படத்தின் தலைப்பையும் அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மேலும், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இந்தி நடிகை தபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. "நேர்கொண்ட பார்வை', "வலிமை' ஆகிய படங்களிலும் பாலிவுட் நடிகைகளே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில், இப்படத்திலும் அதே சென்டிமெண்ட்டை ஃபாலோ செய்கிறதாம் படக்குழு. கடந்த 2000ஆண்டு வெளியான "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தபு நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து 21 ஆண்டுகள் கழித்து இந்த ஜோடி தற்போது மீண்டும் இணையவுள்ளது.
சிவா - சாய்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_77.jpg)
"டாக்டர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து "அயலான்', "டான்' படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக "எஸ்.கே. 20' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இதையடுத்து ராஜ்கமல் ஃபில்ம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க வுள்ளாராம். தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக உள்ள சாய் பல்லவி, தமிழில் "மாரி 2', "என்.ஜி.கே' ஆகிய படங்களில் கதா நாயகியாக நடித்திருந்தது குறிப் பிடத்தக்கது.
-எம்.கே.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/vijay-t.jpg)