விஜய் வாரிசு!

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன்சஞ்சய், லைகா தயாரிப்பில் தனது முதல் படம் இயக்கவுள்ளதாகக் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஹீரோவாக விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக ஜேசன்சஞ்சய் சொன்னதால் அவர் நடிப்பார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் தற்போது த்ருவ் விக்ரம், கவின் உள்ளிட்ட ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். இப்போது துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

cc

Advertisment

டபுள் ஓ.கே!

"இரும்புத்திரை', "ஹீரோ', "சர்தார்' படங்களை இயக்கிய பி.எஸ் மித்ரன், தற்போது மீண்டும் கார்த்தியை வைத்து "சர்தார்' இரண்டாம் பாகத்தை எடுக்க வுள்ளார். இப்படத்தை அடுத்து தெலுங்கு மற்றும் கன்னட பக்கம் போகவுள்ளார் பி.எஸ் மித்ரன். தெலுங்கில் சிரஞ்சீவியிடமும் கன்னடத்தில் கே.ஜி.எஃப் யஷ்ஷிடமும் கதை கூறி ஓ.கே. வாங்கியுள்ளார். "சர்தார் 2' படத்தை முடித்துவிட்டு சிரஞ்சீவி படத்தையும், அதன் பிறகு யஷ் படத்தையும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

இயக்குநர் அவதாரம்!

Advertisment

ஜெயம் ரவி -மோகன் ராஜா கூட்டணியில் வந்த "தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதற்கான பட பூஜை அண்மையில் நடந்தது. இப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஜெயம்ரவியை வைத்தே ஒரு படம் இயக்குகிறார் மோகன்ராஜா. நடனக் கலைஞரை மையமாக வைத்து இப்படம் உருவாகிறதாம். இதற்கிடையில் ஜெயம் ரவி இயக்குநராகவும் அவதாரம் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். யோகிபாபுவை ஹீரோ வாக வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் ஜெயம் ரவி.

நம்பிக்கை ஆனந்தி!

"கயல்' படம் மூலம் பிரபலமான ஆனந்தி, தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக டைட்டில் ரோலில் நடித்துவருகிறார். அவர் நடித்த "கமலி ஃப்ரம் நடுக்காவேரி' நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது லீட் ரோலில் அவர் நடித்து வெளியாகவுள்ள படம் "மங்கை'. இப்படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்ததோடு ஒரு பாடலும் பாடியுள்ளார். இப்படம் தன்னை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லும் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளாராம்.

வெல்கம் ஸ்ரீலீலா!

cc

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம்வரும் ஸ்ரீலீலா, மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக "குண்டூர் காரம்' படத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற குத்து பாடல் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. ஏற்கனவே அவரது நடனம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் இப்பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியிருக்கிறார் ஸ்ரீலீலா. இதையடுத்து அவரது கால்ஷீட்டிற்கு கோலிவுட், சான்டல்வுட், டோலிவுட் என அனைத்து பட வாய்ப்புகளும் வந்து குவிகிறதாம். அதனால் படு பிஸியாக இருக்கும் ஸ்ரீலீலா, தமிழிலும் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார். எனவே கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஸ்ரீலீலா.

-கவிதாசன் ஜெ.