டூரிங் டாக்கீஸ்! வரப்போகிறான் வேள்பாரி!

dd

வரப்போகிறான் வேள்பாரி!

சூர்யா அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளாராம். எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் எழுதிய "வேள்பாரி' நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட வுள்ளதாம். இப்படத்தை சூர்யாவின் "2டி' நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறதாம். ஷங்கர் மற்றும் சூர்யா இருவரும் தங்களது படங்களில் பிஸியாக இருப்பதால், அதன் பணிகளை முடித்த பிறகு இது குறித்து அறிவிப்பு வெளி யாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மதுரையில் நடைபெற்ற ’"விருமன்'’ பட விழாவில் பேசிய சூர்யா, "தமிழர் களின் முக்கியமான அடையாளமாக விளங்கும் நாவல் காவல் கோட்டம்’, "வேள்பாரி'’ என்றும், அதை எழுதிய சு. வ

வரப்போகிறான் வேள்பாரி!

சூர்யா அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளாராம். எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் எழுதிய "வேள்பாரி' நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட வுள்ளதாம். இப்படத்தை சூர்யாவின் "2டி' நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறதாம். ஷங்கர் மற்றும் சூர்யா இருவரும் தங்களது படங்களில் பிஸியாக இருப்பதால், அதன் பணிகளை முடித்த பிறகு இது குறித்து அறிவிப்பு வெளி யாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மதுரையில் நடைபெற்ற ’"விருமன்'’ பட விழாவில் பேசிய சூர்யா, "தமிழர் களின் முக்கியமான அடையாளமாக விளங்கும் நாவல் காவல் கோட்டம்’, "வேள்பாரி'’ என்றும், அதை எழுதிய சு. வெங்கடேசனுடன் இணைந்து ஒரு ப்ராஜெக்ட் தொடங்கி இருப்பதாகவும், அடுத்த மேடையில் இதுகுறித்து சொல்கிறேன்' எனவும் தெரி வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

cc

கெஸ்ட் ரோலில் ரஜினி!

தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ’"3'’படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா. சமீபத்தில் ஐஸ்வர்யா உண்மை கதையை மையமாக வைத்து "ஓ சாத்தி சால்' என்ற காதல் படத்தை இந்தியில் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கு முன்பு தமிழில் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இசைப் பணிகளை அனிருத் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். மற்ற நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினி, தனது இளைய மகள் சௌந்தர்யாவின் "கோச்சடையான்' படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மாளவிகா!

கடந்த 2103 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ’"பட்டம் போலே'’ படத்தின் மூலம் திரைத்துறைக்குக் கதாநாயகியாக அறிமுகமான மாளவிகா மோகனன், ரஜினி நடிப்பில் வெளியான "பேட்ட'’படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து விஜய்யுடன் ’மாஸ்டர், தனுஷுடன் ’மாறன்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். நடிப்பை விட இவர் நடத்தும் போட்டோ ஷூட்டுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக இவர் நடிக்கும் படம் குறித்து எந்தத் தகவலும் வெளியே வராமல் இருந்தது. இந்நிலையில் மாளவிகா மோகனன் மலையாளப் படம் ஒன்றில் நடித்து வருகிறாராம். கடந்த 2017-ஆம் ஆண்டு மலையாளத்தில் மம்மூட்டியுடன் நடித்திருந்த மாளவிகா மோகனன், தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளப் படத்தில் நடித்துவருகிறாராம். இப்படத்தை ஆல்வின் ஹென்றி இயக்க, மேத்யூ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். படத்தில் பெரிய நடிகர்கள் யாரும் ஹீரோவாக இல்லாத நிலையில் மாளவிகா மோகனனின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

cc

விளம்பரத்தில் அள்ளும் அல்லு அர்ஜுன்!

பொதுவாக திரைப் பிரபலங்கள் படம் நடிப்பதோடு விளம்பரங் களில் நடித்து பணம் ஈட்டி வருகின்றனர். அதிலும் பெருநிறுவனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ள நடிகர்களை தங்களின் விளம்பரத்தில் நடிக்கவைக்க கோடிக்கணக்கில் கொட்டித் தர தயாராகவுள்ளன. அந்த வகையில் 5 பெரும் நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் நடிக்க அல்லு அர்ஜுனை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான "புஷ்பா' படம், தென்னிந்திய மொழிகளை தாண்டி வட மாநிலங்களிலும் வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. மேலும் இந்த படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக அல்லு அர்ஜுன் மாறியுள்ளதால், அவரை தங்கள் நிறு வனத்தின் விளம் பரத்தில் நடிக்க வைக்க 5 பெரு நிறுவனங்கள் ரூ.45 கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்துள்ள தாகக் கூறப் படுகிறது.

-அருண்பிரகாஷ்

nkn280922
இதையும் படியுங்கள்
Subscribe