த்ரிஷா இல்லேன்னா... தமன்னா!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான "இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக 2018-ஆம் ஆண்டு அறிவித்தார் இயக்குநர் ஷங்கர். காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க, படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து, கொரோனா ஊரடங்கு, கமலின் அரசியல் பயணம், ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்குமான பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது.

t

Advertisment

தற்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, படப்பிடிப்பைத் துவங்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில்... காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், "படத்தில் நடிக்க முடியாது' என்று வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே அவருக்குப் பதிலாக வேறு கதாநாயகியை நடிக்க வைக்க முடிவெடுத்த படக்குழுவினர், முதலில் நடிகை த்ரிஷாவை இதற்காக அணுகியுள்ளனர். ஆனால், அப்பேச்சுவார்த்தை கைகூடாததால், தற்போது தமன்னாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாம் படக்குழு. கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தையும் தமன்னாவை வைத்து விரைவில் மீண்டும் படமாக்க உள்ளதாம் படக்குழு.

இது சிம்பு காலம்!

Advertisment

simbu

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த "மாநாடு' படம் மிகப்பெரிய வெற்றியடைந்த சூழலில், அடுத்தடுத்து கதை சொல்லக் குவியும் இயக்குநர்களால் திக்குமுக்காடிப் போயிருக்கிறதாம் சிம்பு தரப்பு. தற்போது, "வெந்து தணிந்தது காடு', "பத்து தல', "கொரோனா குமார்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்திவரும் சிம்பு, புதிய படங்களுக்கான கதைகளையும் கேட்டு வருகிறாராம். இதில் இயக்குநர் ராம் சொன்ன கதை ஒன்று சிம்புவுக்கு பிடித்துப்போகவே... "விரைவில் பணிகளை ஆரம்பிக்கலாம்' என்று சொல்லியுள்ளாராம். இதற்கிடையே, இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் "வெந்து தணிந்தது காடு' படம், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறதாம் கவுதம்மேனன் அண்ட் டீம்.

நேரடி ஃபைட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் திரையரங்குகளில் மீண்டும் நேரடியாக மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய ரசிகர் வட்டத்தையும், சொல்லத்தகுந்த அளவு மார்க்கெட்டையும் பிடித்தவர்கள் இவர்கள் இருவரும். அடுத்தடுத்து இவர்கள் இருவருக்கும் படங்கள் வரிசைகட்டி ரிலீஸுக்கு தயாராகிவரும் சூழலில், விஜய் சேதுபதியின் "காத்துவாக்குல ரெண்டு காதல்' படமும், சிவகார்த்திகேயனின் "டான்' படமும் ஒரேநாளில் வெளியாக வாய்ப்பிருக்கிறதாம்.

vv

இரண்டுமே இளைஞர்களைக் கவரும் வகையிலான காதல் கதை என்பதால், இரு படங்களின் குழுவும் தங்களது படங்களை காதலர் தினத்திற்கு திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார்களாம். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள "காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திற்கு டப்பிங் வரை அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில்... சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள "டான்' படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இப்படங்களில் பணிகள் முடிந்து, இவை ஒன்றாக வெளியாகும்பட்சத்தில்... ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ள வாய்ப்புள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் "ரெமோ' படமும், விஜய்சேதுபதியின் "றெக்க' படமும் ஒன்றாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகரான இயக்குநர்!

"காதல் கொண்டேன்' முதல் "நெஞ்சம் மறப்பதில்லை' வரை பல ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் செல்வராகவன், அண்மையில் நடிப்பிலும் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். தனுஷை வைத்து "நானே வருவேன்' படத்தை இயக்கிவரும் இவர், படங்களில் நடிப்பதற்கும் கதைகளைக் கேட்டுவருகிறார். அந்த வகையில், தற்போது "சாணிக் காயிதம்' படத்தில் கதையின் நாயகனாகவும், "பீஸ்ட்' படத்தில் நெகடிவ் ரோலிலும் நடித்துவருகிறார் செல்வராகவன். இப்படத்தின் பணிகளை முடித்தபிறகு தனுஷின் "நானே வருவேன்' படத்தில் அவர் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தற்போது அவர் கமிட்டாகி யுள்ளார்.

அதன்படி, "திரௌபதி', "ருத்ர தாண்டவம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் செல்வராகவன் நடிக்க உள்ளார். இப்படி நடிகராக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் செல்வராக வனிடம், "நானே வரு வேன் படத்தின் அடுத்த அப்டேட் எப்போதான் வரும்..?'' என நேரடி யாகவே கேட்க ட்விட்டர் களத்தில் இறங்கி விட்டனர் தனுஷ் ரசிகர்கள்.

-எம்.கே.