"ஆடுகளம்' டாப்ஸி பாலிவுட்டில் முக்கிய நடிகையாகிவிட்டார். அவர் நடிக்கிற படங்களெல்லாம் ஹிட்டாகிறது. டாப்ஸியின் இந்த வளர்ச்சியால் கங்கணா ரணாவத்திற்கு பாதிப்பாம்.

tt

"கங்கணாவை காப்பியடிக்கும் டாப்ஸி குறைஞ்ச சம்பளத்தில் நடிப்பதால்... வாய்ப்புகள் கிடைக்கிறது' என குற்றம்சாட்டியிருந்த கங்குவின் சிஸ்டர் ரங்கீலா இப்போது "கங்கணாவின் சுருட்டை முடி ஹேர் ஸ்டைலையும் காப்பியடிக்கிறார்' எனச் சொல்ல... "சுருட்டை முடிக்கு கங்கணா காப்புரிமை வாங்கியிருக்காரா என்ன? நான் பிறந்ததுலயிருந்தே எனக்கு சுருட்டை முடிதான்' என பதிலடி தந்துள்ளார் டாப்ஸி.

இந்த விஷயத்தில் டாப்ஸிக்கு சப்போர்ட் அதிகம் இருந்தாலும் இன்னொரு விஷயத்தில் கண்டனம் எழுந்துள்ளது.

Advertisment

"இஸ்ரோ' விஞ்ஞானியாக அக்ஷய்குமார் நடித்திருக்கும் "மிஷன் மங்கள்' பட டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் கார் ஓட்டிப் பழகும் டாப்ஸி... "கியர்' போடுவதாக நினைத்து... அருகே அமர்ந்திருக்கும் பயிற்சி யாளரின் தொடை நடுவே அமுக்க... பயிற்சி யாளர் அலற...

இதற்குத்தான் கண்டனம் கிளம்பி யுள்ளது.

எம்.ஜி.ஆர். பட டைட்டிலா?

Advertisment

சிவகார்த்திகேயன் -"பசங்க' பாண்டிராஜ் -சன் பிக்சர்ஸ் கூட்டணி படத்திற்கு "எங்க வீட்டு பிள்ளை' தலைப்பை பதிவு செய்ய கவுன் சிலுக்கு அனுப்பினர். எம்.ஜி.ஆரின் மாஸ் படமான "எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை தயா ரித்த விஜயா புரொடக் ஷன்ஸ் நிர்வாகம் சிவகார்த்தி படத்திற்கு இந்த தலைப்பைச் சூட்ட எதிர்ப்புத் தெரி வித்து கவுன்சிலுக்கு கடிதம் எழுதியது. இதை கவுன்சிலும் ஏற்றுக் கொண்டது.

இதனால் "நம்ம வீட்டுப் பிள்ளை' என்கிற தலைப்பை படத்திற்கு வைத் திருக்கிறார்கள்.

குலைந்த "மாநாடு'!

சிம்பு-டைரக் டர் வெங்கட்பிரபு கூட்டணியின் "மாநாடு' படம் கை விடப்பட்டுள்ளது. சிம்புவின் கால்ஷீட் குளறுபடியால் பல முறை படப்பிடிப்பு தொடங்குவது தள் ளிப்போன நிலையில்... படத்தை கைவிட் டுள்ளனர்.

keerthi

மகா நடிகை!

"மகாநடி' தெலுங்குப் படத்தில் "நடிகையர் திலகம்' சாவித்ரியாக... அச்சு அசலாய் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தியிருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்திற்காக "சிறந்த நடிகை'க்கான தேசிய விருது கிடைத்துள் ளது.

2018ஆம் ஆண் டிற்கான இந்த விருதுப் போட்டியில் இந்தி திரைப் படங்களும் கன்னடமும் அதிக விருதுகளை பெற்றுள்ளன. தமிழுக்கு ஒரே ஒரு பிராந்திய மொழிப்பட விருதாக "பாரம்' படத்திற்கு தரப்பட்டுள்ளது.

vv

எதிர்ப்பு!

இலங்கைத் தமிழரான கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய்சேதுபதி. இதனால் மகிழ்ச்சியான முத்தையா முரளி தரன்... "கதையை உருவாக்க உதவுவதாகவும்' தெரிவித்தார். ஆனால்... "தமிழராக இருந் தாலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கா தவர்... சிங்கள அரசின் ஆதரவாளர். அவரின் வாழ்க்கைப் படத்தில் விஜய்சேதுபதி நடிக் கக்கூடாது... என எதிர்ப்புகளும் கிளம்பி யுள்ளன. படத்திலிருந்து விலகும் முடிவை விஜய்சேதுபதி எடுக்கலாம்... எனச் சொல்லப்படுகிறது.

-ஆர்.டி.எ(க்)ஸ்