விஜய்யின் "மெர்ஸல்' படம் ஏற்கனவே இங்கிலாந்து சர்வதேச திரைப்பட விருதுப் போட்டியில் ‘சிறந்த வெளிநாட்டுப் படம்’ பிரிவில் விருது வென்றது.

இண்டர்நேஷன் அச்சீவ் மெண்ட் ரெககனைஸன் அவார்ட்ஸின் ‘சர்வதேச சிறந்த நடிகர் விருதுப்’ பிரிவில் "மெர்ஸல்'’விஜய் போட்டி யாளராகியிருக்கிறார். முதல் சுற்றில் பல நாடுகளைச் சேர்ந்த எட்டு நடிகர்களுடன் மோதிய விஜய், இரண்டாம் சுற்றில் ஆறு நடிகர்களுடன் மோதி னார். இறுதிச்சுற்றில் விஜய் உட்பட நான்கு நடிகர்கள் மோதுவதாக போட்டியை நடத்தும் அமைப்பு அறிவித் துள்ளது.

சினிமா ரசிகர்கள் இணையம் வழியாக போடும் ஓட்டின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந் தெடுக்கப்பட்டு... செப்டம்பர் 22-ந் தேதி லண்டனில் விருது வழங்கப்படும்.

"வீரம்', "வேதாளம்'’என வெற்றிக்கோட்டை கட்டிய அஜித்-டைரக்டர் சிவா கூட் டணி மூன்றாவதாக இணைந்த "விவேகம்'’படத்தில் வெற்றியை கோட்டைவிட்டது. "கூட் டணியை மாத்துங்க தல'’என ரசிகர்கள் சொன்னபோதும்... "சிவா மீண்டும் வெற்றியை கொடுத்துவிட்டு வேறு ஹீரோவை வைத்து படம் பண்ணுவதுதான் சரியாக இருக்கும்'’என நான்காவது முறையாகவும் சிவாவுடன், தன் கூட்டணியை வைத்திருக்கிறார் அஜித்.

Advertisment

அதன்படி ‘தீபாவளிக்கு ரிலீஸ்பண்ண திட்டமிடப் பட்டு தொடங்கப்பட்ட "விஸ்வாசம்'’ சினிமா ஸ்டிரைக் காரணமாக லேட்டானதால்... பொங்கலுக்கு ரெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.

சால்ட்- பெப்பர் ஹேர் ஸ்டைல் எனப்படும் வெள்ளை யும் கறுப்பும் கலந்த ஹேர் ஸ்டைலில் ‘"மங்காத்தா' படத்திலிருந்து நடித்து வரும் அஜித்... இந்தமுறை சால்ட் ஹேர் ஸ்டைல், பெப்பர் ஹேர் ஸ்டைல்... என இரண்டு கெட்-அப்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ‘இரட்டத் தல’ ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி... அஜித் ரசிகர் களுக்கு குதூகலத்தை ஏற் படுத்தியுள்ளது.

Advertisment

சமீபகாலமாக ஸ்ரீராக வேந்திரர் பக்தராக மாறி யிருக்கிறார் அஜித். அதனால்... ராகவேந்திரருக்கு உகந்த வியாழக்கிழமை அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக் கிறார்கள்.

"சபாஷ் நாயுடு'’ படத்தை கமல் தொடங்கியதிலிருந்து பல சொந்த சிக்கல்கள் கமலுக்கு. (கமலின் தோழி கௌதமி, கமலை விட்டுப் பிரிந்தது, கமலுக்கு கால் முறிவு... இப்படி.)

இதனால்... அந்தப் படத்தை கமல் கைவிட்டு விட்டார். அரசியல்வாதியாகி விட்டதால் ‘"இந்தியன் -2’ படம் மட்டுமே அவரின் சினிமா டார்க்கெட்...' எனச் சொல்லப் பட்டது. ஆனால் “"நான் என் அப்பாவோடு சேர்ந்து நடித்த முதல் படமான "சபாஷ் நாயுடு'’கண்டிப்பாக வெளி வரும்'’என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

touringtalkies

"ரஜினி-ஷங்கர் கூட்டணியின் "2.ஓ'’இந்த ஆண்டும் வெளியாக சாத்திய மில்லை' எனச் சொல்லப் படுகிறது. "படம் முழுக்க கிராஃபிக்ஸ் பணிகள் செய்யவேண்டியிருக்கிறது. கிராஃபிக்ஸ் பணிகளைச் செய்துவந்த லண்டன் நிறுவனம், சில நிர்வாக நெருக்கடிகளில் சிக்கியிருப்ப தால்... அது சரியாகி, பணிகளை மீண்டும் தொடர மேலும் தாமதமாகும் என்பதால்... அடுத்த வருஷம்தான் வெளியாகும்...' என்கிறார்கள்.

"காலா'’ எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறாததால்... அதன் தயாரிப்பாளர் தனுஷுக்கு சில நெருக்கடிகள். அது... தனுஷ் நடித்து, தயாரித்திருக்கும் ‘"வடசென்னை'’ படத்திற்கும் சில நெருக்கடியைத் தந்ததால்.. அடுத்த மாதம்... விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவிருந்த "வடசென்னை'’படம் அக்டோபர் 17-க்கு தள்ளிப் போயுள்ளது. மூன்று பாகங்களுக்கு திட்டமிட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டு வரும் சிறப்பு இந்தப் படத்திற்கு உண்டு. "தனுஷ், டைரக்டர் வெற்றிமாறன் இருவருக்கும் இந்தப் படம் பெரும் திருப்புமுனையாக அமையும்' என பரபரப்போடு பேசப்படுகிறது இண்டஸ்ட் ரியில்.

-ஆர்.டி.எ(க்)ஸ்