Advertisment

டூரிங் டாக்கீஸ்! கமல் பேனரில் சிவகார்த்திகேயன்!

dd

"டாக்டர்'’ படம் மூலம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது "டான்', "அயலான்', "சிங்கப் பாதை' ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில் "டான்' மற்றும் "அயலான்' படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறாராம்.

Advertisment

kamal

கவுதம் கார்த்திக்கை வைத்து "ரங்கூன்' என்ற படத்தை இயக்கியவரும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் முன்னாள் உதவி இயக்குநருமான ராஜ்குமார், கமல்ஹாசனிடம் ஒரு கதையைச் சொல்லியுள்ளதாகவும், அந்த கதை கமலுக்கு மிகவும் பிடித்துப்போகவே, அதனைத் தானே தயாரிப்பதாக சொன்னதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளாராம். "இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வி

"டாக்டர்'’ படம் மூலம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது "டான்', "அயலான்', "சிங்கப் பாதை' ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில் "டான்' மற்றும் "அயலான்' படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறாராம்.

Advertisment

kamal

கவுதம் கார்த்திக்கை வைத்து "ரங்கூன்' என்ற படத்தை இயக்கியவரும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் முன்னாள் உதவி இயக்குநருமான ராஜ்குமார், கமல்ஹாசனிடம் ஒரு கதையைச் சொல்லியுள்ளதாகவும், அந்த கதை கமலுக்கு மிகவும் பிடித்துப்போகவே, அதனைத் தானே தயாரிப்பதாக சொன்னதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளாராம். "இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் "விக்ரம்' படத்தைத் தயாரித்து நடித்து வருகிறார்.

யக்குநர் விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா இணைந்து "ரௌடி பிக்சர்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரித்த "கூழாங்கல்' படம் அண்மையில் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டி ருந்தது. அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வாங்கிய இப்படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் விருது போட்டியில் கலந்துகொள்வது இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழலில், மார்ச் மாதம் 27-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருது பட்டியலில் போட்டியிடும் 15 படங்கள் கொண்ட இறுதிப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் "கூழாங்கல்' படம் இடம் பெறவில்லை. இதன்மூலம் ஆஸ்கர் போட்டியிலிருந்து "கூழாங்கல்' திரைப்படம் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்னேஷ்சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த பட்டி யலில் கூழாங்கல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் இவ்வளவு தூய்மையான சினிமா வை கொடுத்ததற்காக பி.எஸ். வினோத்ராஜுக்கு நான் நன்றி கூறுகிறேன்'' என தெரிவித்து தனது வருத்தத்தை வெளிப் படுத்தியிருக்கிறார்.

"மாஸ்டர்'’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கும் "பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தில் ராஜு தயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் அடுத்த படத் தில் நடிக்க உள்ளார் விஜய். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் தயாராகும் இப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்க உள்ளதாக தற்போது டோலிவுட்டிலிருந்து தகவல் ஒன்று கசிந்துள்ளது. முதலில், இப்படத் தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியான சூழலில், அது உண்மையில்லை என விளக்கமளித்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தானா அந்த வாய்ப்பை கைப் பற்றியுள்ளாராம். தமிழ், தெலுங்கு என இரு மொழி ரசிகர்களிடை யேயும் ராஷ்மிகா பிரபலமாக இருப்பதால், அது படத்திற்குக் கூடுதல் ப்ளஸ்ஸாக அமையும் எனக் கணக்குப்போட்டு இம்முடிவை எடுத்துள்ளதாம் படக் குழு.

dhanush

Advertisment

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் "மாறன்' மற்றும் ஆனந்த் எல்.ராய் இயக் கத்தில் உருவாகியுள்ள "அத்ரங்கி ரே' படங்களில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது "திருச்சிற்றம்பலம்', "நானே வருவேன்' ஆகிய படங்களில் கவனம் செலுத்திவருகிறார். இப்படங்களின் பணிகளுக்கு இடையே "நேரடி தெலுங்கு படம் ஒன்றில் தனுஷ் நடிக்க இருக்கிறார்' எனச் செய்திகள் உலா வந்த நிலையில்... தற்போது இது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளி லும் ஒருசேர இப்படம் உருவாக உள்ளது. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டில் ஏற்கனவே கால்பதித்துள்ள தனுஷ் தற்போது இப்படம் மூலமாக டோலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

cinema

தெலுங்கில் "சார்' எனவும், தமிழில் "வாத்தி' எனவும் தலைப் பிடப்பட்டுள்ள இப்படத்தைத் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்க, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். அதேபோல சாய் பல்லவி, அனுபமா, மஞ்சு வாரியர் என பல மலையாள ஹீரோயின்களுடன் இதற்குமுன் ஜோடி போட் டுள்ள தனுஷ், இப்படத் திற்காக கேரள நடிகை சம்யுக்தா மேனனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளாராம்.

-எம்.கே.

nkn291221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe