பி..எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் "சர்தார்'. இதில், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் கார்த்தி எதைச் செய் தாலும் அதை பப்ளிசிட்டி செய்து புகழ் அடைகிறார். இப்படி பப்ளிசிட்டி பைத்தியமாக இருக்கும் கார்த்தி, ஒரு போராட் டத்தை கலைக்கச் சென்ற இடத்தில், அதில் கலந்து கொண்ட லைலா மர்ம மான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையை துப்பு துலக்கும் இன்ஸ்பெக்டர் கார்த்தி, அந்த கொலைக்கு பின்னணியில் தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்ட தன் அப்பா சர்தார் இருப்பதைக் கண்டறிகிறார். இதை யடுத்து "இதற்குப் பின்னால் இருக்கும் குடிதண்ணீர் மூலம் ஊழல் செய்து நாட்டையே நிர்மூலமாக் கத் துடிக்கும் கார்ப்ப ரேட்டுக்கும் சர்தாருக்கு மான போராட்டம் என்ன? அதற்கும் போலீஸ் கார்த் திக்கும் என்ன சம்பந்தம்?' என்பதே "சர்தார்' படத்தின் மீதி கதை.
நம் நாட்டுக்கு இப்போது உள்ள சூழ-ல் மிக அவசியமான ஒரு மெசேஜை சிறப்பாக சொல்- கைத்தட்டல் பெற்று மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் இயக்கு நர் பி.எஸ்.மித்ரன். வரும் காலத்தில் குடிநீரின் தேவை எவ்வளவு முக்கியம், பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீர்களால் ஏற்படும் பேராபத்து என்ன? தண்ணீரால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மூன்றாம் உலகப் போர் குறித்து எச்சரித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் இயக்குநர். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பாட்டி-ல் அடைக் கப்பட்ட குடிநீரை வாங்கி குடிப் பதற்கு மக்கள் ஒரு முறை யோசிப்பார்கள். அந்த அளவுக்குப் பாட்டி-ல் அடைக்கப்பட்ட குடிநீரால் ஏற்படும் பேராபத்தையும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும், அதி-ருக்கும் பல திடுக்கிடும் உண்மைகளையும் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
1981ல் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கி வெளிவந்த படம், ‘"தண்ணீர் தண்ணீர்'.’ தண்ணீர் தேவையும், தண்ணீர் அரசியலையும் இன்றி-ருந்து 41 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய படம். அதேபோல் ‘"சர்தார்'’ படம், தண்ணீர் அரசியலைப் பற்றிப் பேசி நம்மை அதன் ஆழம் வரை சிந்திக்க வைக் கிறது.
திரைமறைவாக ஒருவரின் வளர்ச்சியைக் குலைத்து மற்றொருவர் வளர்வதே இங்கு அரசியல் என அர்த்தம் ஆக்கப்பட்டுள்ளது. அதே அரசியலைத்தான் தண்ணீரைக் கொண்டு "சர்தார்' பேசுகிறது. ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடத்தில், உணவுடன் கலந்தது தண்ணீர். அந்தத் தண்ணீரைக் கொண்டு நம்மைப் பெருநிறுவனங்கள் எப்படி ஆட்டி வைக்கிறது என்பதை நாம் ஒரு நிமிடமும் சிந்தித்திருக்க மாட்டோம். இதைத் தாண்டி அதன்மூலம் நாம் அறிந்தே எவ்வளவு கேடுகளைச் சந்திக்கிறோம் என்பதும் கவனிக்கத்தக்கது.
இயற்கையாகக் கிடைத்துக்கொண்டு இருந்த தண்ணீரை இன்று பல நூறு ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். அதுவே தூய நீர் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆற்றுநீர், கிணற்று நீர், மழை நீர் அருந்தி வாழ்ந்துகொண்டிருந்த சமூகத்தை சில பெரு நிறுவனங்கள் பாட்டி-ல் வாங்க வைத்துள்ளது. "இந்தப் பாட்டில் எதனால் ஆனது, அதனால் மக்களுக்கு என்ன ஆனது என்பதில் இருக்கிறது' என்பதே சர்தார் பேசும் தண்ணீர் அரசியல். குறிப்பாகப் படத்தில் வரும், "தண்ணீருக்கு எக்ஸ்பிரி டேட் இல்ல.. ஆனால், அதை அடைக்கும் பாட்டில்களுக்கு எக்ஸ்பிரி டேட் இருக்கு'’எனும் வசனம், "இயற்கையாகக் கெடாத தண்ணீரைத் தரமான தண்ணீர் என்று சொல்- எவ்வளவு தரமற்றதாக மாற்றி நம்மையும் நம்பவைத்து பழக்கப்படுத்தியிருக்கிறது இந்த பெருநிறுவனங்கள்' என்பதைத் தெளிவாகவும் எளிமையாகவும் சொல்-யிருக்கிறது "சர்தார்'.
படத்தில் பி.பி.ஏ. (பிஸ்பெனால் ஏ) எனும் விஷயத்தைப் பற்றி பேசியிருக்கிறார்கள். இது பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படும் பொருட்களில் ஒன்று. இதேபோல், பல வகையான மூலப் பொருட்கள் தேவை. இவைகளில், பிளாஸ்டிக்குகள் தயாரிக்க மூலஆதாரமாக க்ரூடாயில் உள்ளது. இந்த பிளாஸ்டிக் நம் உட -ல் பல நோய் பிரச்சினைகளைக் கொண்டுவருகிறது. பாட்டி-ல் நீர் அடைத்து, அதை சுவையாக்க பல வேதிப்பொருட்களும் நீரில் கலக்கப்படுகிறது. இது புற்று நோய், இதய நோய், நரம்பு சம்பந்தமான பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது. இதைத்தான் "சர்தார்' நம் கன்னத்தில் அறைந்து சொல்கிறது. சாதாரணமாகக் கிடைக்கும் தண்ணீரில் க்ளோரின் கலந்தாலே அது நன்னீராக மாறும். ஆனால், இது இலவசமாக கிடைக்கும்போது பெரும் வியாபாரிகள் அடிவயிற்றில் அடிக்கும். தங்கள் அடிவயிற்றில் ஈரத்துணி போடவேண்டிய நிலை வரக்கூடாது என இதனை மனிதனின் கௌரவத்துடன் சேர்த்து, பணம் கொடுத்து பாட்டி-ல் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வைத்திருப்பதே கௌரவம் என மாற்றப்பட்டுள்ளது.
உலக அளவில் தண்ணீர் பிரச்சனையின் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ள நாடுகள் பட்டிய-ல் இந்தியா 13வது இடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இயற்கையாகக் கிடைத்த நீரை பிளாஸ்டி பாட்டில்களில் அடைத்து உபயோகப்படுத்த ஆரம்பித்த பிறகு நிலத்தடி நீர் கானல்நீராகி இயற்கை வளங்களும், பிளாஸ்டிக்கால் நம் உடல் நலனும் பாழாகி வருகிறது.
-சந்தோஷ் & அறிவு