சமத்துக்குட்டி ஆரா!

ராஷ்மிகா மந்தனா, தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்களே என் "ஆரா'வை என்னுடன் பயணிக்க சொன்னாலும் அவள் வரமாட்டாள். அவள் என்னுடைய ஹைதராபாத் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறாள். உங்கள் அக்கறைக்கு நன்றி. இந்த நாள் உங்களால் மகிழ்ச்சியான நாளாக மாறியது. சிரிப்பை அடக்க முடியவில்லை'' என பதிவிட்டுள்ளார். யார் இந்த ஆரா? அவருடைய தங்கையா என்று நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டாம். ஆரா... அவருடைய செல்ல நாய். அதற்கென்ன இப்போ என்கிறீர்களா? ராஷ்மிகா ஷூட்டிங் செல்லும்போது, "தனது நாய் தன்னை விட்டு இருக்காது. அதனால் விமானத்தில் பிஸினஸ் கிளாசில் தனது நாய்க்கும் சேர்த்து டிக்கெட் போடச் சொல்லி தயாரிப்பாளரை டார்ச்சர் செய்கிறார்' என்று அவருக்கு வேண்டாதவர்கள் கிளப்பிவிட்ட புரளிக்குத்தான் இந்த ட்விட்டர் பதிவாம்.

cinema

Advertisment

ஹிட்டடிப்பாரா கீர்த்தி ஷெட்டி?

சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான "டாக்டர்', "டான்' இரு படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த குஷியில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். அடுத்ததாக பிரின்ஸ், கமல் தயாரிப்பில் ஒரு படம், மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம் என தன்னுடைய லைன்அப்பை டைட்டாக வைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரின்ஸ் உருவாகிவரும் நிலையில், சிவகார்த்திகேயன் லிமடோன் அஸ்வின் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளாராம். ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துவரும் நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்கிறார். தமிழில் ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்துவிட்டால் அடுத்த சில வருடங்களுக்கு கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் தமிழ் இயக்குநர்களிடம் ஆவலாக கதை கேட்கிறாராம் கீர்த்தி ஷெட்டி.

வெயிட்டிங் லிஸ்ட்டில் வாடிவாசல்!

கடந்த 2019-ஆம் ஆண்டு "அசுரன்' என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து இந்திய திரையுலகில் பேசுபொருளான வெற்றிமாறன், சூரியை வைத்து "விடுதலை' படத்தை இயக்கிவருகிறார். "விடுதலை' படத்தை முடித்துவிட்டு "வாடிவாசல்' படத்தை வெற்றிமாறன் கையிலெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு சூர்யா முட்டுக்கட்டை போட்டுள்ளாராம். சூர்யா லைன்அப்பில் "சிறுத்தை' சிவா, ஞானவேல், சுதா கொங்கரா என நீண்ட க்யூ உள்ளது. வெற்றிமாறனுக்காக அவர்களை காக்க வைத்திருந்த சூர்யா, "விடுதலை' பட வேகத்தைப் பார்த்து, இந்த முடிவை எடுத்துள்ளாராம். "சிறுத்தை சிவா, ஞானவேல் படங்களை முடித்துவிட்டு வாடிவாசல் படத்திற்கு வருகிறேன்' என நாசூக்காக வெற்றிமாறனிடம் சூர்யா சொல்ல, அவரும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். தற்போது கிடைக்கும் தகவலின்படி பார்த்தால், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில்தான் "வாடிவாசல்' படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளது.

ஷாருக்கை தூக்கிவிடும் "ஜவான்' அட்லீ!

"ராஜா ராணி' படத்தின் மூலம் அறிமுகமாகி வெறும் நான்கு படங்களிலேயே கேரியர் க்ராப்பில் இமாலய வளர்ச்சி கண்டுள்ள அட்லீ, பாலிவுட் கிங் ஷாருக்கானை வைத்து "ஜவான்' படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்திற்காக 30 கோடிவரை அட்லீக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். படத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள படக்குழு, பட வேலைகளில் மும்முரம் காட்டிவருகிறது. இந்த நிலையில், படத்தின் ஓ.டி.டி. ரைட்ஸ் குறித்து புதிய தகவலொன்று கிடைத்துள்ளது. அதன்படி, "ஜவான்' படத்தின் ரீலிஸிற்குப் பிந்தைய ஓ.டி.டி. உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 120 கோடிவரை கொடுத்து வாங்கியுள்ளதாம். படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்க இரு முன்னணி சேனல்கள் கடும் போட்டி காட்ட, ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையிலேயே தயாரிப்பு நிறுவனம் கணித்த தொகையைத் தாண்டி வியாபாரம் பேசப்பட்டிருக்கிறது. கடைசியாக ஷாருக் நடிப்பில் வெளியான "ஜீரோ' படம் கமர்ஷியலாக ஃப்ளாப் ஆனாலும், "ஜவான்' படத்தின் மீதான இந்த டிமாண்டிற்கு அட்லீயும் முக்கிய காரணமாம். என்னதான் காப்பிகேட் இயக்குநர் என்று ட்ரோல் செய்யப்பட்டாலும், கமர்ஷியலாக ஒரு படத்தை எப்படி ப்ரசண்ட் செய்யவேண்டும் என்பதில் அட்லீ பெருங்கில்லாடி என்கிறார்கள் சினிமா வியாபார சூத்திரம் அறிந்தவர்கள்.

போட்டிக்கு தயாராகும் "வின்னர்-2'!

பிரசாந்த், கிரண், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் 2003-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் "வின்னர்'. படத்தில் கைப்புள்ள கதாபாத்திரத்தில் நடித் திருந்த வடிவேலு காமெடியில் மிரட்டியிருப்பார். படம் வெளி யாகி 20 ஆண்டுகளை நெருங்கிவிட்டாலும் இன்றைக்குவரைக் கும் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் காமெடியாக "வின்னர்' படத்தின் பல காமெடி காட்சிகள் உள்ளன. இந்த நிலையில், "வின்னர்' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் பிரம்மாண்ட மாக உருவாகவுள்ளதாக நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "அந்தகன்' திரைப்படம் ரீலிஸிற்குத் தயாராகிவரும் நிலையில், அடுத்ததாக "வின்னர்' இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த வடிவேலும் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளதால் கைப்புள்ள அட்ராஸிட்டியை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Advertisment

-இரா.சிவா