மிழ் -தெலுங்கு -இந்தி ஆகிய மும்மொழிகளில் "தலைவி' என்ற பெயரில், விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. ஜெ.வாக கங்கனா ரணவத் நடிக்கிறார்.

டீன்ஏஜ் பெண், சினிமா கதாநாயகி, அ.தி.மு.க.வின் கொள்கைப்பரப்புச் செயலாளர், முதலமைச்சர்.... என நான்கு வித தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் கங்கனா ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், "தலைவி' படத்தின் முழு ஸ்கிரிப்டையும் படித்து "நோ அப்ஜெக்ஷன்' கொடுத்து விட்டார். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்திற்கான முன்வேலைகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. ஆனால்... 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்கள் கங்கனா தரப்பில். சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளச் சொல்லி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

இருப்பினும் ஜெ.வின் திரைப்படங்களைப் பார்ப்பது, ஜெ.வின் அரசியல் வீடியோக்களைப் பார்ப்பது, தமிழ் மொழி கற்பது... என ஜெ.வை உள்வாங்கிக்கொண்டிருக்கிறார் கங்கனா.

தீபாவளிக்குப் பிறகு... "தலைவி' படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

Advertisment

னது டாக்டர் கனவை நீட் தேர்வு உருக்குலைத்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை "டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்.' என்ற பெயரில் "பிக்பாஸ்' ஜூலியை அனிதாவாக நடிக்க ஒப்பந்தம் செய்து அறிவிப்பு வெளியானது. முழுக்க புதுமுக டீம் இந்த பட வேலையைத் தொடங்கியது.

"படப்பிடிப்பு தொடங்கும் முன் முழு திரைக்கதையும் எழுத்தில் தர வேண்டும். நாங்கள் சம்மதித்த பிறகே படத்தை எடுக்க வேண்டும்' என அனிதா குடும்பத்தினர் சொல்லியிருந்தனர்.

இதில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு... படக்குழு இரு பிரிவாக பிரிந்து விட்டது.

Advertisment

இரு தரப்புமே "அனிதா எம்.பி.பி.எஸ்.' படத்தை இரண்டு விதமாக எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாம்.

tt

ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஜெ.வாக ரம்யாகிருஷ்ணன் நடிக்க... "குயின்' என்ற பெயரில் வெப்-சீரியலாக எடுத்து வருகிறார் டைரக்டர் கௌதம்வாசுதேவ் மேனன்.

"சிலர் கண்டிஷன் போட்டதால்... கதையில் நிறைய மாறுதலைச் செய்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்' என ஏற்கனவே "டாக்கீஸ்'-ல் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அந்த திருத்தம்...

திரைக்கதையிலிருந்து சசிகலா கேரக்டரை நீக்கியதுடன்... உண்மையும் கற்பனையும் கலந்த கதையாக மாற்றியதுதான்.

ரம்யாகிருஷ்ணனின் கதாபாத்திரப் பெயரும் "சக்தி' என மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில்... ""எங்களின் அனுமதி இல்லாமல் அத்தையின் வாழ்க்கைச் சம்பவங்களை சீரியலாக எடுக்கக்கூடாது'' என ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், கௌதம் மேனனுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த மறைந்த சகுந்தலாதேவி "மனிதக் கம்ப்யூட்டர்' என அழைக்கப்பட்ட கணக்குப் புலி ஆவார்.

பல இலக்க எண்களையும் பெருக்கியோ, வகுத்தோ, கூட்டியோ... கால்குலேட்டரையும் கம்ப்யூட்டரையும் விடவும் விரைவாக கணித்துச் சொல்லி... உலக அரங்கை பிரமிக்க வைத்தார். கணிதமேதை சகுந்தலாதேவியின் வாழ்க்கைக் கதை "சகுந்தலாதேவி -மனிதக் கணினி' என்ற பெயரில் திரைப்படமாகிறது. சகுந்தலாதேவியாக "நேர்கொண்ட பார்வை' வித்யாபாலன் நடித்துவருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மறைந்த பிரதமர் இந்திராகாந்தியாக வெப்-சீரியலில் நடிக்கிறார் வித்யா.

பேட்மிண்டன் விளையாட்டில் உலகச் சாம்பியன் (2019) பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்துவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

"சந்திரமுகி' உட்பட பல தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்த சோனுசூட் இந்தப் படத்தை தயாரிப்பதுடன், சிந்துவின் பயிற்சி யாளரான கோபிசந்த் கேரக்டரிலும் நடிக்க விருக்கிறார்.

சிந்துவாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள். சமந்த ô பெயரும் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில்... ""எனது வாழ்க்கைக் கதை திரைப்படத்தில் சமந்தா நடிப்பதைவிட தீபிகா படுகோனே நடிப்பது சிறப்பாக இருக்கும். காரணம்... தீபிகா முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை என்பதுதான்'' என சிந்து தெரிவித் திருக்கிறார்.

-ஆர்.டி.எ(க்)ஸ்