Advertisment

டூரிங் டாக்கீஸ்! பாலிவுட்டை ஈர்த்த மிஸ்டர் லோக்கல்!

ss

பாலிவுட்டை ஈர்த்த மிஸ்டர் லோக்கல்!

ss

Advertisment

தொடர் ஹிட் படங்களைக் கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இவர் நடிக்கும் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதைத் தொடர்ந்து இவருடன் நடிக்க அடுத்தடுத்த படங்களில் பல முன்னணி நடிகைகளும் புக் செய்யப் பட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகார்த்தி கேயன் தற்போது நடிக்கும் "எஸ்.கே 20' படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மரியா ரியா போஷாப்கா நடித்து வருகிறார். இதையடுத்து கமல் தயா ரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் "எஸ்.கே 21' படத்தில்கூட தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும்

பாலிவுட்டை ஈர்த்த மிஸ்டர் லோக்கல்!

ss

Advertisment

தொடர் ஹிட் படங்களைக் கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இவர் நடிக்கும் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதைத் தொடர்ந்து இவருடன் நடிக்க அடுத்தடுத்த படங்களில் பல முன்னணி நடிகைகளும் புக் செய்யப் பட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகார்த்தி கேயன் தற்போது நடிக்கும் "எஸ்.கே 20' படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மரியா ரியா போஷாப்கா நடித்து வருகிறார். இதையடுத்து கமல் தயா ரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் "எஸ்.கே 21' படத்தில்கூட தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் கியாரா அத்வானி, சிவகார்த்திகேயனுடன் புதிய படம் ஒன்றில் ஜோடி சேரவுள்ளதாக கூறப்படுகிறது. "மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஷ்வின், சிவகார்த்திகேய னை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். அந்த படத்தில் நடிக்கத்தான் கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

dd

கங்கனாவை காப்பாற்றுவாரா இந்திரா?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். பாலிவுட் திரையுலகம் ஒரு முனையில் இருந்தால், கங்கனா ரணாவத் அதற்கு எதிராக மறுமுனையில் இருப்பார். இருப்பினும் அவர்களுக்கு சற்றும் குறையாமல் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருக்கும் கங்கனா தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். ஆனால் சமீபத்தில் கங்கனா நடிப்பில் வெளியான "தாக்கட்' திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. படம் வெளியான 8-ஆவது நாளில் வெறும் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளதாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில இடங்களில் படம் வெளியான 3-ஆவது நாளே திரையரங்கை விட்டு தூக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. கிட்டத்தட்ட ரூ.90 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.5 கோடி கூட வசூல் செய்யாததால் படக்குழு பெரும் அப்செட்டில் இருக்கிறதாம். அதேநேரம் கங்கனா, தனது சினிமா வாழ்க்கையில் மோசமான தோல்வியை தழுவிய இந்த படத்திலிருந்து மீண்டு வரவும், தனது மார்க்கெட்டை உயர்த்தவும், மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளாராம். அதன்படி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை "எமர்ஜென்சி' என்ற பெயரில் இயக்கி நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே இவர் இயக்கி நடித்த "மணிகர்ணிகா' படம் பெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஜுனியர் குஷ்பு!

தமிழ்நாட்டில் சினிமாவிலும் சரி... அரசியலிலும் சரி... வாரிசுகளுக்கு பஞ்சமே இல்லை. அதிலும் திரையுலகில் ஜாம்பவானாக ஜொலித்த பல நட்சத்திரங்களின் வாரிசுகள் அவர்களின் குடும்பத்தினர் போலவே தற்போதும் ஜொலித்துவருகின்றனர். அந்தவகையில் 90-களில் கொடிகட்டிப் பறந்த நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா சினிமா துறையில் என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். இதற்காக லண்டனில் நடிப்புப் பள்ளியில் பயிற்சி முடித்துள்ள அவந்திகா, கூடிய விரைவில் முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாவுள்ளாராம். இவரைப்போலவே, நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் தயாரிப்பாளரும், நடிகருமான ராம்குமாரின் மகன் தர்சனும் விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஏற்கனவே திரையுலகில் சிவாஜி கணேசனின் மகன் பிரபுவும், அவரது மகன் விக்ரம்பிரபுவும் நடிகர்களாக இருக்கும் நிலையில் தற்போது சிவாஜி குடும்பத்திலிருந்து அடுத்து ஒரு வாரிசும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாபலிபுரத்தில் மணப்பந்தல்!

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆண்டுகளுக்குமேல் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் வரும் ஜூன் 9-ஆம் தேதி அன்று திருப்பதியில் திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில்... சில காரணங்களுக்காக திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற வுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்திருமணத்திற்கு 300 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாகவும், அதில் 30 பேர் முக்கிய பிரபலங் கள் எனவும் கூறப்படுகிறது. இதில் ரஜினி, விஜய், அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்களாம்

-அருண்பிரகாஷ்

nkn040622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe