"மீ டூ'’வில் பாடகி சின்மயி கூறிய பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகள் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி... பெருந்தலைகளை உருட்டியிருந்தன.
பல வருடங்களுக்கு முன் தனக்கு நேர்ந்ததாக ஒரு சம்பவத்தை இப்போது சொல்லியிருந்தார் சின்மயி.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி அதிரடியாக ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
""கீழ்த்தரமான விளம்பரத்துக்காக எப்போதோ நடந்ததை, நடக்காததை, நீ சம்மதித்தது... இதெல்லாம் வெளிய கொண்டுவரணுமா? அன்னிக்கி உனக்கு சரிப்பட்டு வந்தது, இன்னிக்கி சரிப்படலேன்னு வெளிய சொல்றது கேவலம். இப்படிச் சொல்றது... உன் குடும்பத்தையும், கணவனையும்தான் புண்படுத்தும். இருபது வருடத்துக்கு முன்னால் நடந்ததச் சொல்றதால... உனக்கு என்ன லாபம்? இது என்ன மாதிரியான டீல்? நான் ஒரு பெண்ணியவாதின்னாலும் இந்த மாதிரி குப்பைகளை ஏத்துக்கமாட்டேன்''’’
-இப்படி, சௌகார் ஜானகி சொன்னார்.
"சௌகார் ஜானகியின் இந்தக் கருத்து தன்னை அழ வைத்துவிட்டது'’’ என சின்மயி தனது கண்டனத்தை தெரிவித்த நிலையில்...
சின்மயியின் கணவரும், நடிகருமான ராகுல் தனது டுவிட்டரில் இதற்கு ஒரு பதிலைப் பதிவு செய்துள்ளார். வலைப்பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், ""சௌகார் ஜானகி போன்றவர்களின் திறமைக்கு மதிப்பளியுங்கள் இளம்பெண்களே. ’"மீ டூ' இயக்கம்’ குறித்து அவர்கள் சொல்வதை ஏற்காதீர்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் கருத்தை இளம் வயதினர் மீது திணித்துவிடுவார்கள். பாதிக்கப்படுபவர்களுக்கு குற்றஉணர்ச்சி தேவையில்லை. பாதிப்பை உண்டாக்கியவர்கள்தான் வெட்கப்படவேண்டும். நீங்கள் உங்களோட பாதிப்பை வெளியில் சொல்ல வெட்கப்படதேவையில்லை. பாதிக்கப்பட்ட உங்களோட காயம் ஆறும் வரைக்கும் காத்திருந்து அதன்பிறகு வெளியே சொல்லுங்கள்...''’-என அட்வைஸ் செய்திருக்கும் ராகுல்... ’’
""சின்மயி போன்ற துணிச்சலான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதற்காக பெருமையாக உள்ளது. பாதிப்பை வெளியே சொன்னதால் சின்மயிக்கும் அவமானமில்லை... எனக்கும் அவமானமில்லை,’’ நான் பெருமைப்படுகிறேன். அவர், அவருக்கு நேர்ந்த துன்பத்தை வெளியே சொன்னதால் அவரும் அவமானப்படத் தேவையில்லை. எனக்கும் எந்த அவமானமும் இல்லை''
-இப்படி தனது கருத்தை டுவிட்டியுள்ளார் ராகுல்.
சமந்தாவிற்கு தெலுங்கில் பின்னணிக் குரல் கொடுத்துவரும் சின்மயியும், அவரின் கணவரும் சமந்தாவின் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். சௌகாருக்கு பதிலடியாக ராகுல் தந்திருக்கும் விளக்கத்தை பாராட்டிய சமந்தா... ""பெண்களைவிட உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்'' என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் தமன்னாவோ... ""சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதாகச் சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை''’எனத் தெரிவித்துள்ளார்.
""சினிமா உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக சில நடிகைகள் "மீ டூ'’குற்றச்சாட்டு சொல்லிவருகிறார்கள். ஒரு படத்தை உருவாக்க எத்தனையோ கோடிகளை செலவு செய்கிறார்கள். அந்த படத்தில் நிறைய நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பந்தப்பட்டிருப்பார்கள். அந்த மாதிரி நேரத்தில், கேவலம்... இப்படி கதாநாயகியை ஆசைக்கு இணங்க அழைப்பார்கள் என்று நான் நம்பமாட்டேன். எனக்கு இதுமாதிரி அனுபவங்கள் ஏற்பட்டது இல்லை. அவ்வளவு பணத்தைப் போட்டு படம் எடுக்கும்போது, இந்த மாதிரி வேலைகள் செய்வார்கள் என்று கற்பனையில்கூட என்னால் யோசிக்க முடியவில்லை''’எனச் சொல்லியுள்ளார் தமன்னா.
"மீ டூ' இயக்கத்துக்கு காரணமாக அமைந்த ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டினால் பாதிக்கப்பட்ட 85 பேரில் ஒருவரான நடிகை ஜேன் டோ சமீபத்தில் கொடுத்திருக்கும் புகாரில்... ""என்னை கட்டாயப்படுத்தி, இயற்கைக்கு முரணாக பாலியல் உறவுவைத்த ஹார்வி... அந்த தருணத்தில்... "ஜெனிபர் லாரன்ஸ் என்னுடன் உறவு கொண்டதால்தான் பெரிய நடிகையாகி ஆஸ்கர் விருது பெறுகிற அளவிற்கு புகழ்பெற்றவராக இருக்கிறார்'’என பெருமையாகச் சொல்லிக்கொண்டார்''’என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை ஜெனிபர் லாரன்ஸ் மறுத்துள்ளார்.
""ஹார்வி வெயின்ஸ்டீனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை நினைத்து என் இதயமே நொறுங்கிவிட்டது. அவருடன் நான் உறவுகொண்டது இல்லை. வேலை நிமித்தமாக பேசியதை தவிர எங்களுக்கு இடையே வேறு எதுவும் கிடையாது. பெண்களைத் தன் வலையில் விழ வைக்க ஹார்வி எனது பெயரை பயன்படுத்தி,‘"என்னுடன் படுக்கைக்கு வந்ததால்தான் அந்த பெண் பெரிய நடிகை ஆனார்'’ என்று கூறி பெண்களை தன் வழிக்கு வரவழைத்துள்ளார்... என்பதற்கு ஜேன் டோ கூறியது ஒரு எடுத்துக்காட்டு''“என தனது மறுப்பில் தெரிவித்துள்ளார் ஜெனிபர் லாரன்ஸ்.
பெரிய நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா "மீ டூ'’வில் பாலியல் ரீதியான புகாரைச் சொன்ன பிறகுதான்... இந்திய சினிமா வட்டாரத்தில் "மீ டூ'’இயக்கம் பிரபலமடைந்தது.
இப்போது தனுஸ்ரீ தத்தா என்ன சொல்கிறாரென்றால்...
""நானாவால் எனது சினிமா வாழ்க்கையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதற்கு பழிவாங்க "மீ டூ'’இயக்கத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன்''’எனச் சொல்லியுள்ளார்.
-?! ?! ?!
-ஆர்.டி.எ(க்)ஸ்