"கடற்கன்னி'ஆன்ட்ரியா!
வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவ ரான நடிகை ஆன்ட்ரியா, இந்தியாவில் முதன்முறையாக கடற்கன்னியை மையமாக வைத்து உருவாகும் படம் ஒன்றில் நடிக்கிறார். மேற்கத்திய சினிமாக்களி லும், கிழக்காசிய சினிமாக்களிலும் கடற்கன்னிகளை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்துள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை இதுபோன்ற படங்கள் வந்த தில்லை. இந்நிலையில், கடற் கன்னிகளை மையமாக வைத்து ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் ஒரு படத்தில் கடற்கன்னியாக நடிக்கிறார் ஆன்ட்ரியா.
"துப்பாக்கி முனை' திரைப் படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கும் இப்படத்தில், பிந்துமாதவி, சுனைனா, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சென்னையில் பிரம்மாண்டமாக செட் அமைத்து படப்பிடிப்பை நடத்திவரும் படக்குழு, கிராஃபிக்ஸ் பணிகளையும் விரைவாகச் செய்துவருகிறதாம். பிப்ரவரி மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து, வரும் கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ள தாம் படக்குழு.
ஓ.டி.டி.யில் "மகான்!'
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் "மகான்'. சிம்ரன், வாணிபோஜன், பாபிசிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ள தாகவும், ஜனவரி 26 அன்று படம் வெளியாக லாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதே விக்ரம் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் விருப்பமாக இருந்தாலும், தற்போதைய கொரோனா சூழல், தயாரிப்பு தரப்பு முடிவால் படம் ஓ.டி.டி.யில் வெளி யிடப்பட உள்ளதாம். கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக இயக்கிய "ஜகமே தந்தி ரம்' படமும் ஓ.டி.டி.யில் வெளியான தென்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி!
"பூமி' படத்திற்குப் பிறகு தற்போது "பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி, அடுத்ததாக "பூலோகம்' படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படும் இப்படம் கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாம்.
ஹீரோவுக்கு இரட்டை வேடம் என்பதால் இரண்டு ஹீரோயின்கள் படத்தில் இருப்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், பிரியா பவானிசங்கர் அதில் ஒரு நாயகியாக நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மற்றுமொரு கதாநாயகியாக விஜய் சேதுபதி நடித்த "கருப்பன்' படத்தில் நடித்திருந்த தான்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளாராம். படத்தின் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் ஸ்ருதி!
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்துவந்த ஸ்ருதிஹாசன், 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தற்போது அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான "க்ராக்', "வக்கீல் சாப்' படங்கள் சூப்பர்ஹிட் அடித்த நிலையில், தெலுங்கில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விறுவிறுப்பாகத் தொடர்ந்துவருகிறார். இதனையடுத்து, தெலுங்கு திரை யுலகில் ராசியான நடிகை என கொண்டாடப்படும் ஸ்ருதிஹாசனை தங்களது படங்களில் நடிக்க வைக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனராம்.
பவன்கல்யாண், மகேஷ்பாபு, ராம்சரண் என இளந்தலைமுறை ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுள்ள ஸ்ருதிஹாசன், தற்போது பிரம்மாண்டமாக உருவாகிவரும் பிரபாஸின் "சலார்' படத்திலும், பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து, சிரஞ்சீவியின் புதிய படத்தில் ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க முயற்சிசெய்து வருகிறதாம் அப்படக்குழு. தற்போது "ஆச்சார்யா' படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி, அடுத்ததாக "லூசிபர்' மற்றும் "வேதாளம்' படங்களின் ரீமேக்கில் நடிக்கிறார். இவற்றிற்கு அடுத்து முன்னணி இயக்குநர் பாபி இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள ஒரு ஆக்ஷன் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகியுள்ளதாம் படக்குழு.
-எம்.கே.