நோ சொன்ன கீர்த்தி!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ், குறுகிய காலத்திலேயே தேசிய விருது வாங்கி திரைத்துறையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்துமுடித்துள்ள கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவியின் "சைரன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே "தேன்' படத்தின் மூலம் பிரபலமான இயக்கு நர் கணேஷ்விநாயக் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள் ளதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் கணேஷ் விநாயகத்திடம் கதை கேட்ட கீர்த்தி சுரேஷ், படத்திற்கு ஓகே சொன்னதாகவும், ஆனால் "சாணிக்காயிதம்' படம் வெளியான பிறகு, இரண்டு படத்திலும் எனது கதாபாத்திரம் ஒரே மாதிரி இருப்பதாக கூறி, கணேஷ் விநாயகத்தின் படத்தை நிராகரித்து விட்டாராம்.

tt

Advertisment

தளபதி-2?

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இதனிடையே மணிரத்னத்தின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், தற்போது ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான 'தளபதி' படம் இருவரின் கரியரிலும் ஒரு முக்கிய படமாக இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ள தாம்.

இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் "ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படமும், பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க டிக் செய்து வைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த இரு படங்களை முடித்த பிறகே மணிரத்னம் படத்திற்கான கால்ஷீட்டை ரஜினி ஒதுக்குவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

வில்லனாகும் ஜீவா!

இயக்குநர் வெங்கட் பிரபு, பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து என்.சி 22 படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது நடிகர் ஜீவா இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையான வில்லன் கதாபாத்திரம் இருப்பதால், படக்குழு பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியாகவும், இறுதியில் ஜீவா இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில், இயக்குநராக வெங்கட் பிரபுவும், வில்லனாக ஜீவாவும் அறிமுகமாகவுள்ளனர்.

வி.சே.வுடன் வடிவேலு!

தமிழ் திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்து, தனக்கே உரித்தான பாடி லாங்வேஜையும், நகைச்சுவை திறனையும் வைத்து ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் வடிவேலு. நகைச்சுவை பாத்திரம் அல்லாது, பல படங்களில் ஹீரோவாக நடித்தும் அசத்தியுள்ளார். சில பிரச்சனைகள் காரணமாக திரைத்துறையிலிருந்து விலகியிருந்த வடிவேலு, கடந்த சில வருடங்களாக மீண்டும் நடித்து வருகிறார். அந்தவகையில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் ஹீரோவாகவும், 'மாமன்னன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தி லும் நடித்துமுடித்துள்ள வடிவேலு, தற்போது "சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்ததாக முழுக்க முழுக்க காமெடி கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள படத்தில் விஜய் சேதுபதியுடன், வடிவேலு இணைந்து நடிக்கவுள்ளாராம். இப்படத்தை "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கு கிறாராம். "ப்ரண்ட்ஸ்', "வின்னர்' தொடங்கி பல காமெடி படங்களில் வடிவேலு நடித்தார் என்றால், படத்தில் ஹீரோவையே ஓவர்டேக் பண்ணிவிடுவார். அதே ஜானரில் இந்த படம் உருவாகவுள்ளதாக சொல்லப் படும் நிலையில், இந்த படமும் வடிவேலின் ஹிட் லிஸ்டில் இணைவது உறுதி என்கின்றனர் வடிவேலுக்கு நெருக்கமானோர்.

-கவிதாசன் ஜெ.