Toruing Talkies! கலக்கல் பாட்டு! கலங்கும் ஆண்கள்!

dd

ட்ரெண்டிங் சாங்!

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள "புஷ்பா' திரைப்படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு குத்து பாடல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தப் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார். தமிழில் ‘"ஓ சொல்றியா... ஓ... ஓ... சொல்றியா?' என்றும், தெலுங்கில் "ஓ அண்டவா..' என்றும் இப்பாடல் தொடங்குகிறது.

f

இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனம் பெற்றுள்ள நிலையில்... இப் பாடலில் உள்ள வரிகள் ஆண் களை வக்கிர புத்தியுள்ளவர்களாக சித்தரிப்பதாக ஆந்திராவைச் சேர்ந்த ஆண்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பொதுவாக சில திரைப்படங்கள் வெளியாகும்போது "பெண்க

ட்ரெண்டிங் சாங்!

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள "புஷ்பா' திரைப்படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு குத்து பாடல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தப் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார். தமிழில் ‘"ஓ சொல்றியா... ஓ... ஓ... சொல்றியா?' என்றும், தெலுங்கில் "ஓ அண்டவா..' என்றும் இப்பாடல் தொடங்குகிறது.

f

இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனம் பெற்றுள்ள நிலையில்... இப் பாடலில் உள்ள வரிகள் ஆண் களை வக்கிர புத்தியுள்ளவர்களாக சித்தரிப்பதாக ஆந்திராவைச் சேர்ந்த ஆண்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பொதுவாக சில திரைப்படங்கள் வெளியாகும்போது "பெண்களை தவறாக சித்தரித்துள்ளனர்' என்று கூறி பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். முதன்முறையாக "ஆண்களை தவறாக சித்தரித்துள்ளனர்' எனக் கூறி, ஆண்கள் அமைப்பு வழக்கு தொடுத்திருப்பதுதான் ஆந்திர நெட்டிசன் கள் மத்தியில் தற்போதைய ட்ரெண்டிங் டாப்பிக்.

டி.ஆர். vs பாரதிராஜா

வெங்கட் பிரபு -சிம்பு கூட்டணியில் உருவான "மாநாடு' திரைப்படம், பெரும் போராட்டத்திற்குப் பிறகே வெளியானது. இந்தச் சூழலில் முந்தையநாள் மாலை, "மாநாடு' திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பு தரப்பு அறிவிக்க, ரசிகர்கள் தரப்பு சோகத்தில் மூழ்கியது. பின், விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு திட்ட மிட்டபடி மறுநாள் காலை படம் வெளியானது. முன்னதாக, "மாநாடு' படத்தின் சேட்டிலைட் உரிமை விற்கப்படாமல் இருந்ததால், ஃபைனான்சியருக்குக் கொடுக்க வேண்டிய தொகை செட்டில் செய்யப்படாமல் இருந்தது. இதனால் வேறு வழியின்றி படத்தின் ரிலீஸை தயாரிப்பு தரப்பு தள்ளி வைக்க முடிவெடுக்க, சிம்புவின் தந்தையும் நடிகருமான டி.ராஜேந்தர் அந்தத் தொகைக்கு உத்தரவாதம் கொடுக்க முன்வந்தார். இதையடுத்து, படம் வெளியானது. அன்றே "மாநாடு' படத்தின் சேட்டிலைட் உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியதால் ஃபைனான்சியருக்குக் கொடுக்க வேண்டிய மொத்த தொகையையும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே செட்டில் செய்துவிட்டார்.

திட்டமிட்டபடி ரிலீஸ், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு என மொத்த படக்குழுவினரும் உற்சாகமாக இருந்த நேரத்தில்... "தங்களிடம் பரிசீலிக்காமல் மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளதாக'த் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் ஃபைனான்சியர் உத்தம் சந்த் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் டி.ராஜேந்தர் வழக்குத் தொடர்ந்தார். டி.ஆரின் இந்தச் செயலால் அதிருப்தியடைந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி "வெற்றிக் கிரீடத்தை மக்களும், உழைப்பும் இணைந்து தலை சூடியிருக்கிறது. கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா?'' என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

cc

இந்த நிலையில், டி.ராஜேந்தரின் இந்தச் செயலை தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும் இயக்குநரு மான பாரதிராஜா கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தங்களது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உத்தரவாதம் தர முன்வந்த நீங்கள், திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் எனக் கூறியிருப்பது மிகத்தவறான முன்னுதாரணம்'' எனக் குறிப்பிட்டு, "ஜாமீன்தாரர் சொத்துக்களுக்கு எப்படி உரிமம் கோரமுடியும்?' என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது வேற லெவல் சீன்!

இந்திய முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதி பிபின் ராவத் விபத்தில் அவருடன் இணைந்து பயணித்த அவரது மனைவி உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது... நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பிபின் ராவத் மரணத்தை கொண்டாடும் வகையில், சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் செயலில் ஈடுபட்டவர் கள் பெரும்பாலும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், பிபின் ராவத் மரணத்தை சிலர் கொண்டாடுவது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக கூறி மலையாள திரைப்பட இயக்குநர் அக்பர்அலி, ஒரு காணொளி வெளியிட்டுள் ளார். அந்தக் காணொளியில் "இனி நான் இஸ்லாமியன் இல்லை; நான் இந்தியன்' என கூறியுள்ளார். இதையடுத்து, அக்பர்அலியும் அவரது மனைவியும் இஸ்லாம் மதத்திலிருந்து விலகி இந்து மதத் திற்கு மாறியுள்ளனர். இந்து மதத்திற்கு மாறியுள்ள அக்பர்அலி, தன்னுடைய பெயரை ராமசிம்ஹன் என மாற்றிக்கொண்டார். அக்பர் அலி முன்னதாக பா.ஜ.க.வின் கேரள மாநில குழு உறுப்பினராக பதவி வகித்ததும், தன்னுடைய பதவியைக் கடந்த அக்டோபர் மாதம் அவர் ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.

-இரா.சிவா

nkn181221
இதையும் படியுங்கள்
Subscribe